Archive | December, 2016

அணு ஆற்றலில் தன்னிறைவுக்கு உழைத்தவர்

28 Dec
anil-kakodkar

அனில் ககோட்கர்

இந்தியாவின் மின்னுற்பத்தியில் அணு ஆற்றல் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதற்கான அடிப்படைப் பணிகளில் ஈடுபட்டு, அணுசக்தியில் நாட்டை தன்னிறைவு காணச் செய்தவர் அணுவியல் விஞ்ஞானி அனில் ககோட்கர்.

பர்வானி மாகாணத்தில் (தற்போதைய ம.பி.) விடுதலைப் போராட்ட வீரர் புருஷோத்தம் ககோட்கரின் மகனாக 1943, நவம்பர்11-இல் அனில் ககோட்கர் பிறந்தார்.  பர்வானி,  கர்கான் பகுதிகளில் அவரது ஆரம்பக் கல்வி நிகழ்ந்தது.

உயர்கல்விக்காக மும்பை சென்ற அவர், ரூபாரேல் கல்லூரியிலும், மும்பை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட வீரமாதா ஜீஜாபாய் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இயந்திரவியலில் பி.இ. பட்டம் பெற்ற அவர் (1963), அணு ஆற்றல் நிறுவனத்தில் ஓராண்டு முதுநிலைப் பயிற்சி பெற்றார். Continue reading

துரோகத்துக்கு துணை

20 Dec

demonetisation-seizing

ரூ. 500, ரூ. 1000 உயர் மதிப்பு நோட்டுகள் புழக்கத்தில் இருந்து அகற்றப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னும் 3 வாரங்களில் நிலைமை சீரடையும் என்று அரசு கூறுகிறது.

மத்திய அரசின் அறிவிப்பை ஆரவாரமாக வரவேற்ற எதிர்க்கட்சிகள் பலவும், தற்போதைய ரூபாய் நோட்டுப் பற்றாக்குறையைப் பயன்படுத்தி அரசியல் நடத்த விழைகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும், ஆங்காங்கே கோடிக் கணக்கில் பறிமுதல் செய்யப்படும் புதிய 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகள், வேறோர் அபாயகரமான போக்கை வெளிப்படுத்தி இருக்கின்றன. அது கருப்புப்பண முதலைகளின் திருட்டுத்தனத்துக்கு விலைபோன வங்கி அதிகாரிகளின் உடன்போக்கு. Continue reading

இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை

20 Dec
எம்.எஸ்.சுவாமிநாதன்

எம்.எஸ்.சுவாமிநாதன்

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு என்பார் திருவள்ளுவர். ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமானால் முதலில் அங்கு பசிக்கொடுமை இல்லாதிருக்க வேண்டும். அதற்கு உணவு உற்பதியில் நாடு தன்னிறைவு அடைந்தாக வேண்டும்.

இந்தியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடிய காலம் உண்டு. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் 1943-இல் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். 1960-களிலும் அத்தகைய சூழல் உருவானது. அதைத் தடுக்க இந்திய அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது பசுமைப்புரட்சி.

அதற்கு அடித்தளமிட்டவர், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான பெஞ்சமின் பியாரி பால் (1906- 1989). கோதுமை சாகுபடியில் உயர் விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்கியவர் அவர்.

அவரது அடியொற்றி, உணவு தானிய உற்பத்திப் பெருக்கத்துக்கான திட்டங்கள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது (1966) தீட்டப்பட்டன. அப்போதைய மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சி.சுப்பிரமணியமும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும் அத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினர்.

உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்கள், மேம்பட்ட உரப்பயன்பாடு, முறையான நீர்ப்பாசனம், இயந்திரமயமாக்கல், பூச்சிக்கொல்லி மருந்து நிர்வாகம் ஆகிவற்றின் கலவையான இத்திட்டத்தால், 1970-களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, தேவையைவிட அதிகரித்தது. உணவுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலைமை அப்போது மாறியது.

இத்திட்டத்தின் நாயகராக தமிழகத்தைச் சேரந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருதப்படுகிறார். ‘இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை’ என்றும் அவர் அழைக்கப்படுகிறார். Continue reading

சுதேசி இணைக் கணினியை உருவாக்கிய விஞ்ஞானி

13 Dec

 

ரோத்தம் நரசிம்மா

ரோத்தம் நரசிம்மா

இந்தியாவின் விண்வெளியியல் சோதனைகளுக்குத் தேவையான இணைக் கணினித் தொழில்துட்பத்தை (Parellel Computing) அளிக்க வல்லரசு நாடுகள் முன்வராதபோது, அதை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, தேசிய விண்வெளி ஆய்வகம் 1986-இல் ஃப்ளோசால்வர் எம்கே1 (Flowsolver MK 1) என்ற சுதேசி வன்பொருளை வடிவமைத்தது. அந்தப் பணிக்கு தலைமை வகித்தவர் ரோத்தம் நரசிம்மா.

விண்வெளி விஞ்ஞானியும், திரவ இயக்கவியல் (Fluid Dynamics)  நிபுணருமான ரோத்தம் நரசிம்மா, இத்துறைகளில் 250 ஆய்வறிக்கைகளையும், 15 நூல்களையும் எழுதியுள்ளார். Continue reading

சரியான நேரம்; தவறான முடிவு

8 Dec

cpm

உயர் மதிப்புள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் 8-இல் அறிவித்ததற்கு நாடு முழுவதும் பரவலான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. தங்களது பணப்புழக்கத்தில் குறைவு ஏற்பட்டாலும், தொழில்களில் நெருக்கடி உருவானபோதும், வங்கிகளில் கால்கடுக்க நிற்க நேரிட்ட நிலையிலும், பெருவாரியான மக்கள் அரசின் இந்த அதிரடியை வரவேற்றுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தை விழுங்கும் கருப்புப் பணத்துக்கு எதிரான யுத்தமாகவே மோடியின் நடவடிக்கையை மக்கள் கருதுவது பல கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது. அதேசமயம், பாஜகவின் எதிர்க்கட்சிகள் இத்திட்டத்தில் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி அரசியல் நடத்த விழைகின்றன.

குறிப்பாக காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. காங்கிரஸின் தராதரம் அனைவரும் அறிந்தது. ஆனால், நெறிசார்ந்த அரசியல் நடத்தும் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடுதான் வருத்தமளிக்கிறது. Continue reading

கண்ணாடி ஒளியிழையின் தந்தை

6 Dec
narinder-singh-kapany-2

’கண்ணாடி ஒளியிழையின் தந்தை’ நாரிந்தர் சிங் கப்பானி

 

நவீன உலகை வடிவமைத்த பொருள்களில் கண்ணாடி ஒளியிழை பிரதானமானது. அதிவேக தகவல் தொடர்புக்கு வித்திட்ட கண்ணாடி ஒளியிழை (Fibre Optics) கண்டுபிடிக்கப்பட்டு சரியாக 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதைக் கண்டறிந்தவர், இந்தியாவைச் சேர்ந்த நாரிந்தர் சிங் கப்பானி. அவரை உலக விஞ்ஞானிகள்    ‘கண்ணாடி ஒளியிழையின் தந்தை’ என்று அழைக்கின்றனர்.

இயற்பியல் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், கல்வியாளர், எழுத்தாளர், தொழில் முனைவோர் எனப் பல பரிமாணங்களை உடையவர் நாரிந்தர் சிங் கப்பானி. எண்டோஸ்கோபி போன்ற மருத்துவ உபகரணங்களுக்கான அடிப்படையைக் கண்டுபிடித்தது, லேஸர் அறுவைச் சிகிச்சைக்கான கருவிகளை வடிவமைத்தது, சூரிய ஆற்றல் கருவிகளை உருவாக்கியது உள்ளிட்ட 120 கண்டுபிடிப்புகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளைப் பெற்றுள்ளவர் சிங். Continue reading