விவேகானந்த திருமந்திரம்

23 Jan

.

பாரதத்தை உய்விக்கும் அவதாரம்

நின் புவன ஜனனம்.

வங்கத்திற்கு மதிப்பூட்டியது

நின் தேசாந்திரப் பயணம்.

.

குருநாதருக்கு உயர் காணிக்கை

நின் ஜீவ சமர்ப்பணம்.

துறவுக்கு வெகு மதிப்பளித்தது

நின் வழுவா பிரமச்சரியம்.

.

அடிமை நாட்டின் சஞ்சீவினி

நின் குமரிமுனை தவம்.

அச்சத்திற்கு விடைகொடுத்தது

நின் பேராண்மை வடிவம்.

.

இளமைக்கு மாறா முன்னுதாரணம்

நின் பீடுடைய கம்பீரம்.

அநீதிகளை எதிர்க்கும் படையானது

நின் ஆவேச உபதேசம்.

.

வறுமைக்கு எதிரான போர்க்குரல்

நின் வற்றாத வாத்சல்யம்.

சேவைக்கு இலக்கணமானது

நீ நிறுவிய துறவியக்கம்.

.

ஆன்மிகத்தின் இனிய வடிவம்  

நீ அணிந்த கஷாயம்.

சுதந்திரத்தை உணரச் செய்தது

நின் ஆன்ம முழக்கம்.

.

உலகம் ஒன்றென நிறுவியது

நின்னருள் பொங்கும் காருண்யம்.

தியாக வாழ்வின் தெளிந்த விளக்கம்

நின் பரிபூரண நிவேதனம்.

.

என்றும் எங்களை நல்வழி நடத்தும்

விவேகானந்த திருமந்திரம்!

.

குறிப்பு:

இக்கவிதை, விவேகானந்தம்150 இணையதளத்தில் வெளியானது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: