குருதேவர் குறித்த பதிவுகள்

5 Mar

 
.
இந்தியாவின் சமய, சமூக மறுமலர்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தின் பங்களிப்பு மகத்தானது. அவரது சீடரான சுவாமி விவேகானந்தருக்கு நவீன இந்தியாவின் வடிவமைப்பில் பெரும் பங்குண்டு. இந்நிலையில், தமிழ் இலக்கியத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை ஆராய்கிறது இந்நூல்.
.
சுவாமி  கௌதமானந்தர் உள்ளிட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியர் பலர் அளித்துள்ள பாராட்டுரைகள் நூலின் துவக்கமாக அமைந்துள்ளன. அடுத்துள்ள தொகுப்பாசிரியரின் கட்டுரைகள் இந்நூலுக்கு ஒரு சுருக்கமான வரைபடமாகக் காட்சி அளிக்கின்றன.
.
சுவாமி சித்பவானந்தர், சுவாமி கமலாத்மானந்தர், ஆசிரமத்துத் துறவி பாமதி மைந்தன், சுவாமி விமூர்த்தானந்தர் ஆகியோரின் கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. மகாகவி பாரதி, சுத்தானந்த பாரதியார், ‘அண்ணா’ என். சுப்பிரமணிய அய்யர், ராஜாஜி, கல்கி, கி.வா.ஜகந்நாதன், பி.சி.ஆச்சார்யா, ம.பொ.சிவஞானம், லா.ச.ராமாமிர்தம் ஆகியோரின் கட்டுரைகள் ஸ்ரீராமகிருஷ்ணரின் புகழ் பாடுகின்றன.
.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, கண்ணதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் கவிதைகள் நூலில் பொருத்தமாகக் கோர்க்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் நகுலன் எழுதிய சிறுகதையும் இந்நூலில் உள்ளது.
.
பாரதியியல் ஆய்வறிஞரான பெ.சு.மணி, ஸ்ரீராமகிருஷ்ணர் குறித்து, தமிழில் வெளியாகியுள்ள படைப்புகளை இயந்றவரை திரட்டும் நோக்கில் இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். பாரதியின் ஸ்ரீராமகிருஷ்ணர் தொடர்பான குறிப்புகளை விவரிக்கும் கட்டுரைகள் நூலில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.
.
தமிழ் இலக்கியத்தில் இன்னும் பல படைப்புகளிலும் எழுத்தாளர்களிடமும் ஸ்ரீராமகிருஷ்ணரின் தாக்கம் உள்ளது. பெ.சு.மணியைப் பின்பற்றி, அவற்றையும் தொகுப்பது ஆய்வாளர்களின் கடமை. அதற்கு வழிகாட்டுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

***

.
தமிழ் இலக்கியத்தில் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்
தொகுப்பாசிரியர்: பெ.சு.மணி
.
368 பக்கங்கள், விலை: ரூ. 230
.
பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்கு வீதி,
மயிலாப்பூர், சென்னை- 600 004.
.
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: