பாரதி குறித்து ம.பொ.சி…

21 Nov


விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம், மகாகவி பாரதியாருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அவர் நடத்திய ‘செங்கோல்’ வார இதழில் வெளிவந்த கட்டுரைகள் இவை.

பல்வேறு கோணங்களில் பாரதியின் பாடல்களை ஆராய்ந்து தான் கண்ட முடிவுகளை இத்தொகுப்பில் வெளியிட்டிருப்பதாக, முன்னுரையில் ம.பொ.சி. குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதைகள் மட்டுமல்லாது, அவரது கதை, கட்டுரைகளிலிருந்தும் பல மேற்கோள்களை தனது ஆய்வுக் கட்டுரைகளில் சுட்டிக் காட்டுகிறார். இக்கட்டுரைகள் அனைத்தும், பாரதி இலக்கியச் சுவையைப் பருகிய களிப்பில் மிளிர்கின்றன.

குறிப்பாக, நூலின் முதல் கட்டுரையான ‘தெய்வ வள்ளுவரும் தேசியகவி பாரதியும்’ கட்டுரை அற்புதம். வள்ளுவரிலும் பாரதியிலும் தோய்ந்த ஒருவரால் தான் இவ்வளவு ஒப்புமைகளை வெளிப்படுத்த முடியும்.  ‘பாரதியார் கண்ட மகாகவிகள்’ கட்டுரையிலும் அறிஞரின் ஆய்வுத்திறன் ஒளிர்கிறது. கம்பனையும் இளங்கோவையும் பாரதி ஆழக் கற்றறிந்தவர் என்பதற்கு இக்கட்டுரையே ஆதாரம்.

‘பாரதியாரும் பாரதிதாசரும்’ கட்டுரையில், பாரதியின் அரசியல் விடுதலைக் கொள்கைக்கு வாரிசாகச் செய்துகொள்ள பாரதிதாசன் தவறிவிட்டார் என்று மதிப்பிட்டிருப்பது ம.பொ.சி.யின் நேர்மைத் துணிவுக்கு உதாரணம்.

இந்நூலில் உள்ள  ‘காலத்தை வென்ற கவி, பாரதி படைத்த பாரதீயம், பாரதியாரிடமும் முரண்பாடா? பாரதியாரும் சிதம்பரனாரும்’ போன்ற கட்டுரைகள் தமிழ் ஆர்வலர்களுக்கு என்றும் திகட்டாதவை. எனினும், நூலில் அதிகமாகக் காணப்படும் எழுத்துப் பிழைகள் நெருடலை ஏற்படுத்துகின்றன. தமிழுக்காகவே வாழ்ந்த பெரியோர் குறித்த நூலில் இத்தகைய பிழைகளைத் தவிர்ப்பது நமது கடமையல்லவா?

***

பாரதியாரின் பாதையிலே!

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்,

136 பக்கங்கள், விலை: ரூ. 75.

வெளியீடு: ம.பொ.சி. பதிப்பகம்,
4/ 344ஏ, சீ ஷெல் அவென்யூ, அண்ணாசாலை,
பாலவாக்கம்,  சென்னை- 600 041.
தொலைபேசி: 94441 92051.

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: