வாழ்க்கையெனும் ஓடம்…

2 Mar

வாழ்க்கை என்னும் நதி தங்கிச் செல்லும் படித்துறைகள் ஏராளம். காலங்கள் மாறினாலும் நதி தன்போக்கில் பாய்ந்துகொண்டே இருக்கிறது, நீர் வற்றிக் காயும் வரை.

இந்த வாழ்க்கை அனுபவங்களை ஆற அமர அசைபோட்டுப் பார்க்க அனைவருக்கும் நேரம் கிடைத்துவிடுவதில்லை.  அப்படியே நேரம் கிடைத்தாலும் நினைவுகளைத் தொகுத்து வாசிக்கச் செய்யும் வித்தை அனைவர்க்கும் சாத்தியமாவதில்லை. அந்த வகையில் நவீனத் தமிழ்க் கவிஞர் கலாப்ரியாவின் நினைவுகள், படித்துறையில் கால் நனைக்கும் அனுபவத்தை நமக்கு வழங்குகின்றன.

குங்குமம் வாரஇதழில் கலாப்ரியா தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘ஓடும் நதி’ என்ற நூலாக வந்திருக்கிறது.  நூலறுந்து பறக்கும் பட்டம் போன்ற கோர்வையற்ற நினைவுகளை எழுத்தில் வடிப்பது, அதுவும் வாரஇதழுக்குரிய கட்டுமானத்திற்குள் கொண்டுவருவது சிரமம்தான். கவிதையில் வியக்கச்செய்த அளவுக்கு கட்டுரையில் லாவகம் இல்லாவிட்டாலும், கலாப்ரியாவின் நினைவுகள், தொடர்ந்து நம்மை அவருடன் பயணிக்கச் செய்கின்றன.

நெல்லைக்கே உரித்தான மண்வாசனையும், சொலவடையும் பல இடங்களில் மின்னுகின்றன. இக் கட்டுரைத் தொகுதிக்கு மேலும் சிறப்பு சேர்ப்பவையாக நவீனஓவியர் மருதுவின் வண்ண ஓவியங்கள் அழகுடன் மிளிர்கின்றன. பால்ய நண்பர் வண்ணதாசனின் முகவுரை நூலுக்கு மிகப் பொருத்தம்.

மங்கிவரும் கிராமிய வாழ்க்கையும், அருகிவரும் தாய்மொழிக் கல்வியும், பாழாகிவரும் பாரம்பரியமும் கலாப்ரியாவின் கட்டுரைகளில் பகிரப்படுகின்றன. கலாப்ரியா விரால் அடித்த அதே வாய்க்காலை இப்போது காண முடியாமல் போகலாம். ஆனால் வாசகரின் மனக்கண்ணுக்கு ஏற்ப அந்த வாய்க்காலை கற்பனை செய்ய முடிகிறது. வாழ்க்கையே ஒருவகையில் பழங்கதையும் கற்பனையும் தானே?

***

ஓடும் நதி:

கலாப்ரியா (மருதுவின் ஓவியங்களுடன்)

176 பக்கங்கள், விலை 135.

அந்திமழை பதிப்பகம்,  ஜி4, குருவைஷ்ணவி அபார்ட்மென்ட்ஸ், 20 திருவள்ளுவர் நரகர் பிரதான சாலை,  கீழ்கட்டளை,  சென்னை- 600117.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: