இறப்புக்குப் பிந்தைய வாழ்க்கை

31 Mar

REBIRTH

மனிதனின் இறப்புக்குப் பிறகு உயிர் என்ன ஆகிறது? இந்தக் கேள்வி அனைத்து மதங்களிலும் பலவாறாக விவாதிக்கப்படுகிறது. அந்த ஆன்மா, தனது நல்வினை, தீவினைப் பயன்களுக்கேற்ப மறுபிறப்பு எடுக்கிறது என்பது பொதுவானதொரு நம்பிக்கை.

சமயவாதிகள் மட்டுமல்லாது,  விஞ்ஞானிகள், சிந்தனையாளர்களையும் மறுபிறப்பு குறித்த கேள்வி திகைக்க வைத்துள்ளது. இதற்கான முடிவான பதில் இதுவரை கிடைக்கவில்லை என்பதே, உயிரின் அடுத்தகட்ட நிலை பற்றிய ஆய்வுகளை சுவாரசியமாக்குகிறது.

மனிதன் மட்டுமல்ல, ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எந்த உயிரின் வாழ்க்கையும் முடிவுற்ற பின் அடுத்த பிறவியை எடுக்கிறது என்பது கீழைமதங்களின் முக்கியமான தாத்பரியமாக உள்ளது. இதுகுறித்த தகவல்களை ஒரே நூலில் தொகுக்க முயன்றிருக்கிறார் இந்நூலாசிரியர்.

இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சமய மெய்யியல் என்ற ஆய்வுக் கருப்பொருளுக்காக இந்நூலை இலங்கை எழுத்தாளர் எஸ்.குருபாதம் எழுதியிருக்கிறார்; ஐந்து பாகங்களில் 67 அத்யாயங்களில் மறுபிறப்பு, பூர்வஜென்ம நினைவுகள், மரணநிலை அனுபவங்கள், ஞானிகளின் கருத்துக்கள், உயிர்த்தெழல் குறித்த பல தகவல்களைத் தொகுத்திருக்கிறார்.

எளியநடையில், பரபரப்பான தகவல்களை எழுதியிருப்பினும் ஒரு கோர்வையை நூலில் காணமுடியவில்லை. எந்த ஒரு முடிவையும் கூறாமல் வாசகரே அதைத் தீர்மானிக்க விட்டதாக ஆசிரியர் கூறினாலும், நூலின் தலைப்பிலுள்ள வியப்பை இந்நூல் அளிக்கவில்லை என்பது ஏமாற்றமே.

தவிர, இந்நூலில் பிரபலமான பலரது பெயர்கள் (உ.ம்: சிக்மன் பிஃரெயிட், சோக்கிரடீஸ், பாட்டாளிபுத்திரா,  பைதோகோரஸ், மைத்ரேன்) தவறான உச்சரிப்புகளில் எழுதப்பட்டிருப்பது நெருடலை ஏற்படுத்துகிறது. நூலில் பரவலாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளும், தயாரிப்பில் இன்னும் சிரத்தை காட்டியிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

***

மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள்

-எஸ்.குருபாதம்

384 பக்கங்கள், விலை: ரூ. 250,

மணிமேகலைப் பிரசுரம்,

த.பெ.எண்: 1447, 7, தணிகாசலம் சாலை,

தியாகராயநகர், சென்னை- 600 017,

தொலைபேசி: 044- 2434 2926.

.

One Response to “இறப்புக்குப் பிந்தைய வாழ்க்கை”

  1. siva subramaniam 09/04/2014 at 6:35 PM #

    DEAR SIR, GOOD EVENING. I REQUEST U TO SEND ALL YOUR WRITINGS , DETAILS ETC. TO MY PERSONAL MAIL ID. SIVA_MANGALA@YMAIL..COM ONLY AND NOT TO SIVA_MANGALA@YAHOO.CO.IN

    WITH KIND REGARD,   c.sivasubramanian, chartered accountant

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: