இந்தியத் தத்துவ சாரம்

11 Jun

இந்திய தத்துவ ஞான நூல்களில் முக்கியமானது பிரம்ம சூத்திரம். வேதங்களை விளக்க வந்த உபநிடதங்களின் கருத்துச்செறிவே  பிரம்ம சூத்திரமாக அமைந்துள்ளது. பல்வேறு உபநிடதங்களில் காணப்படும் முரண்பாடான கருத்துக்களை  விளக்கி ஒருங்கிணைக்கவே இந்நூல் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாதராயணரால் கிமு. 2ம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சூத்திர வடிவிலான இந்நூலுக்கு சங்கரர், ராமானுஜர்,  மத்வர் முதலான பெரியோர்கள் விளக்க உரை எழுதி உள்ளனர்.

இதில் சங்கரர் உரையை அடிப்படையாகக் கொண்டு, பி.எஸ்.ஆச்சார்யா எளிய தமிழில் எழுதியுள்ள நூல் இது. பிரம்ம  சூத்திரங்களின் சமஸ்கிருத வடிவம் அப்படியே தமிழில் அளிக்கப்பட்டுள்ளது.

பரம்பொருளான பிரம்மத்தை அறிவதே பிரம்ம சூத்திரத்தின் நோக்கம். வேதத்தின் இறுதிப்பகுதியாகக் கருதப்படுவதால்,  வேதாந்த சூத்திரம் என்ற பெயரும் இதற்குண்டு. இந்நூலின் 550 சூத்திரங்களுக்கும் பாமரர்களும் புரிந்துகொள்ளும் விதமாக விளக்கம்  அளிக்கப்பட்டுள்ளது. தவிர, ஒப்பீட்டு நோக்காக, பகவத்கீதை, உபநிடதங்கள், சித்தர் பாடல்களிலிருந்து ஆங்காங்கே மேற்கோள்கள் காட்டப்பட்டிருப்பது சிறப்பு.

பிரபஞ்சத் தோற்றம், பிரம்மம், மனிதப்பிறவி, மரணம், இறப்புக்குப் பிந்தைய நிலை, முக்தி எனப் பல விஷயங்களை இந்நூல் அலசுகிறது. ஆன்மிக, தத்துவ நாட்டமுள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் இது; பரிசளிக்க ஏற்ற வகையில் நேர்த்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

***

ஞானத்தின் நுழைவாயில்: பிரம்ம சூத்திர விளக்க உரை: -பி.எஸ்.ஆச்சார்யா

400 பக்கங்கள், விலை: ரூ. 175

நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை- 600 017.

போன்: 044-2433 6313.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: