Archive | May, 2016

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக விஞ்ஞானி

31 May
GNRamachandran1

ஜி.என்.ராமசந்திரன்

விருதுகள் தான் பலரை உலகுக்கு அடையாளம் காட்டுகின்றன. ஆனால், அதீதத் திறமையிருந்தும் பலருக்கு உரிய விருதுகள் உரிய காலத்தில் கிடைப்பதில்லை. அதனால் உலகின பரவலான கவனத்துக்கு அவர்கள் வராமலே போய்விடுகிறார்கள். அத்தகையவர்களுள் குறிப்பிடத் தக்கவர், தமிழகத்தைச் சேர்ந்த இயற்பியல், உயிரியல் விஞ்ஞானியான ஜி.என்.ராமசந்திரன். Continue reading

விநாயக சதுர்த்தி

30 May
Ganesha Chadurthi
 .
சங்கரன் மைந்தன்
சதுர்கரத்தானை
சதுர்த்தியில் வணங்க
சங்கடம் தொலையும்.
 .
அகத்தியருக்கு
அருளொளி தந்த
அற்புத தெய்வம்
அபயம் தருவார்.

Continue reading

மூன்றாவது சுதந்திரப் போர்

29 May

national flag 2

1857:

வியாபாரியிடம் அடகுவைக்கப்பட்ட
சுயஉரிமையை மீட்கத் துடித்த
வீரர்களின் வேகத்தால் கிளர்ந்தது
சிப்பாய்க் கலகம்.

அடிமைப்பட்டதை உணர்ந்த
நம் முதல்கணம் அது.
விட்டில்பூச்சிகளாய் அதில்
விழுந்த தியாகியர் ஆயிரம்! Continue reading

கணினிகளின் அதிவேக கணக்கீட்டுக்கு வித்திட்டவர்!

28 May
Narendra Karmarkar1

நரேந்திர கார்மார்கர்

எந்த ஒரு புதிருக்கும் தீர்வு காண ஒரு நடைமுறை உள்ளது. அந்தத் தீர்வை அடைய முறையான திட்டத்துடன் படிப்படியாகப் பரிசீலிக்க வேண்டும். ஏற்கத் தக்கவற்றை ஏற்று, நிராகரிக்கத் தக்கவற்றை நிராகரித்து, அடுத்த படிநிலைக்கு நகர்ந்து, இறுதியில் முழுமையான தீர்வை எட்ட முடியும். இதற்கு கணிதத்தில் படிமுறைத் தீர்வு (Algorithm) என்று பெயர். கணிதத்திலும், கணிப்பொறியியலிலும் இது வெகுவாகப் பயன்படுத்தப்படும் முறையாகும்.

குறிப்பாக கணிப்பொறிகளில் ஒரு சிக்கலுக்கு தீர்வு காண எந்த வழிமுறை சரியானது, எது விரைவான தீர்வை அளிப்பது ஆகிய அம்சங்கள் முக்கியமானவை. கணிப்பொறிகளின் கட்டுப்பாட்டு ஆணைகள் இந்த படிமுறைத் தீர்வு அடிப்படையில் தான் எழுதப்படுகின்றன.

கணினிகளின் விரைவான கணக்கீடு அவற்றின் முக்கியமான திறனாகும். இந்தத் திறனை விரைவுபடுத்த உதவும் கார்மார்கர் படிமுறைத் தீர்வு (Karmarkar’s Algorithm) என்ற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர், இந்திய கணினி அறிவியல் மேதையான நரேந்திர கார்மார்கர். இவரது கண்டுபிடிப்பால் கணினித் தயாரிப்பில் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. Continue reading

கணிதமும் வரலாறும் சங்கமித்த நிபுணர்

17 May
தாமோதர் தர்மேந்திர கோசாம்பி

தாமோதர் தர்மானந்த கோசாம்பி

மானுட அறிவு விசாலமானது. அதை முழுமையாகப் பயன்படுத்துவோர் மிகச் சிலரே. பலதுறைகளில் வல்லுநர்களாகத் திகழ்பவர்கள், அறிவின் எல்லையைத் தொடுகிறார்கள். அத்தகைய பல்துறை வித்தகர்களுள் குறிப்பிடத் தக்கவர், மார்க்சீய வரலாற்றாய்வாளர்களின் பிதாமகனாகப் போற்றப்படும் தாமோதர் தர்மானந்த கோசாம்பி. அவர் ஒரு கணிதவியல் நிபுணர், புள்ளியியல் மேதை, நாணயவியல் அறிஞர், தொல்லியல் ஆர்வலர்- என்பது பலரும் அறியாத தகவல். Continue reading

வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்

10 May
venkatraman ramakrishnan 1

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

உயிரணுக்களிலுள்ள ரிபோ கரு அமிலம் (ஆர்என்ஏ) மற்றும், புரதங்களின் சிக்கலான அமைப்பான ரிபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் (புரோட்டீன்) உற்பத்தியாவது தொடர்பான ஆராய்ச்சி தற்போது மருத்துவ உலகில் பேரிடம் வகிக்கிறது. ரிபோசோம் (Ribosome) அமைப்பின் அடிப்படையில் புதிய நுண்ணுயிர் எதிரிகள் (ஆன்டி பயாட்டிக்) உருவாக்கப்படுகின்றன.
இதற்கு வித்திட்ட அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் அமெரிக்கா வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். அவரை  ‘வெங்கி’ என்று விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கிறார்கள்.

