Archive | June, 2016

நமக்கெலாம் காப்பு!

29 Jun
திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1

Continue reading

இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி

28 Jun
எம்.ஜி.கே.மேனன்

எம்.ஜி.கே.மேனன்

இந்தியாவின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டவர் அணுவியல் மேதையான ஹோமி ஜஹாங்கீர் பாபா. அவரது அடியொற்றி, தேசத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு துணை புரிந்தவர், மாம்பிள்ளிகளத்தில் கோவிந்தகுமார் மேனன். சுருக்கமாக, எம்.ஜி.கே.மேனன்.

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைக் கணக்கில் கொள்வார்கள்; ராஜதந்திரிகள் அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொள்வார்கள். அதுபோல, உடனடி அறிவியல் சாதனைகளைவிட, அடுத்தடுத்த தலைமுறை சாதனைகளுக்கு வித்திடுபவரை அறிவியல் ராஜதந்திரி எனலாம்.  அத்தகையவர் தான் எம்.ஜி.கே.மேனன். Continue reading

பத்திரிகையாளரின் சமூக ஆவணம்…

27 Jun

ManuvathamRSS

மராட்டி வார இதழான  ‘விவேக்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் ரமேஷ் பதங்கே. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் பொறுப்புகள் வகித்தவர். அந்த அமைப்பில் பணியாற்றியபோது, ஜாதிரீதியான வேற்றுமையின்றி அங்கு நிலவிய சகோதரத்துவம் பதங்கேயின் இதயத்தைக் கவர்ந்தது. Continue reading

அற்புத மருந்துகளைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானி

21 Jun
YPRow2

எல்லப்பிரகத சுப்பராவ்

மலேரியா, யானைக்கால் வியாதி, புற்றுநோய், பிளேக் போன்ற நோய்களுக்கு இன்று உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைக்கும் அற்புதமான மருந்துகளைக் கண்டறிந்தவர் ஓர் இந்தியர். இன்று மருந்தியல் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்கும் அந்த விஞ்ஞானி, எல்லப்பிரகத சுப்பராவ். Continue reading

சென்னை புத்தகக் கண்காட்சி- சில அனுபவங்கள்…

18 Jun

chennai-book-fair

சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுவந்த 39-வது புத்தகக் கண்காட்சி சிறப்பாக நிறைவு பெற்றுவிட்டது. ஜூன் 1-இல் தொடங்கி 13-இல் நிறைவடைந்த இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு 10 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர்; ரூ. 15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தால் (பபாசி) நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, நிகழாண்டில் பல்வேறு பிரச்னைகளையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது.

டிசம்பரில் பெய்த பலத்த மழையால் சென்னையில் பொங்கல் பண்டிகை விடுமுறையில் தொடங்க இயலாதுபோன புத்தகக் கண்காட்சி, வழக்கமான இடத்திலும் நடத்த முடியாமல், தீவுத் திடலில் தற்போது நடத்தப்பட்டுள்ளது. இதற்காக பபாசி நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களைப் பாராட்ட வேண்டிய தருணம் இது. Continue reading

தந்தையின் புகழுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானி

14 Jun

 

வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன்

வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன்

‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’ என்ற பழமொழி உண்டு. அதை மெய்ப்பிப்பது போல, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மேதை சர்.சி.வி.ராமனின் மகனும் உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானியாகத் திகழ்ந்தார்.

பிரபல விஞ்ஞானியின் மகனாக இருந்தபோதும் அதை அவர் ஒருபோதும் தனது முன்னுரிமையாகக் காட்டிக்கொண்டதில்லை. தனது தந்தையின் புகழ் நிழலில் வளராமல், சொந்தத் திறமையில் வளர வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. அவர்தான் விண்வெளி விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன். Continue reading

வென்றவனின் பிரகடனம்

13 Jun

 

ஆள்தான் பெரிய உருவம்
ஆனால், பரிதாபம்.

எதற்குத் துரத்துகிறார்கள் என்று
ஏதும் தெரியாமலே
ஓடிக் களைத்த போதில்தான்
பிருஷ்டத்தில் அந்த ஊசி பாய்ந்தது.
அடுத்த நிமிடம் என்ன நடந்தது?
மயங்கிச் சரிந்த பெரிய உருவம்
செங்கல் சூளைக்கு மண் அகழ்ந்த குழியில்
தன்னைத் தானே புதைத்துக் கொண்டது.

ஆள் தான் பெரிய உருவம்.
மனிதரின் பகுத்தறிவு சிறிதும் இல்லாத
பரிதாபத்திற்குரிய உயிரினம்.

கழுத்தில் ஒரு மின்னணுக் கருவியை மாட்டவே
துரத்துகிறார்கள் என்பது தெரியாத முட்டாள்.
துப்பாக்கியில் சுட்டது மயக்க ஊசி தான்
என்று தெரியாத ஐந்தறிவு ஜடம்.
ஓட ஓடத் துரத்துவார்கள் என்பது அறியாமல்
புவியில் பிறந்துவிட்ட அற்பப்பதர்.
ஆள் மட்டும் பெரிதாக இருந்துவிட்டால் போதுமா?

காட்டை ஆளும் லாவகம் தெரிந்தும்
நாட்டு மக்களின் அச்சம் புரியாமல்
எல்லை தாண்டிய பேராசைக்கு
சாவு தானே பரிசு?
‘அட்டகாசம்’ செய்யும் தும்பிக்கையான்
இப்போது உணர்ந்திருக்கக் கூடும்
மனிதரின் வலிமையை.

அப்பாவிகளுக்கும் பரிதாபிகளுக்கும்
மனிதரின் உலகில் என்றும் இடமில்லை.
வலிமை உடையவனுக்கே உலகம் சொந்தம்.
இது, உயிருடன் உள்ள பிற யானைகள்
புரிந்துகொள்ள வேண்டிய பாடம்.

காட்டைத் தாண்டாதே; தண்டனை உண்டு.
காட்டுக்குள் வந்தாலும் அனுமதி;
அதுவே உன் தலைவிதி.
இது வென்றவனின் பிரகடனம்.

***

 

குறிப்பு:

கோவை அருகே பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் கடந்த 2011, ஜூலை 9-ஆம் தேதி இரவு,  காட்டு யானை ஒன்றுக்கு கழுத்தில் ‘ரேடியோ காலர்’ என்ற மின்னணுக் கருவியை மாட்டுவதற்காக வனத்துறையினர் எடுத்த நடவடிக்கையின்போது மயக்க ஊசியால் யானை குழியில் விழுந்து பலியானது. அந்த யானைக்கு அஞ்சலியே இக்கவிதை.

படம்: இந்த யானைதான் வனத்துறை நடவடிக்கையில் பலியானதாக நம்பப்படுகிறது.
(பட உதவி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு, கோவை).

எழுதிய நாள்:  12.07.2011

 

 

யாது யான் செய்ய?

8 Jun

Question mark

யாராவதொருவன்
இருக்க வேண்டும்
அடக்கியாள.

யாராவதொருவன்
இருக்க வேண்டும்
தனக்குக் கீழே. Continue reading