செ.கலம்பகம்

செம்மொழிக் கலம்பகம்

அண்டை நாடான இலங்கையில் சகோதர தமிழ் மக்கள் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டு, வேட்டையாடப்பட்ட நிலையில் (2009) தமிழகத்தில் நாம் தேர்தல் திருவிழா கொண்டாடிக் கொண்டிருந்தோம். வாய்ச்சொல் வீரர்களாய், வீரமற்ற பேடிகளாய், கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய், சுயநலச்சேற்றில் உழல்பவர்களாய், நெடு மரங்களாய் நாம் (தமிழகத் தமிழர்கள்) வேடிக்கை  பார்த்திருந்தோம்.

அந்தப் பாவத்துக்கு நமக்கு என்றுமில்லை பரிகாரம்.

அந்தத் துயர நினைவுகளுடன் தமிழ்ச் சமூகம் அமிழ்ந்திருந்த  வேளையில்  தான் 2010 ல் அன்றைய திமுக அரசு கோவையில் செம்மொழி மாநாட்டை நடாத்தியது. தமிழின் தொன்மையைப் பெருமிதத்துடன் முழங்கிய இம்மாநாட்டுக்கு உலக அளவில் பிரமாண்ட விளம்பரம் செய்யப்பட்டது. நிதர்சனத்தில், ஈழத்தில் மடிந்த லட்சக் கணக்கான சகோதர தமிழ் மக்களின் சமாதி  மீது தான் அந்த மாநாடு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வு என்னை மிகவும் சஞ்சலப்படுத்தியது. அந்தக் காலகட்டத்தில் எனது ‘குழலும் யாழும்’ வலைப்பூவில் சமகால விநோதங்களை கண்டிப்பதாகவும், விமர்சிப்பதாகவும் பல ஆக்கங்களை எழுதினேன். அது ஒருவகையில் எனக்கு தனிப்பட்ட மன நிம்மதி அளித்தது. ஆயினும், ஈழத்தில் அதர்மம் நிகழ்ந்தபோது புலம்பிக்கொண்டு நெடுமரமாகக் கிடந்த பாவம் இன்னமும் என்னை சித்ரவதை செய்கிறது.

வலைப்பூவில் வெளியான அந்த ஆக்கங்களை இங்கு மீள் பதிவு செய்வதன் வாயிலாக, உலக அளவில் மாறியுள்ள அரசியல் சூழலில் ஏதேனும் பயன் விளையுமா என்ற அற்ப ஆசையுடன், அவற்றை எனது மதிப்பீடாக இங்கு மீண்டும் தொகுத்திருக்கிறேன். கவிதைகள், கட்டுரைகள், செய்தி விமர்சனங்கள் பலவும் இதில் உண்டு.

காரணம் தெரியாமல் குண்டடி பட்டு செத்த எமது ஈழ சகோதரிகளுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும், போரிட்டு மறைந்த வீரர்களுக்கும்  இந்த ஆக்கங்கள் சமர்ப்பணம்.

-வ.மு.முரளி

———————————————————————————————-

காண்க:

01.  வாழவைக்கும் செம்மொழி

02.  வாழிய செம்மொழி!

03.   பரிதாபிகளே, மன்னியுங்கள்!

04.  தீர்வுகளில் திளையுங்கள்!

05.  செம்மொழி மாநாட்டை நோக்கி…

06.  இன்னும் ‘ட்வென்டி டூ டேஸ்’

07.  நினைவுச் சங்கிலியின் அறுபட்ட கண்ணிகள்

08.  வாழிய செம்மொழி! (மாநாட்டு கீதம்)

09.  பத்திரிகை செய்தி

10.  ‘இன்விட்டேஷன்’ தயார்!

11.  வரையாத ஓவியங்கள்

12.  விருந்தோம்பல்

13.  நெருடல்

14.  பேரணி பொம்மைகள்

15.  பத்திரிகை செய்தி – 2

16.  இதழ்களின் மௌனம்

17.  அது போன வருஷம்…

18.   வேவு விமானம்

19.  பரந்து கெடுக!

20.  குரங்கும் மருந்தும்

21.  இடிபாடுகளை மறையுங்கள்!

22.  மற்றுமொரு வாய்ப்பு…

23.  எல்லோரும் வாங்க!

24.  கண்துடைப்பு நாடகங்கள்

25.  கண்கட்டு வித்தை

26.  நல்ல முகூர்த்தம்

27.  செம்மாந்த கூட்டம்

28.  காற்றுக்குமிழிகள்

29.  திரும்பும் சரித்திரம்…

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: