ஆன்மிக விருந்து

5 Mar


சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தால் நடத்தப்படும்  ‘அம்மன் தரிசனம்’ மாதஇதழ் வெளியிட்டுள்ள தீபாவளி மலர், ஆன்மிகநேயர்களுக்காகவே தயாரானதாக உள்ளது. சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் அருளுரையுடன் மலர் துவங்குகிறது. முன்னவரான அபிநவ வித்யாதீர்த்த மஹா சுவாமிகளின் பூர்வாசிரமக் கதை – தலைசிறந்த ஜீவன்முக்தர்- நெக்குருகச் செய்கிறது.

சுவாமி கமலாத்மானந்தரின் “தவத்தின் மேன்மை’, பருத்தியூர் கே. சந்தானராமனின் ‘தீபாவளியின் சிறப்பு’, பிரேமா நந்தகுமாரின் ‘சிவபெருமான் திருமும்மணிக்கோவை’ கட்டுரைகள் மலருக்கு அணி சேர்க்கின்றன. மு.ஸ்ரீனிவாசன், பி.என்.பரசுராமன், டாக்டர் எஸ்.ராமரத்னம், பாரதிகாவலர் கே.ராமமூர்த்தி, சுப்பிரமணிய சிவாச்சார்யா, கவிமாமணி மதிவண்ணன் போன்ற ஆன்மிக எழுத்தாளர்களின் படைப்புக்கள் மலருக்கு மணம் சேர்க்கின்றன.

ஸப்தபதிக்கு காரணமான சத்யவான் சாவித்திரியின் கதை இனிமை. சரஸ்வதி நதியின் தோற்றத்துக்குக் காரணமான இந்திரனின் வஜ்ராயுதம் கதை பலர் அறியாதது. விட்டுக் கொடுத்த ஆழ்வார்கள் கதை அற்புதம். ராமாயணத்துடன் தொடர்புடைய தமிழக சிவத்தலங்கள், பெண்களின் தர்மங்கள், நகரத்தார்கள் அறப்பணியும் கோவில்களும், அம்பிகையும் ஆசார்யரும், நால்வகை இலக்கியங்கள், ப்ரவசன மகிமை – போன்ற கட்டுரைகள் அனைவரும் படிக்க வேண்டியவை.

குரு- சிஷ்ய சம்வாதம் போலமைந்த ஆன்மிகக் கட்டுரைகள் அருமை. எட்டுவிதத் திருமணங்களின் தாத்பரியத்தையும், திருமண நிகழ்வுகளின் அடிப்படையையும் விளக்குகிறது திருக்கல்யாணம் கட்டுரை. உஜ்ஜயினி இந்தூர் யாத்திரை, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில், மதுரை முக்தீஸ்வரர் கோவில் போன்ற கட்டுரைகள் ஆன்மிகச் சுற்றுலா அன்பர்களுக்கு மிகவும் உதவும்.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வர்ணமாலா ஸ்தோத்திரம், இழந்த வளத்தைத் திரும்பப் பெற இந்திரன் மகாலட்சுமியைத் துதித்த இந்த்ரக்ருத ஸ்ரீஸ்துதி, தமிழில் பொருளுணர்ந்து பாடும் வகையில் மொழிபெயர்க்கப்பட்ட ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் ஆகியவை இம்மலரின் தனிச்சிறப்புக்கள்.

மொத்தத்தில், ஆன்மிக அன்பர்கள் போற்றிப் பாதுகாக்கும் பெட்டகமாக வெளிவந்துள்ளது அம்மன் தரிசனம் தீபாவளி மலர்.

***

அம்மன் தரிசனம்- தீபாவளி மலர் 2011

372 பக்கம், விலை: ரூ. 100

.

அம்மன் தரிசனம் பப்ளிகேஷன்ஸ்,

சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமம்,

21/11, வெங்கட்நாராயணா சாலை,

தி.நகர், சென்னை- 600 017.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: