Archive | October, 2016

நாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே?

29 Oct
vishnu-vishwaroopa.
நாடு முழுவதும் நரகாசுரர்கள்!
எத்தனை கொடியோர், எத்தனை வடிவில்?
நரகாசுரரை ஒழித்திடும் வீர
நாயகர் யாரோ? சிந்தித்திடுவோம்!

Continue reading

நல்ல காலம் பிறக்குது!

28 Oct
 Kudukuduppai
 .
நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது!
 .
வல்லமை வளருது! வல்லமை வளருது!
அல்லவை அழியுது! அறமே பெருகுது!
நல்லவர் வாழ்ந்திட நவநிதி வளருது!
நல்ல காலம் பிறக்குது!
.
சொல்லடி ஜக்கம்மா, விண்ணவர் ஈஸ்வரி!
அம்மையே, நாயகி, வேதகி, வித்தகி!

Continue reading

வாரிசு அரசியல்: ஓர் எச்சரிக்கை

25 Oct

mulayam-and-akilesh

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதி கட்சிக்குள் நேரிட்டுள்ள பூசல், அக்கட்சியின் வாரிசு அரசியலையும், உறவினர்களை அதிகார மையமாக்கிய முலாயம் சிங்கின் சுயநல அரசியலையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. Continue reading

வளிமண்டலவியலில் சாதனை நிகழ்த்திய பெண்மணி

25 Oct
anna-mani

அன்னா மாணி

இன்று இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் காற்றாலை, சூரிய ஒளி ஆகிய மரபுசாரா ஆற்றல்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளது. இதற்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர், கேரளத்தைச் சேர்ந்த வளிமண்டலவியல்  (Meteorology), இயற்பியல் விஞ்ஞானியான அன்னா மாணி. Continue reading

பயணங்கள் முடிவதில்லை

24 Oct

ஓட்டுனர் மீதான நம்பிக்கையில்
பேருந்தில் நிம்மதியான தூக்கம்;
தண்டவாளம் மீதான உறுதிப்பாட்டில்
சுகமான ரயில் பயணம்;
விமானம் குறித்த விதிகளின் வழியே
வானில் சாகச சிறகடிப்பு;
அலைகளையும் காற்றையும் நம்பி
கடலில், கப்பலில் யாத்திரை.

நம்பிக்கைகள் மட்டுமல்ல –
பயணங்களும் பலவிதம்.
எல்லாவற்றையும் மீறி
எப்போதாவது
நடந்துவிடுகிறது விபத்து.

ஓட்டுனரின் தூக்கமும்
பெயர்ந்த தண்டவாளமும்
செயலிழக்கச் செய்த மின்னலும்
கவிழ்த்துப் போட்ட பனிப்பாறையும்
எப்போதாவது
விதிவசமாகி விடுகிறது.
அதையும் மீறி –
அதே வாகனங்களில் பயணிக்காமல்
தவிர்க்கும் வாய்ப்புண்டு.

ஆயினும் மிதிவண்டி மோதலால்
மருத்துவமனை ஏகலாம்.
எதுவும் யாரிடமும் இல்லை;
இப்போதைக்கு உறங்கு.
விழித்தால் நாளை விவாதிக்கலாம்.

.

ஓம்சக்தி- தீபாவளி மலர் 2016

.

.