சக விஞ்ஞானிகளான அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டைட்டஸ், இஸ்ரேலைச் சேர்ந்த அடா யோனட்ஸ் ஆகியோருடன் இணைந்து, 1999-இல் ஓர் ஆய்வறிக்கையை வெங்கி வெளியிட்டார். உயிரி வேதியியல் கண்டுபிடிப்பான அதனால் விளைந்த பலன்களைக் கருத்தில் கொண்டு, 2009-இல் இம்மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. Continue reading

குணமுயர்த்தும் இனிய நூல்…

9 May

mahathma book

தங்கள் சிறந்த குணநலன்களாலும் செயற்கரிய சாதனைகளாலும் மனிதர்கள் மகான்கள் ஆகின்றனர். அவர்களது வாழ்வு மக்களுக்கு வழிகாட்டியாகிறது. அத்தகைய மகாத்மாக்களை ஒருவருடன் ஒருவர் ஒப்பிடுவதன் மூலமாக, அவர்களது சீரிய பண்புநலங்களை தெளிவாக உணர முடியும். அந்த நோக்கத்திலேயே இந்த நூலை எழுதியிருக்கிறார் பேரா. மா.பா.குருசாமி.

“இந்த ஒப்பிடுதல் யார் சிறந்தவர், உயர்ந்தவர் என்ற நோக்கில் எழுதப்பட்டதல்ல. வெவ்வேறு சூழல்களில் பிறந்து வாழ்ந்தவர்களிடமும் எப்படி வியத்தகு ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதை அறியும் முயற்சியால் அவர்களை ஓரளவு நன்கு புரிந்துகொள்ள முடிந்தது என்பதே உண்மை” என்று நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது இனிய விளக்கம்.

தன்னைக் கவர்ந்து, தனது வாழ்வில் தடம் பதித்த பெரியோரான மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், வள்ளலார், ஆச்சார்ய வினோபா பாவே, வ.உ.சி., காமராஜர், ஜே.சி.குமரப்பா போன்ற ஆளுமைகளை ஒப்பிடும் அரிய பணியில் அற்புதமான முத்துகளைக் கண்டெடுத்திருக்கிறார் அவர்.

உதாரணமாக, வள்ளலாரும் மகாகவியும் என்ற கட்டுரையில்,  “இருவரும் மாறுபட்ட இயல்புகளைக் கொண்டவர்கள். ஆனால் முரண்பட்ட கருத்துகளைக் கொண்டவர்கள் அல்லர். முன்னவர் பக்தியாலும் ஞானத்தாலும் இறைவனைக் கண்டவர். பின்னவர் கர்மயோகத்தாலும் ஞானயோகத்தாலும் இறைவனை உணர்ந்தவர்” என்கிறார்.

மகாத்மா காந்தியுடன் பிற சான்றோரை ஒப்பிட்டு எழுதும் ஆசிரியரின் முயற்சியால் விளைந்த 8 கட்டுரைகள் நூலின் பிரதானப் பகுதியாகும். அதே வழியில் பிற சான்றோரை ஒப்பிடும் 5 கட்டுரைகளும் உடன் உள்ளன. 1970-களில் எழுதிய பல கட்டுரைகள் இன்றைக்கும் ஏற்றவையாகத் திகழ்வது சிறப்பு.

அளவில் சிறிதெனினும், சொல்லாற்றல் மிகுந்த நூல்;  மாணவர்கள் படிக்க வேண்டிய அரிய பொக்கிஷம் இதுவென உறுதியாகக் கூறலாம்.

***

ஒப்பற்ற மகாத்மாக்கள்- ஓர் ஒப்பீடு

டாக்டர் மா.பா.குருசாமி

128 பக்கங்கள், விலை: ரூ. 90

காந்திய இலக்கியச் சங்கம்,
காந்தி நினைவு அருங்காட்சியக வளாகம்,
மதுரை- 625 020,
தொலைபேசி: 0452- 253 3957.

 

 

யாருக்கும் வெட்கமில்லை

4 May
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம்
ஒவ்வொரு மனத்திலும் பலநூறு சிந்தனை.
ஒவ்வொரு சிந்தனையும் வெளிப்படுகிறது
முலாம் போசப்பட்ட வார்த்தைகளில்.
எந்த வார்த்தையும் புலப்படுத்தாது
மனம் போகும் திசைகளை.

Continue reading