ஞானோதயம்

15 Mar

அவலம் பேரவலம் தான்.
இதை –
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
கவிதைகளால் கண்டிக்க முடியாது.
மாநாடுகளால் மறைக்க முடியாது.

பேரவலம் என்பது நிகழ்வதல்ல-
நிகழ்வதைக் கண்டுகொண்டிருப்பது;
கண்டும் காணாமல் இருப்பது.
கண்மூடி முகம் திருப்புவது.
இதற்கு –
சலுகைகளால் சமாதி கட்ட முடியாது.

பேரவலம் தவிர்க்க முடியாததல்ல.
அதிகார பீடங்கள் உண்மையை மறுப்பது;
ஆணவக்காரர்கள் ஆர்வத்தில் விளைவது.
-இதனால்
அமைதியை நிலைநாட்ட முடியாது.

பேரவலங்கள்
மறைக்க முடியாதவை;
மறுக்க முடியாதவை;
மன்னிக்க முடியாதவை.
அலங்கார அறிவிப்புகளால்
மனப்புண்ணை ஆற்ற முடியாது.
உபதேசங்களால் யாரையும்
திருத்தவோ, திருந்தவோ செய்ய முடியாது.
இதனை –
எழுதுவதாலும் யாரும்
நிம்மதி பெற்றுவிட முடியாது…

மீள் பிரசுரம்: ஈழக் கவிதைகள்

.

Advertisements

One Response to “ஞானோதயம்”

  1. தமிழன் 06/04/2012 at 3:05 PM #

    கவிதை நன்று. உள்ளத்தில் இருக்கும் ஆற்றாமை ஆவேசத்துடன் வெளிப்பட்டிருக்கிறது. என்ன எழுதி என்ன பயன்? நமது ஈழ சகோதரர்கள் பட்ட துயரம் மறைந்துவிடவா போகிறது?
    -தமிழன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: