காரமடை அரங்கன் காத்தருள்க!

3 Mar

காரமடைஅருள்மிகு அரங்கநாத சுவாமி

காரமடை
அருள்மிகு அரங்கநாத சுவாமி

கருடனுக்கு மணக்கோலம் காட்ட
பெருமாள் தேர்ந்தெடுத்த தலம்…
கருணையுடன் காத்திருந்தது
யுகங்கள் மாறியும் அவரது தவம்.

சுயம்புவாய்த் தோன்றிய இறைவன்
காரைவனத்தில் புதைந்திருந்தார்…
காலவெள்ளத்தில் அமிழ்ந்திருந்தார்;
மண்ணுக்குள் கனிந்திருந்தார்.

காராம்பசு பால் சொரிந்து
கடவுளை நமக்கு காட்டிக் கொடுத்தது.
இறைவனை அறிய அறிவு
தடையல்ல என்று சாற்றிக் கொடுத்தது.

புதருக்குள் கிடந்த பரந்தாமன்
இடையனின் மண்வெட்டியால்
சிறுகாயம் பட்டார்-
என்றும் மாறாத வடுவும் பெற்றார்.

குருதி வழிந்த சதுரப் பாறை
‘காரைமடை’யின் அரங்கன் ஆனது.
வனவாசி பழங்குடி மக்களின்
வழிபடு தெய்வம் பொதுவாய் ஆனது.

மலையப்பனின் மறு அவதாரமாய்
மக்கள் உணர உயர்ந்தது கோவில்.
பெட்டத்தம்மன் நாயகியாகிட
அற்புதம் நிகழ்த்துமó ஆலயமானது.

இங்குள்ள தாசர்கள் பக்தியின் சின்னம்
மாசிமகத் தேரோ ஒற்றுமைச் சின்னம்
கவாள சேவையும் பந்த சேவையும்
என்றும் அழியா பாரம்பரியச் சின்னம்.

எங்கும் இருக்கும் இறைவனுக்கு
காரமடையில் அரங்க நாமம்.
இங்கு வரும் அடியவருக்கு
ஆசியளிக்கும் ராமபாணம்.

நல்லவை ஓங்க, நலிவுகள் ஒழிய,
எல்லாம் வல்ல இறைவன் காக்க!
பாரதம் சிறக்க, பண்புகள் மிளிர,
அரங்கன் அருள்க! அரங்கன் அருள்க!

.
– தினமணி
காரமடை அரங்கநாதர் தேர்த் திருவிழா சிறப்பு மலர் (25.02.2013)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: