சிரிக்கச் செய்யும் முயற்சி

3 Sep

VAMBU

நகைச்சுவை உணர்வு நமது மன இறுக்கங்களைத் தளர்த்தும் ஆற்றல் மிக்கது. கடுமையான விஷயங்களையும் கூட நகைச்சுவையுடன் கூறினால், அதில் தொடர்புள்ளவர்களே தன்னை மறந்து சிரித்துவிடுவர். எந்த ஒரு நிகழ்வையும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு கடந்துவிட்டால், மனவேதனையிலிருந்து தப்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நகைச்சுவையை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு இந்த நூலை எழுதி இருக்கிறார் ஜே.எஸ்.ராகவன்.

சுமார் 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதிவரும் நூலாசிரியர், சென்னையில் வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகைகளான மாம்பலம் டைம்ஸிலும், அண்ணாநகர் டைம்ஸிலும் எழுதிய தமாஷா வரிகள் எனும் தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓவியர் நடனம் வரைந்துள்ள படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.

இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமாக எழுதப்பட்டிருந்தாலும், நகைச்சுவையே ஆதார சுருதி. சில கட்டுரைகளில் சமகால அரசியலை நையாண்டி செய்திருப்பதில் ஆசிரியரின் அனுபவம் பளிச்சிடுகிறது. சில கட்டுரைகள் சிரிக்கவைக்கவென்றே வம்புக்கு எழுதப்பட்டுள்ளதையும் கூறியாக வேண்டும்.

அண்டை அயலாரின் வம்புச் செய்திகளை ஆவலோடு எதிர்நோக்கும் மத்தியதர குடும்பப் பெண், மனைவியின் குரலுக்கு மறுபேச்சில்லாத பரமசிவம், மறதியால் தடுமாறிய மாதுஸ்ரீ எனப் பலரை அறிமுகம் செய்யும் போக்கில், சிரிப்பை வரவழைக்க தீவிரமாக முயல்கிறார். படிக்கலாம், சிரிக்கலாம்…

(தினமணி- 02.09.2013)

***

வம்புக்கு நான் அடிமை

ஜே.எஸ்.ராகவன்

200 பக்கங்கள், விலை: ரூ. 90.

அல்லயன்ஸ் கம்பெனி,
244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை- 600 004. தொலைபேசி: 044-2461314.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: