பொன்னியின் செல்வனுக்கு முன்….

2 Mar

சரித்திர நாவல் எழுதுவதென்பது பிற புதினங்கள் போன்றதல்ல; சரித்திரத் தரவுகளும்,புதினக் காலத்தின் பேச்சுவழக்கு, வாழ்க்கைமுறை குறித்த கற்பனையும் சரித்திர நாவலாசிரியருக்கு அவசியம். அதுவும், ஏற்கனவே பிரபலமான சரித்திரக் கதைமாந்தர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய புதினம் எழுதுவது சவாலான பணி.

இந்தச் சவாலை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டு இந்த சரித்திர நாவலை எழுதியிருக்கிறார் டாக்டர் எல்.கைலாசம். அமரர் கல்கியின் மிகப் பிரபலமான பொன்னியின் செல்வன் புதினத்தை முன்னூலாகக் கொண்டு, இதனை எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

தமிழக வரலாற்றில் அழுத்தமான முத்திரை பதித்த ராஜராஜ சோழன் மன்னனான கதையே பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனுக்கு முந்தைய காலப்பகுதியில் அதே கதைக்களத்தின் மாந்தர்கள் என்ன செய்தார்கள் என்பதை சரித்திர ஆதாரங்களுடன் புனைவைக் கலந்து எழுதியுள்ள நாவலே, மலர்ச்சோலை மங்கை. பொன்னியின் செல்வனான அருண்மொழியின் தோழன் வந்தியத் தேவன் எவ்வாறு அந்த சரித்திரச் சூழலுக்குள் வந்து சேர்கிறான் என்பதை, இக்கதை விவரிக்கிறது. அவனது வளர்ப்பு அன்னையே மலர்ச்சோலை மங்கை.

சோழர் புகழ் பாடும் நாவலென்ற போதும், பாண்டியர், இலங்கை மன்னர், சாளுக்கியர் குறித்த சம்பவங்களில் அவரவர்களின் நியாயத்துடன் புதினத்தை நடத்துகிறார் ஆசிரியர். மதுரை- வேளூர் யுத்தத்தில் பாண்டிரின் தோல்வியுடன் துவங்கும் புதினம், வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலனைக் காண குதிரையில் வீரநாராயண ஏரிக்கரையில் பயணிப்பதாக முடிகிறது.

இதன் தொடர்ச்சியை கல்கியின் பொன்னியின் செல்வனில் படிக்கலாம். புதிய முயற்சி என்றாலும், அலுப்பின்றி தீராத வேட்கையுடன் புதினத்தைப் படைத்துள்ளதற்காகவே இதனைப் படிக்கலாம்.

***

மலர்ச்சோலை மங்கை:

டாக்டர் எல்.கைலாசம்.

878 பக்கங்கள், விலை ரூ. 335.

வானதி பதிப்பகம்,  23,  தீனதயாளு தெரு,  சென்னை- 17.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: