ஒரு பாவையின் முதல் பார்வை

3 Dec

eye

ஒருமுறை தானவள் பார்த்தாள்- நேர்
இருவிழியால் எனைப் பார்த்தாள்!
கருவிழி மின்னிடக் கண்டாள் – நான்
உருகிட ஒரு வழி கண்டாள்!

அவளது பார்வையில் தெளிவு -என்
மனதினில் ஒருவகை நெளிவு!
அவள்மனம் நிர்மல வெண்மை -எனைத்
துவண்டிட வைத்திடு வன்மை!

அவள் முகத்தினில் பூத்தது வியப்பு – அதன்
கூடவே மெல்லிய நகைப்பு!
அவள் கரத்தினில் ஒருவகை தவிப்பு- மேல்
ஆடையின் மேலொரு இழுப்பு!

என் முகமதில் ஒரு தடுமாற்றம்- அதை
உணர்ந்தவள் செய்கையில் மாற்றம்!
தன் சுடர்விழி தாழ்ந்ந்திடச் செய்தாள்- என்
மனதினில் இச்சையைப் பெய்தாள்!

செறிந்திடு பொருளினைச் சுட்டும்- எழில்
முழுவதும் கண்களில் வெட்டும்!
அறிந்திட மாட்டாள் கன்னி – அவள்
உருவம் மலர்ந்தது என்னில்!

பருவம் அரும்பிய காலம் -அவள்
பார்வையில் எத்தனை ஜாலம்!
விரவும் வாலிப வேகம்- நடுப்
பாலையில் செல்பவன் தாகம்!

கருவிழியால் அவள் சுழித்தாள் -மனக்
கவலைகள் யாவையும் பழித்தாள்!
மருண்டிடு மானெனப் பார்த்தாள் – என்
மனதினில் காதலை ஆர்த்தாள்!

மறுமுறை அவள் நிலம் பார்க்க -என்
மனதினில் ஆசைகள் வேர்க்க,
ஒருமுறை திரும்புவள் என்று – நான்
பலமுறை விரும்பியதுண்டு!

இளமையில் அவளொரு மலரே -அதில்
அடி பணியாதவர் இலரே!
வளமையை உடலினில் கண்டேன் – மன
வன்மையைக் கண்களில் கண்டேன்!

பார்வையில் இருக்குது மாயம் – பல
வீரரை வீழ்த்திடும் தாயம்!
பார்வையில் பட்டிடும் காயம் – இந்தப்
பருவத்தே பயிரான நேயம்!

மீள்பதிவு: மலரும் வண்டும்

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: