சிந்தைக்கினிய ஈசனானவன்

20 Feb

றமுமானவன் பொருளுமானவன்
ஆர்க்கும் இன்ப அருவமானவன்.
புறமுமானவன் அகமுமானவன்
பூவினும் மெல்லிய வாசமானவன்.
மறமுமானவன் அருளுமானவன்
மாயமகற்றும் ஞானமானவன்.
நிறமுமானவன் நிர்மலமானவன்
நீதிநாட்டிடும் நியாயமானவன்.
திறமுமானவன் குணமுமானவன்
தீட்சையளிக்கும் குருவுமானவன்.

உறவுமானவன் உண்மையானவன்
ஊழ்வினை எரிக்கும் சோதியானவன்.
துறவுமானவன் துரியமானவன்
தூய்மையின் எளிய உருவமானவன்
பிறவுமானவன் உலகுமானவன்
பீடுயர்த்திடும் வாழ்வுமானவன்.
திறவுமானவன் தின்மையானவன்
தீமையகற்றும் கருவுமானவன்.
கறவுமானவன் கன்றுமானவன்
காரணமான ஈசனானவன்.

வரமுமானவன் வழியுமானவன்
வானவர் போற்றும் வள்ளலானவன்.
மரமுமானவன் மண்ணுமானவன்
மாதரின் தாய்மை உணர்வுமானவன்.
பரமுமானவன் உருவுமானவன்
பாதியைக் கொடுத்த நாதனானவன்.
இரவுமானவன் பகலுமானவன்
ஈடிணையற்ற லிங்கமானவன்.
சிரமுமானவன் அடியுமானவன்
சீர்மிகு வாழ்வின் சிந்தையானவன்.

மீள்பதிப்பு: குழலும்யாழும்

Advertisements

One Response to “சிந்தைக்கினிய ஈசனானவன்”

  1. ரகுநாதன் 24/02/2012 at 6:07 PM #

    அழித்தல் சிவனின் தொழில். அது ஊழ்வினை எனில் யார்க்கும் நன்மையே. உலகின் ஆதியோகி சிவனே. கவிதை நன்று. அருமை முரளி சார்….

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: