அமெரிக்காவின் மறுபக்கம்?

3 Mar

நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தின் அங்கங்கள். சமுதாயத்திலிருந்தது நாம் பெறும் பயன்கள் ஏராளம். அந்த சமுதாயத்திற்கு நாம் என்ன கைமாறு செய்கிறோம்? நம்மைவிட மோசமான நிலையிலிருக்கும் சக மனிதரை கைதூக்கிவிட நாம் ஏதாவது செய்திருக்கிறோமா?

வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் மனிதர்கள் எதிர்கொள்ளும் வெற்றிகள், தோல்விகள், ஏமாற்றங்கள், சங்கடங்கள், ஆச்சரியங்கள் ஏராளம். அத்தகைய நேரங்களில் சக மனிதரை நாம் அணுகும் விதத்தில் தான் மனிதம் மலர்கிறது. வெறும் சமூக விலங்கு அல்ல மனிதன் என்பதை அப்போது தான் உணர முடிகிறது.

மேற்கண்ட சிந்தனைகளே, இந்நூலைப் படித்து முடித்தவுடன் தோன்றின. மனிதர்களிடமுள்ள அன்பு, பரிவு, துணிச்சல், கருணை, தன்னம்பிக்கை, தாய்மை, நேர்மை, பக்குவம், பொறுப்புணர்வு, கொடையுள்ளம் போன்ற உயரிய குணங்களை, இந்நூலில் இடம்பெற்றுள்ள 80க்கு மேற்பட்ட உண்மைக்கதைகளின் மாந்தர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு கதையும் தேர்ந்த சிறுகதை வடிவில் உள்ளது சிறப்பு.

இக்கதைகள் அனைத்தும், துணைத் தலைப்புக்கள், பொன்மொழிகளுடன், நூலாசிரியர்களால் இனிதே தொகுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சுயமுன்னேற்ற எழுத்தாளர்களான நூலாசிரியர்கள், அசாதாரண செயல்களைப் புரியும் சாதாரண மக்களை அவர்களது வாக்குமூலங்களிலேயே மிகுந்த சிரத்தையுடன் நூலாகப் பதிவு செய்திருக்கின்றனர். இந்நூல் உலகம் முழுவதும் 80 லட்சம் பிரதிகள் விற்பனையானது வியப்பளிக்கவில்லை.

போகபூமியான அமெரிக்காவிலும் அற்புதமான மனிதர்கள் இருப்பதை இந்நூல் பதிவு செய்திருக்கிறது. கண்ணதாசன் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்புப் பதிப்பு பாராட்டிற்குரியது. இதே பாணியில், நமது நாட்டிலும் உள்ள அற்புத மனிதர்களின் கதைகளைச் சேகரித்து பதிப்பித்தால் பல பாகங்கள் வெளியிடலாமே?

***

உள்ளத்திற்கு நான்காவது கோப்பை சூப்:

ஜாக் கேன்ஃபீல்டு, மார்க் விக்டர் ஹான்ஸன்,

தமிழில்: அகிலன்.

336 பக்கங்கள், விலை: ரூ. 160,

கண்ணதாசன் பதிப்பகம், 23,  கண்ணதாசன் சாலை,  தியாகராய நகர், சென்னை – 600 017.

Ref: http://www.noolulagam.com/product/?pid=7409

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: