தொலைத்த வாழ்க்கையின் பதிவு

2 Sep

neevanathi
 நதிக்கரையில்தான் நாகரிகங்கள் மலர்ந்தன. மனித சமுதாயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் நதியைச் சார்ந்தே இருந்தன. ஆனால், அதுவெல்லாம் பழங்கதை. இயந்திரமயமாக்கலைத் தொடர்ந்த தொழிற்புரட்சிக்கு முதலில் களபலியானது விவசாயம். அதையடுத்து மாசுபட்டது, அமுதம் போன்ற நன்னீரைத் தந்த நதி. இப்போது நாம் தாராளமய உலகப் பொருளாதாரத்தில் நவீன வசதிகளுடன் வாழ்கிறோம். இதற்காக நாம் இழந்தவை நம் பகட்டான கண்களுக்குத் தெரிவதில்லை.
 .
இலக்கியம் நம் கண்ணுக்குத் தெரியாத, நாம் பார்க்க மறுக்கும் காட்சிகளை முன்னிறுத்தி சற்றேனும் நம்மை யோசிக்கச் செய்கிறது. அந்த வகையில், நமது தற்கால  ‘நவநாகரிக’ வாழ்க்கையை அனுபவிக்க நாம் அடைந்த இழப்புகள் குறித்த திடுக்கிடலை ஏற்படுத்துவதில் இந்தப் புதினம் வெற்றி பெறுகிறது.
 .
வேலூர் மாவட்டத்தின் ஜீவாதாரமாக ஒரு காலத்தில் விளங்கிய பொன்னை நதி இன்று நீரின்றி தொழிற்சாலைக் கழிவு நீரோடையாக நாசமாகி இருக்கிறது. ஆறில்லாத ஊர் பாழ் என்பார்கள். இன்றோ ஆறே பாழாகக் கிடக்கிறது. இந்தப் பொன்னை நதியின் மற்றொரு பெயரான நீவாநதி என்பதில் தான் இந்தப் புதினமே உருவாகியுள்ளது.
.
பொன்னை நதியின் கரையிலுள்ள சிறு கிராமத்தின் 40 ஆண்டுகளுக்கு முந்தைய இனிமையான வாழ்க்கை வட்டார வழக்கு நடையில் அற்புதமாக இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்களின் மண் மீதான பாசம், ஆற்றிலிருந்து ஏரிக்கு தண்ணீரைத் திருப்பும் ஆவேசம், ஊரில் வாழும் பல்வேறு ஜாதியினரிடையிலான பிணக்கும் இணக்கமும், அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகள் உள்பட சின்னஞ்சிறு விஷயங்களிலும்கூட ஆசிரியரின் வாழ்வனுபவம் மிளிர்கிறது.
.
மணல் செராவுடன் கம்பீரமாகக் களமிறங்கும் சின்னசாமி ரெட்டியார், புதினத்தின் இறுதியில் அதை பழைய இரும்புக்கு விற்கும்போது, நாம் இழந்ததென்ன, பெற்றதென்ன என்பது நெற்றிப்பொட்டில் அடித்தது போலப் புரிகிறது.
.
புதினத்தின் மாந்தர்கள் பெரும்பாலும் வெள்ளந்தியாக வருகிறார்கள். தொழிற்பேட்டைக்காக விவசாய நிலத்தைக் காவு கொடுத்துவிட்டு இழப்பீட்டுக்காக நீதிமன்றங்களில் அலையும் அவர்களைக் காணும்போது, தற்போதைய நிலம் கையகச் சட்டம் குறித்த செய்திகள் நினைவுக்கு வந்து அச்சுறுத்துகின்றன.

பாரம்பரியமான கிராமிய மணம் கமழும் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நாம் அடையும் சுகங்கள் கண்களை விற்று சித்திரம் வாங்கினாற் போலத்தான். இந்தச் சிந்தனையே புதினத்தைப் படித்து முடிக்கும்போது பெருமூச்சுடன் வெளியேறுகிறது.

***

நீவாநதி

கவிப்பித்தன்
502 பக்கங்கள், விலை: ரூ. 385.நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 600 098.
தொலைபேசி: 044- 2624 1288.

***

எழுத்தாளர் முகவரி:கவிப்பித்தன்,
தென்றல் இல்லம்,
வசூர் (அஞ்சல்),
பொன்னை,
வேலூர் மாவட்டம்,
632 514தொலைபேசி: 94434 30158

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: