வேரை அணுகும் கலை

5 Mar

.

மனிதகுல வரலாற்றை அறிவதில் பெரும் பங்கு வகிப்பவை முற்கால இலக்கியங்களும், அக்கால மக்களின் வாழ்க்கைத் தடயங்களும் தான். அதிலும், இலக்கியங்கள் கூறாத தகவல்களையும் நமக்கு அளிக்க வல்லவை தொல்பொருள்கள். இவற்றை ஆராய்வது தனியொரு துறையாகவே வளர்ந்துள்ளது.

பல்லாயிரம் ஆண்டு கால நாகரிகம் கொண்ட இந்தியாவில் தொன்மைக்கால சான்றுகளுக்கு பஞ்சமில்லை. ஆனால், அந்த ஆதாரங்களின் மீது தீவிர ஆராய்ச்சி செய்து புதிய உண்மைகளைக் கண்டறியும் துடிப்புள்ள, நடுநிலையான அறிஞர்கள் குறைவாகவே உள்ளனர். மக்களும் தொன்மைச் சின்னங்களின் முக்கியத்துவத்தை உணராமல் உள்ளனர். இதன் காரணமாக, பல அரிய கல்வெட்டுகள் சிதிலமடைந்து வருவதைக் காண்கிறோம்.

இந்நிலையில், தமிழக தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த நடன.காசிநாதன் எழுதியுள்ள இந்நூல், சாதாரண மக்களிடமும் தொல்லியல் சான்றுகளின் முக்கியத்துவம் குறித்த அடிப்படை அறிவை விதைப்பதாக அமைந்துள்ளது.

முதுமக்கள் தாழிகள், நடுகற்கள், பானைஓடுகள், பழங்காசுகள், கோவில் ஓவியங்கள், சிற்பங்கள், செப்புச்சிலைகள், கல்வெட்டுக்கள் என, ஒவ்வொரு பழங்காலச் சின்னங்களையும் தெளிவாகப் புரியும் விதமாக விளக்கும் ஆசிரியர், அவை கிடைத்துள்ள இடங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துவகைகளை ஆராய்ந்து தொன்மைத்தமிழ் எழுத்து எப்படி இருந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது நூலின் இரண்டாவது கட்டுரை.

தொன்மைத் தமிழ்க் கல்வெட்டுக்களில் பிராகிருத மொழியின் பங்கு, தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுக்கள், சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் கொலை தொடர்பான சதியை அம்பலப்படுத்தும் உடையார்குடி கல்வெட்டு என, தொல்லியல் ஆய்வையும் சுவையுடன் படிக்கத் தக்க நூலாகத் தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலைப் படித்தவுடன், நாம் அடிக்கடி காணும் கோவில் கல்வெட்டுக்களை அணுகிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதே, இந்நூலின் வெற்றி. வரலாறு, மானுடவியல், சமூகவியல், தொல்லியல் ஆர்வலர்களும் மாணவர்களும் படிக்க வேண்டிய நூல் இது.

***

தமிழக வரலாற்றுத் தடயங்கள்

நடன காசிநாதன்

120 பக்கங்கள், விலை: ரூ. 125

அருள் பதிப்பகம்,

66 பெரியார் தெரு,

எம்ஜிஆர்.நகர், சென்னை, 600 078. 
 .

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: