Archive | August, 2016

இந்தியாவின் கடலியல் வல்லுநர்

30 Aug
PremChand Pandey

பிரேம் சந்த் பாண்டே

வளர்ந்துவரும் அறிவியல் துறைகளுள் கடலியலும் (Oceanography) ஒன்று. காலநிலை மாற்றங்கள், வளிமண்டல பாதிப்புகள், துருவ நிலை மாறுபாடுகள், பேரழிவு நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்களுடன் தொடர்புடையது கடலியல். இத்துறையில் உலக அளவில் வல்லுநராக மதிக்கப்படுபவர் இந்திய விஞ்ஞானி பிரேம் சந்த் பாண்டே. Continue reading

நிறமாலையியலில் சாதனைகள் நிகழ்த்தியவர்

23 Aug
KRRao 2

கோட்செர்லக்கோட்ட ரங்காதம ராவ்

இயற்பியலில்  நிறமாலையியல் (Spectroscopy) என்பது ஒரு பொருளுக்கும் மின்காந்தக் கதிர்வீச்சுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி ஆராயும் துறையாகும்.  ஆரம்பத்தில் கண்ணுக்குப் புலப்படும் ஒளியை ஆராய்வதை மட்டுமே இச்சொல் குறித்து வந்தது. ஒரு பொருள் வெப்பமுறும்பொழுது வெளியிடும் ஒளியின் பண்புகளைப் பற்றியும்,  ஒரு பொருள் மீது அளிக்கப்படும் ஒளியை அப்பொருள் எப்படிக் கடத்துகிறது,  அப்பொருளுள் என்னென்ன விளைவுகள் ஏற்படுத்துகின்றன என்பது உள்ளிட்ட ஒளி – பொருள் உறவாட்ட நிகழ்வுகள் பற்றியும் ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

பிறகு, கண்ணுக்குப் புலனாகா மின்காந்த அலைகள் தவிர,  ஆற்றல் அலைகளானது துகள்கற்றையாக இயங்கி ஒரு பொருளுடன் தொடர்புபடும் நிகழ்வுகளும் இத்துறைக்குள் சேர்ந்தன. நிறமாலை என்னும் சொல்லில் உள்ள  ‘நிறம்’ என்பது நமது கண்களுக்குப் புலனாகும் ஒளியலைகள் மட்டுமல்லாது, எல்லா அலைநீளங்களையும் கொண்ட மின்காந்த அலைவரிசையையும் குறிக்கும். அணுக்கதிரியக்கத்தையும் நிறமாலையியலில் ஆராய்வது மிக முக்கியமான பிரிவாக தற்போது வளர்ந்து வருகிறது. இந்தத் துறையை இந்தியாவில் வளர்த்த பெருமைக்குரியவர், கோட்செர்லக்கோட்ட ரங்காதம ராவ். சுருக்கமாக பேராசிரியர் கே.ஆர்.ராவ். Continue reading

மனதிற்குள்ளொரு மிருகம்

21 Aug

 

velamul

மனதிற்குள்ளொரு மிருகம்- அது
மரமரமரவென உறுமும் தினமும்!
மனதிற்குள்ளொரு மிருகம்! Continue reading

இந்திய தொலையுணர்தல் திட்டங்களின் தந்தை

16 Aug
PRPisharoty

பிஷாரத் ராம பிஷாரட்டி

வானிலையை அறிவதில் வளிமண்ட அறிவியல் உறுதுணையாக உள்ளது. அதன்மூலமாகவே புயல், பனிப்பொழிவு, பருவ மழை, வறட்சி, தட்பவெப்பம் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப நாடுகள் செயல்படுகின்றன. இதில் தொலை உணர்தல் (remote sensing) துறை மிக அடிப்படையானது. இத்துறையை இந்தியாவில் வளர்த்தவர் பிஷாரத் ராம பிஷாரட்டி. Continue reading

சுதந்திரச் சங்கு

13 Aug
sangu
.
சுதந்திரம் என்பது பிறப்புரிமை – அதை
அடைந்திட யாசகம் தேவையில்லை!
சுதந்திரம் என்னது உயிராகும் – அதை
இடறிட அனுமதி எவர்க்குமில்லை!
 .
விடுதலை இல்லா மனிதன் – உலகில்
விழைந்திடும் செயல்களில் வெற்றிகளில்லை.
படிகுழி வீழ்ப்படு புலியின் – பலத்தில்
பலனெதும் இல்லை கண்டீர்!
 .
களை களைந்தால் பயிர்வளங்கள் உயர்ந்திடுதல் போல
தளை உடைந்தால் தனிப்பொலிவில் திளைத்திடுவோம் நாமே!
அதனாலே ஊதிடுவாய் சுதந்திரத்தின் சங்கை –
இதமேயினி எங்கெங்கும் என்றூதி ஆடு!
 .