நெருடல்

11 Apr

செம்மொழி மாநாட்டை நோக்கி…8

அலங்கார ஊர்திகள்
அணிவகுக்கின்றன-
செம்மொழிப் பேரணியில்.

ஐவகை நிலங்கள்
கடையெழு வள்ளல்கள்
சங்கப்புலவர்கள்
முப்பெரும் வேந்தர்கள்
காப்பியக் காட்சிகள்
வரலாற்று நிகழ்வுகள்
சமூக மாற்றங்கள்
எல்லாவற்றையும்
சித்தரிக்கும்
‘இனியவை நாற்பது’
அணிவகுப்பு.

எனினும் ஒரு நெருடல்-
புறநானூற்றுத் தாயின்
மறக்களக் காட்சி
சமீபத்தில் நிகழ்ந்த
‘இன்னா நாற்பது’ அல்லவா?

இனியவை நினைக்க…
இன்னா மறக்க…
இது தானே நமது
செம்மொழிப் பண்பாடு?

.

-மீள்பதிவு: குழலும்யாழும்  (08.06.2010)

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: