Archive | July, 2016

கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்!

26 Jul
Kalam3

ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்

விஞ்ஞானி ஒருவர் நாட்டின் தலைமகனாக, குடியரசுத் தலைவராக உயர்வது என்பது மிகவும் அபூர்வம். அத்தகைய அரிய சாதனையாளர், பாரத மக்களின் உள்ளம் கவர்ந்த விண்வெளிப் பொறியியல் விஞ்ஞானி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம். Continue reading

நீதிக்கான போராட்டம்

26 Jul

Piyush Manush

சமுதாயத்தில் தவறிழைப்பவர்களைத் திருத்தவும், கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கவும்தான் சிறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பான இருப்பிடமாகவும், அப்பாவிகளுக்கு ரண வேதனை அளிக்கும் சித்ரவதைக் கூடமாகவும் நமது சிறைகள் மாறி வருகின்றன. அதற்கான நிரூபணம்தான், சமூக சேவகர் பியூஸ் மானுஸ் சேலம் மத்திய சிறைக்குள் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் நிகழ்வு. Continue reading

பல தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கியவர்

19 Jul
கே.ஆர்.ராமநாதன்

கே.ஆர்.ராமநாதன்

இந்திய விஞ்ஞானிகள் சிலரது பெயரைக் கூறுமாறு சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருபவை சர் சி.வி.ராமன், ஜெகதீச சந்திர போஸ், விக்ரம் சாராபாய், ஹோமி பாபா போன்ற சிலரது பெயர்கள் தான். அத்தகைய மூத்த தலைமுறையினருடனும் பணிபுரிந்து, அடுத்து பல தலைமுறை விஞ்ஞானிகளையும் வளர்த்தெடுத்த விஞ்ஞானியான கே.ஆர்.ராமநாதனை அறிவியல் மாணவர்களே தெரிந்திருப்பதில்லை. அவரது வாழ்வே ஒரு விஞ்ஞான வேள்வியாகும். Continue reading

உயிரபிமானம்

18 Jul
 .
தாவரங்களுக்கும்
உயிருண்டு என்றவர்
பாரதத்தின் ஜெகதீச சந்திரர்.
 .
வாடிய பயிரைக்
கண்டவுடன் வாடியவர்
அருளாளர் வள்ளலார்.
 .
புல்லைப் பூடாய் மரமாகும்
உயிரின் பரிணாமத்தை
பாடியவர் மணிவாசகர்.
 .
எல்லாம் தெரிந்தாலும்
மரத்தை வெட்டுவதில்
யார்க்கும் ஈடில்லை நாம்.
 .
மனிதாபிமானம் பேசியபடி
கழுத்தறுப்பவர்களிடம்
எதிர்பார்க்கலாமா உயிரபிமானம்?
 .
.

லஞ்சம், ஊழலுக்கு நான் என்றும் நெருப்பு

17 Jul
நீ என்ன பருப்பா என்று கேட்பவர்கள்
எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
அவர்களுக்காக வாழ்வதே எனது விருப்பு.
.
நான் பருப்பு இல்லையென்றாலும்
லஞ்சம், ஊழலுக்கு என்றும் நெருப்பு.
ஆணவ அரசியலை எதிர்க்கும் துருப்பு.
எழுத்தே தான் என்றும் எனது இருப்பு.

Continue reading

கவிதையின் நியாயம்

14 Jul
 .
கைகளில் ஏந்தி இருக்கையில்
இளஞ்சூடாக மூத்திரம் கழிக்கும்
சிசுவை விடவா கவிதை பெரிது?
 .
யாரேனும் எடுப்பதற்காக சிணுங்கும்
சிசுவின் அழுகையை விடவா
எழுதப்படும் கவிதை அழகு?
 .
எங்கோ பார்த்தபடி இதழில் விரியும்
புன்னகையை மறுநிமிடமே மறைக்கும்
சிசுவின் நினைவல்லவா கவிதை?
 .
வலைப்பூவில் எழுத மறந்த
கவிதைகளை விட,
சிசுவின் நறுமணம் பெரிது.
 .
கவிதையை எப்போதும் எழுதலாம்.
சிசுவை இப்போதே கொஞ்ச வேண்டும்…
இப்போதே ரசிக்க வேண்டும்.
 .
தாலாட்ட வேண்டியவன் சில நாட்களுக்கு
வலைப்பூவை மறந்துவிட
வேண்டியது தான்.
 .
  • அனுபவ கவிதை/ எழுதிய நாள்: 15.12.2010
.

செயற்கைக்கோள் திட்டங்களை வலுப்படுத்தியவர்

12 Jul
URRao1

யு.ஆர்.ராவ்

செயற்கைக்கொள்களை விண்ணுக்கு ஏவி, அவற்றை புவிச்சுற்றுப் பாதையில் நிலைநிறுத்துவதில் இன்று பாரதம் உலக அரங்கில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தச் சாதனையை நாடு அடையக் காரணமாக இருந்தவர்களுள் பிரதானமானவர் விஞ்ஞானி  யு.ஆர்.ராவ்.

கர்நாடக மாநிலத்தின் தெற்கு கனரா மாவட்டத்திலுள்ள ஆத்மரு கிராமத்தில், 1932, மார்ச் 10-இல் பிறந்தவர் உடுப்பி ராமசந்திர ராவ். சுருக்கமாக யு.ஆர்.ராவ். Continue reading

நிலவின் களங்கம்

9 Jul
வட்ட முழு நிலவில்
கருந்திட்டுக்கள்,
வண்ணக்கலவையின்
அற்புத ஜாலம்.
 .
நிலவை உரசும்
கருமேகங்கள்,
வண்ணக்கலவையின்
இயற்கைக்கோலம்.
 .
நிலவின் களங்கம்
கருந்திட்டுக்களுமல்ல;
கருமேகங்களுமல்ல.
நமது மனதின்
தோற்றப்பிழைகள்.
.