பத்திரிகையாளரின் சமூக ஆவணம்…

27 Jun

ManuvathamRSS

மராட்டி வார இதழான  ‘விவேக்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் ரமேஷ் பதங்கே. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் பொறுப்புகள் வகித்தவர். அந்த அமைப்பில் பணியாற்றியபோது, ஜாதிரீதியான வேற்றுமையின்றி அங்கு நிலவிய சகோதரத்துவம் பதங்கேயின் இதயத்தைக் கவர்ந்தது.

பொதுவாக இந்துத்துவ அமைப்பில் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் (மனுவாதம்) அதிகம் இருக்கும் என்று வெளியுலகில் பிரசாரம் செய்யப்படும் நிலையில், அத்தகைய வேற்றுமை இல்லாதது மட்டுமல்ல, வேறெங்கும் காண இயலாத அன்பும் நெருக்கமும் தனக்கு அங்கு கிடைத்தன என்கிறார் ரமேஷ் பதங்கே.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தான் பணிபுரிந்தபோது கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து அவர் எழுதியுள்ள நூலே இந்நூல். தீண்டாமையால் வெகுவாக பாதிக்கப்படும் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு பொதுவான கலாசார இயக்கத்தில் பெற்ற அனுபவங்களின் சாட்சியமே இந்நூல் எனலாம்.

இந்து சமுதாயத்தின் தீய பண்புகளுள் ஒன்றான தீண்டாமை சட்டரீதியாக தடுக்கப்பட்டுவிட்டது. ஆயினும் மனப்பூர்வமாக, தாழ்த்தப்பட்ட மக்களும் நம்மவர்களே என்ற எண்ணத்தை அனைத்து மக்களிடமும் விதைக்க முடியவில்லை. இன்றும் இரட்டைக்குவளை முறை, கோயிலில் தலித் மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுப்பு, தனிச்சேரி, தனி சுடுகாடு போன்ற சிக்கல்கள் தொடர்கின்றன.

இத்தகைய சூழலில், பிராமணர்களே ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீண்டாமை என்ற சிந்தனை இல்லாமல் இருப்பது எப்படி என்ற கேள்விக்கான பதிலை இந்நூலில் காண முடிகிறது.

சமகால அரசியல் நிகழ்வுகள், தலைவர்களின் மனவோட்டங்கள், மகாத்மா காந்தி- அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கனவுகள், இயக்கத்தின் ஜனநாயகத் தன்மை போன்ற பல அம்சங்களை விரிவாக அலசுகிறார் பதங்கே. சமூக ஒருமைப்பாட்டை விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய அரிய ஆவணம் இது.

***

மனுவாதமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

மராட்டியில்: ரமேஷ் பதங்கே
தமிழில்: எம்.கே.சுப்பிரமணியன்

168 பக்கங்கள், விலை: ரூ. 100

விஜயபாரதம் பதிப்பகம்,
12, எம்.வி.நாயுடு தெரு,
சேத்துப்பட்டு, சென்னை- 600 031,
தொலைபேசி: 044- 2836 0874.

 

.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: