Archive | January, 2017

மலேரியாவுக்கு மஞ்சளில் மருந்து கண்டறிந்தவர்

30 Jan
gp1

கோவிந்தராஜன் பத்மநாபன்

மருத்துவம், விவசாயம், சுகாதாரம்,  சூழலியல் உள்ளிட்ட பல துறைகளில் தற்போது உயிரித் தொழில்நுட்பம் (Bio Technology) கோலோச்சுகிறது. உயிர் வேதியியல், மூலக்கூறு உயிரியல், மரபணுப் பொறியியல், நுண்ணுயிரியல், உயிர்த்தகவல் தொழில்நுட்பம் ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டதாக இன்று பெருவளர்ச்சி கண்டுள்ள துறை இது. 1970-களில்தான் இத்துறை கல்வித்துறையிலும் ஆராய்ச்சியிலும் இடம் பெற்றது. இத்துறையில் ஆரம்பகால விஞ்ஞானியாக நுழைந்து, நாட்டின் முன்னோடியாகத் திகழ்பவர், கோவிந்தராஜன் பத்மநாபன்.

அடிப்படையில் உயிர் வேதியியலாளரான (Bio Chemist) கோவிந்தராஜன், மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக மஞ்சளிலிருந்து எடுக்கப்பட்ட கர்கமின் (Circumin) என்ற மூலக்கூறைப் பயன்படுத்தி கூட்டு மருந்து தயாரிப்பதில் வெற்றி கண்டவர். பல உயர்பதவிகள் கிடைத்த நிலையிலும், அவற்றைத் தவிர்த்து தீவிரமான தொடர் ஆய்வுகளில் ஈடுபட்ட அவரால், அடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தேவையான கள ஆதாரங்களும், வசதிகளும், ஆய்வு அடிப்படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. Continue reading

Advertisements

கணநேரச் சறுக்கலில் வில்லனான நாயகர்கள்!

26 Jan

marina-protest

அண்மையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை அகற்றுவதற்காக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தபோது, இதை முன்னரே செய்திருக்கலாமே என்று முதல்வர் பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், “இப்போதுதான் அதற்கான சூழல் ஏற்பட்டது’ என்று பதில் கூறினார்.

உண்மைதான். அந்தச் சூழலை உருவாக்கியவர்கள் மாணவர்கள், இளைஞர்கள். சென்னை மெரீனா கடற்கரையிலும், தமிழகம் முழுவதிலும் ஆயிரக் கணக்கில் குழுமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அளித்த நிர்பந்தமே, இந்த அவசரச் சட்டம் உருவாகக் காரணம்.

தமிழகத்தில் நிலவிய அசாதாரணச் சூழலை உணர்ந்த மத்திய அரசும், மாநில அரசின் முயற்சிகளுக்குத் துணை நின்று ஒரே நாளில் அவசரச் சட்டத்தைத் தயாரிக்க உதவியதுடன், அதற்கு ஆளுநர் ஒப்புதலையும் அளித்தது.

இதுதான் மக்கள்சக்தியின் மாண்பு. மக்களுக்காகத் தான் சட்டங்களே தவிர, சட்டங்களுக்காக மக்கள் அல்ல என்பது நிலைநாட்டப்பட்ட அற்புதமான தருணம் அது.

நியாயப்படி அந்தத் தருணம், ஜனவரி 17 முதல் அதற்கான போராட்டத்தை முன்னெடுத்த மாணவ சமுதாயம் கொண்டாடியிருக்க வேண்டிய அரிய தருணம். ஆனால், “எங்களுக்கு அவசரச் சட்டம் தேவையில்லை; எங்களுக்கு நிரந்தரச் சட்டம்தான் வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்து, யதார்த்தத்தை உணராமல், மாணவர்கள் தவறு செய்தார்கள்.

ஜல்லிக்கட்டுடன் நேரடித் தொடர்புடையவரும் அதுதொடர்பான வழக்கை நீண்டகாலமாக நடத்துபவருமான ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர், காங்கேயம் காளைகளைக் காக்க தனிநபராக உழைத்துவரும் கார்த்திகேய சிவசேனாபதி போன்றவர்கள் அரசின் முயற்சியை ஆதரித்தும், போராட்டத்தின் திசை மாறுவதை எச்சரித்தும், போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டனர். அப்போதும் மாணவர்கள் இறங்கிவரவில்லை. மக்கள்திரள் அவர்களது புத்தியை கிறுகிறுக்கச் செய்துவிட்டது.

அந்த கணம் விதியின் கணம் போலும். கதாநாயகர்களாகப் போற்றப்பட்டிருக்க வேண்டிய அவர்கள், தற்போது போலீஸôரின் கடும் நடவடிக்கையால் பாதிப்புக்கு உள்ளானதுடன், தேச விரோதிகளாகவும் பார்க்கப்படுவதன் காரணம், விதியல்லாமல் வேறென்ன?

சென்னையை கலவர பூமியாக்கிய வன்முறையாளர்களுடன் மாணவ சமுதாயமும் சேர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. அதற்கு, அவர்கள் எடுத்த தவறான முடிவே வித்திட்டது. Continue reading

கடமை தவறாத கலங்கரை விளக்கம்

22 Jan
akraychaudhuri

அமல்குமார் ராய் சௌத்ரி

இந்திய விஞ்ஞானிகளில் சத்யேந்திரநாத் போஸ், ஜெகதீச சந்திர போஸ், சர். சி.வி.ராமன், மேகநாத் சாஹா, ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். முன்னேர்களான இவர்களைப் பின்பற்றியே பின்னேர்களாக இளம் விஞ்ஞானிகள் படை உருவானது. அத்தகைய முன்னேர்களில் இடம்பெறத் தக்க தகுதி கொண்டிருந்தும் தேசிய அளவில் கவனம் பெறாது போனவர், கோட்பாட்டு இயற்பியல் மற்றும் அண்டவியல் விஞ்ஞானி அமல்குமார் ராய் சௌத்ரி.

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் (General Relativity Theory) விடுபடாத புதிர்களைப் போக்கும் விதமாக ராய் சௌத்ரி உருவாக்கிய சமன்பாடு, கோட்பாட்டு இயற்பியலில் முக்கிய இடம் பெறுகிறது. அதற்கு ராய் சௌத்ரி சமன்பாடு (Raychaudhuri Equation) என்றே பெயர்.

பொது சார்பியல் கோட்பாட்டில் ஒருமைகள் (Singularities) எழுவதைத் தவிர்க்க முடியாது என்ற அவரது கருத்து, பென்ரோஸ்- ஹாக்கிங் ஒருமைத் தேற்றத்தை நிரூபிக்க உதவுகிறது. பெருவெடிப்பு, ஈர்ப்பு விசையை விஞ்சும் கிரகங்களின் சுழற்சி உள்ளிட்ட வியப்பான அண்டவியல் (Cosmology) யூகங்களை தெளிவடையச் செய்வதாக இச்சமன்பாடு கருதப்படுகிறது. Continue reading

விசா மறுக்கப்பட்ட விஞ்ஞானி!

10 Jan
r-chidambaram-1

ஆர்.சிதம்பரம்

இந்தியா இதுவரை இரண்டு முறை அணுவெடிப்பு சோதனைகளை நடத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள போக்ரான் என்னுமிடத்தில், 1974 மே 18-இல் ‘சிரிக்கும் புத்தர்’என்ற பெயரில் முதல்முறை சோதனை நடைபெற்றது. 1998 மே 11-இல் ‘ஆப்பரேஷன் சக்தி’ என்ற பெயரில் இரண்டாவது சோதனை நடைபெற்றது. இவ்விரண்டு சோதனைகளிலும் பங்கேற்று ஒருங்கிணைத்தவர், அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம். சுருக்கமாக ஆர்.சிதம்பரம்.

1936 செப். 12-இல் சென்னையில் பிறந்தார் சிதம்பரம். அவரது ஆரம்பக் கல்வி மீரட்டில் கழிந்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்த அவர் இயற்பியலில் இளநிலை ஹானர்ஸ் பட்டம் பெற்றார் (1956). அப்போது சென்னை பலகலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். Continue reading