Archive | November, 2016

‘ரஷ்ய நோபல் பரிசு’ பெற்ற இயற்பியல் விஞ்ஞானி

29 Nov

 

அசோக் சென்

அசோக் சென்

ரஷ்ய விஞ்ஞானியும் இணையதளத் தொழிலதிபருமான யூரி மில்லரால் நிறுவப்பட்ட அடிப்படை இயற்பியலுக்கான விருது அறக்கட்டளை, 2012 முதல் அடிப்படை இயற்பியலில் திருப்புமுனையான ஆய்வுகளை நடத்தும் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கி வருகிறது. ‘ரஷ்ய நோபல் பரிசு’ என்று அழைக்கப்படும் இவ்விருது பெறுவோருக்கு, நோபல் பரிசு பெறுபவரை விட அதிக அளவில் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டில், யூரி மில்லராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றவர் இந்தியாவின் கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானியான அசோக் சென். 2012-இல் விருது பெற்ற 8 உலக விஞ்ஞானிகளில் சென்னும் ஒருவர். அதற்காக 3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையையும் (இந்திய மதிப்பில் ரூ. 16.5 கோடி) அவர் பெற்றார்.

இழைக் கோட்பாடு துறையில் (String Theory) ‘துகள் இயற்பியலில் வல்-மென் பிணைப்பின் இருமைக் கொள்கை’யில் (S-duality) அசோக் சென்னின் கருத்தாக்கம்  முக்கியமான திருப்புமுனைக் கோட்பாடாகக் கருதப்படுகிறது. Continue reading

Advertisements

நுண்ணலைகள் ஆய்வின் முன்னோடி

22 Nov
ராஜேஸ்வரி சட்டர்ஜி

ராஜேஸ்வரி சட்டர்ஜி

இந்திய நவீன அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் சர் சி.வி.ராமனை, முதுநிலைப் பட்டம் படித்து முடித்த அந்த இளம்பெண் சென்று சந்தித்து தன்னை இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐஐஎஸ்) ஆராய்ச்சியாளராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர் கணிதம் படித்திருந்ததால் ராமன் தவிர்த்துவிட்டார். இயற்பியலில் பட்டம் பெற்றவரே தேவை என்றார் ராமன்.

அதனால், அந்த இளம்பெண் தளர்ந்துவிடவில்லை. தனகே உரிய மன உறுதியுடன், அதே கல்வி நிறுவனத்தின் மின்னியல் துறையில் 1943-இல் ஆராய்ச்சியாளராக இணைந்த அவர், பிற்காலத்தில் பல சாதனைகளை நிகழ்த்தினார்.

கர்நாடகத்தில் முதல் பெண் பொறியாளர், இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி ஆகிய பெருமைகளுக்கு உரிய அந்தப் பெண்மணி, ராஜேஸ்வரி சட்டர்ஜி. நுண்ணலைகள் (microwave engineering), உணர் பொறியியலில் (antennae engineering) முன்னோடியான ஆராய்ச்சிகளை அவர் நிகழ்த்தி இருக்கிறார். Continue reading

இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி

8 Nov
tessy-thomas-4

டெஸ்ஸி தாமஸ்

வலிமையையே உலகம் மதிக்கிறது. பலவான் பேசும்போதுதான் அஹிம்ûஸ அர்த்தமுள்ளதாகிறது. அதனால்தான், இந்தியா ஆயுதத் தயாரிப்பில் தன்னிறைவுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் ஏவுகணைகள் தயாரிப்புத் திட்டம்.

நவீனப் போர்க்களத்தின் அத்தியாவசிய ஆயுதமாகிவிட்ட ஏவுகணைகளுக்கு பிற நாடுகளைச் சார்ந்திராமல், நமக்கு நாமே சுயசார்புடன் இருப்பதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (Defence Research and Development Organizatio- DRDO) மேற்கொண்டுள்ள ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தின் (IGMDP) சூத்திரதாரி,  ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என்று அழைக்கப்படும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

அதேபோல, அப்துல் கலாமினால் அடையாளம் காணப்பட்டு,  ‘இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி’ என்று பெயரெடுத்தவர், கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான டெஸ்ஸி தாமஸ். Continue reading

இந்தியக் கரும்புக்கு இனிப்பூட்டியவர்

1 Nov
janaki-ammal

எடவலேத் கக்கத் ஜானகி அம்மாள்

 

நவீன இந்தியாவின் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் சர்க்கரை ஆலைகளுக்கு பெரும் பங்குண்டு. சர்க்கரை ஆலைகளின் இடுபொருளான கரும்பு இந்தியாவில் விளைந்தபோதும், அதன் இனிப்புத்தன்மை குறைவாக இருந்தது. எனவே ஜாவா போன்ற தூரக் கிழக்கு நாடுகளிலிருந்து கரும்பு, சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.

இந்நிலையை மாற்ற வேண்டும் என்று முயன்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் கல்வியாளருமான மதன் மோகன் மாளவியா. இந்திய கரும்பு ரகங்களை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளைத் துவங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். அதை ஏற்று, சி.ஏ.பார்பர், டி.எஸ்.வெங்கட்ராமன் ஆகிய இரு விஞ்ஞானிகள் கரும்பு ஆராய்ச்சியைத் துவக்கினர்.

தமிழகத்தின் கோயம்புத்தூரில், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தைத் துவங்கிய அவர்கள், பல்வேறு வீரிய ஒட்டுரகக் கரும்பினங்களை உருவாக்கினர். அதன் காரணமாக இந்தியாவில் கரும்பு விளைச்சல் ஐந்தாண்டுகளில் இரு மடங்காகியது. அதன் சர்க்கரை பிழிதிறனும் அதிகரித்தது.

இந்தப் பணியில் விஞ்ஞானிகள் வெங்கட்ராமன், பார்பருடன் இணைந்து பணியாற்றி, இந்திய கரும்பினங்களின் இனிப்பு சுவை, பிழிதிறனை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர், கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானி எடவலேத் கக்கத் ஜானகி அம்மாள். சிறந்த தாவரவியல் விஞ்ஞானியான அவர், உயிர்க்கல மரபியல் (cytogenetics), தொகுதிப் புவியியல் (phytogeography) துறைகளில் முன்னோடியாவார். Continue reading