Archive | February, 2017

விண்வெளி ஆய்வுக்கு நவீனக் கருவிகளை உருவாக்கியவர்

28 Feb

 

ஏ.எஸ்.கிரண்குமார்

ஏ.எஸ்.கிரண்குமார்

கடந்த 2017, பிப்ரவரி 15-ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வரலாற்றில் ஒரு பொன்னாள். இதுவரை பல அரிய சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியிருந்தாலும், பிப். 15-இல் 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணைச் சாடிய பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட், உலக அளவில் இந்தியாவின் மதிப்பை சிகரத்துக்கு உயர்த்தியது.

அந்தச் சாதனையின் பின்புலத்தில் இருந்து இஸ்ரோ நிறுவனத்தை வழிநடத்தியவர் அதன் தற்போதைய தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார். செயற்கைக்கோள்களில் பொருத்தப்படும் கருவிகள் குறித்த நிபுணத்துவத்திலும், அவற்றை இயக்கும் திறனிலும் ஆழ்ந்த அனுபவம் கொண்ட அவர், இந்திய விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும், இந்திய அரசின் விண்வெளித் துறை செயலராகவும் 2015 முதல் உள்ளார். Continue reading

Advertisements

இரு முறை நோபல் பரிசு கைநழுவிய இந்திய விஞ்ஞானி

21 Feb
george-sudarshan-1

இ.சி.ஜார்ஜ் சுதர்ஸன்

 

உலக அளவில் புகழ் பெற்ற நோபல் பரிசு, அதைத் தீர்மானிக்கும் ஸ்வீடன் குழுவினரிடையே காணப்படும் பாரபட்சம் காரணமாக அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகிறது. இதற்கு மிகப் பொருத்தமான, வருத்தத்துக்குரிய சான்று, இரு முறை நோபல் பரிசு தேர்வுக் குழுவால் நிராகரிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி இ.சி.ஜார்ஜ் சுதர்ஸன்.

கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானியான ஜார்ஜ் சுதர்ஸன், குவான்டம் இயற்பியலில் பல முன்னோடி முடிவுகளை வெளியிட்டவர். அவரது இரு கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலான ஆய்வுகளுக்காக பிற விஞ்ஞானிகள் இரு முறை நோபல் பரிசு பெற்றனர்.

அவரது வி-ஏ கோட்பாடு தொடர்பான முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட எலக்ட்ரோவீக் கோட்பாட்டுக்காக, ஷெல்டன் கிளாஸோவ், முகமது அப்துஸ் சலாம், ஸ்டீவன் வெயின்பெர்க் ஆகியோர் 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றனர்.

அதேபோல, அவரது சுதர்ஸன்- கிளாபர் பிரதிநிதித்துவ கோட்பாட்டுக்காக, அதில் சம பங்களித்த ராய் ஜே கிளாபருக்கு மட்டும் 2005-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவ்விரு தருணங்களிலும், உலக விஞ்ஞானிகளின் பரிந்துரைகளை ஏற்க மறுத்து, இந்திய விஞ்ஞானி ஜார்ஜ் சுதர்ஸனை நோபல் பரிசுக் குழு நிராகரித்தது. இது நோபல் குழுவின் உள் அரசியலை அம்பலப்படுத்தியது.

ஆனால், தத்துவ மேதை ஜி.கிருஷ்ணமூர்த்தியின் சீடரான ஜார்ஜ், நோபல் பரிசு இழப்பை நீர்க்குமிழியுடன் ஒப்பிட்டார். “முதல்தளம் கட்டாமல் இரண்டாவது தளத்தை எழுப்புவது சாத்தியமில்லை. எனினும், இரண்டாவது தளம் கட்டியவர்களுக்கு பரிசு கிடைத்ததே மகிழ்ச்சி’ என்றார் அவர். Continue reading

நோபல் பரிசு பெற்ற சகோதர நாட்டின் விஞ்ஞானி

15 Feb
abdus-salam1

முகமது அப்துஸ் சலாம்

இந்திய துணைக் கண்டம் உலகுக்கு அளித்த விஞ்ஞானிகளுள், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துஸ் சலாம் குறிப்பிடத் தக்கவர். நோபல் பரிசு பெற்ற முதல் பாகிஸ்தானியர், முதல் இஸ்லாமிய விஞ்ஞானி, உலகு தழுவிய பார்வையுடன் குவான்டம் இயற்பியலை வளர்க்க முயன்றவர், தனது தாய்நாட்டை அணு ஆயுத நாட்டாக்கியவர் எனப் பல பெருமைகளுக்கு உரியவர் முகமது அப்துஸ் சலாம்.

அவர் சார்ந்த சிறுபான்மை மதப்பிரிவான அஹமதியாக்கள் பாகிஸ்தான் அரசால் சிறுமைப்படுத்தப்பட்டபோதும், அவரது ஆராய்ச்சி முயற்சிகளுக்கு உள்நாட்டில் பலவித தடைகளைச் சந்தித்தபோதும், தனது தாய்நாடு அறிவியல் ஆராய்ச்சியில் உயர்வதற்கான பணிகளை விடாமுயற்சியுடன் செய்தவர் சலாம். அவரை  ‘பாக். விஞ்ஞான உலகின் தந்தை’ என்று இப்போது பாராட்டி மகிழ்கின்றனர். Continue reading

செவ்வாய் ஆய்வுத் திட்டத்துக்கு வித்திட்டவர்

7 Feb
கே.ராதாகிருஷ்ணன்

கே.ராதாகிருஷ்ணன்

விண்வெளியின் ரகசியங்களை அறிய உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். அதில் குறிப்பிடத் தக்கது, மனிதர்கள் வாழ ஏற்ற கிரகமாக செவ்வாய் இருக்குமா என்பது குறித்ததாகும். இந்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் (இஸ்ரோ) கால் பதித்துள்ளது. அதற்காக, ‘மங்கள்யான்’ என்ற பெயரில் ஆளில்லாத விண்கலம் 2013 நவம்பர் 5-இல் விண்ணுக்கு ஏவப்பட்டது.

இந்த விண்கலம் 2014 செப். 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில்  வெற்றிகரமாக இணைந்தது. அதன்மூலம்,முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இத்திட்டத்துக்கு வித்திட்டவர், இஸ்ரோவின் அப்போதைய தலைவராக இருந்த கொப்பில்லில் ராதாகிருஷ்ணன். சந்திரனை ஆராயும் இரு திட்டங்களிலும் (சந்திரயான்-1, 2)  அவரது பங்களிப்பு உண்டு. Continue reading