அலுப்பூட்டும் மொழிபெயர்ப்பு

5 Mar

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ இறையியலாளரான ஜோசப் மர்பி, ‘புதிய சிந்தனை’ என்ற ஆன்மிக அடிப்படையிலான சுயமுன்னேற்ற இயக்கத்தைப் பரப்பியவர். “நாம் எதுவாக ஆக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்’ என்பதுதான் இவரது அடிப்படைக் கருத்து.

ஏழ்மையாக இருப்பது பெருமைக்குரியதோ, அதிர்ஷ்டமின்மையோ அல்ல; இயலாமையே என்று கூறும் இவர், நிச்சயமாக இது கடவுளின் விருப்பமல்ல என்கிறார். பலநூறு பிரசங்கங்களில் பல்லாயிரம் மக்களின் வாழ்க்கைக்குத் தூண்டுகோலாக இருந்த ஜோசப் மர்பியின் புதிய சிந்தனை தொடர்பான புத்தகங்களில் இது ஒரு நூலாகும்.

செல்வத்தை அடைய விரும்புபவரையே அது தேடி வரும் என்று கூறும் மர்பி, செல்வத்தையும் வெற்றியையும் அடைய நமது ஆழ்மனதைப் பக்குவப்படுத்துவது எப்படி என்று, உதாரணங்களுடனும் உபதேசங்களுடனும் விளக்குகிறார். பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்தியை ஆன்மா உள்வாங்கிக் கொண்டால், அதைப் பயன்படுத்தி வாழ்க்கையை வளம்பெறச் செய்யலாம் என்பது மர்பியின் அறிவுரை.

எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற வேண்டுமானால், முதலில் அச்செயலில் உறுதியான தீர்மானத்துடன் இறங்க வேண்டும். முடிவெடுக்கத் தயங்குபவர்களால் நல்ல முடிவுகளை அடைய முடிவதில்லை. ஆக்கப்பூர்வமான கற்பனையில்லாத ஒருவரால் மாபெரும் சாதனைகளை நிகழ்த்த முடிவதில்லை என்கிறார் மர்பி.

சுயமுன்னேற்ற நூல்களில் மர்பியின் அணுகுமுறை வித்யாசமாக உள்ளது. தன்னம்பிக்கையுடன் இறைநம்பிக்கைக்கும் இடமளிப்பது இவரது வழிமுறை. இவரது ஆங்கில நூலை நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்திருக்கிறார்.

நல்ல முயற்சி. எனினும், அலுப்பூட்டும் கடினமான மொழிபெயர்ப்பு நடை நூலின் தொடர் வாசிப்புக்கு அணை போடுகிறது என்பதை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

***

.
செல்வத்தையும் வெற்றியையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?
-டாக்டர் ஜோசப் மர்பி

.
 224 பக்கங்கள், விலை: ரூ. 120.

.
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை – 17.

.

Ref:  http://www.noolulagam.com/product/?pid=7408

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: