Archive | March, 2017

அன்றுபோல் இன்று இல்லை

31 Mar

தமிழ்நாட்டிலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இரு பருவத் தேர்வு (செமஸ்டர்) முறையை 1977-இல் சென்னை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், கற்பித்தலில் கல்லூரி ஆசிரியர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் அந்த முறை கொண்டுவரப்பட்டது.

செமஸ்டர் முறையில் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கு ஒதுக்கப்பட்டன. தவிர ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுத வேண்டி வந்தது. அதற்கு மாநிலம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.

எந்த ஒரு புதிய முறை அறிமுகமாகும்போதும் அது குறித்த சந்தேகங்கள் எழுவது இயல்பு. அப்போது தமிழ்நாட்டில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் செ.அரங்கநாயகம். அதிமுக ஆட்சியைப் பிடித்த ஆரம்பகாலம் அது. மாணவர்களின் போராட்டத்தால் அரசுக்கு சங்கடமான சூழல் உருவாகி இருந்தது. Continue reading

Advertisements

ஹெச்டி தொலைக்காட்சியின் தந்தை

28 Mar

அருண் நேத்ராவளி

உலகை மாற்றிய கண்டுபிடிப்புகளில் தொலைக்காட்சிக்கு பேரிடம் உண்டு.  ஆனால், 1926-இல் ஜான் பெயர்டு கண்டுபிடித்த இயந்திர இயக்க தொலைக்காட்சியை (Mechanical TV) இப்போது நாம் கண்டால் வியப்பாக இருக்கும். அதிவேகக் காணொலிகளை மிகத் துல்லியமாகக் காணவும் கேட்கவும் உதவக் கூடியதாக இப்போதைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இன்றைய தொலைக்காட்சி, வடிவத்திலும் தொழில்நுட்பத்திலும் பலமடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கருப்பு-வெள்ளை தொலைக்காட்சி, வண்ணத் தொலைக்காட்சி, அனலாக் தொழில்நுட்ப தொலைக்காட்சி, எண்மத் தொலைக்காட்சி என்று வளர்ந்த தொலைக்காட்சித் தொழில்நுட்பத்தின் உச்ச நிலை ஹெச்டி தொழில்நுட்பமாகும். உயர் வரையறு தொலைக்காட்சி தொழில்நுட்பம் (High-Definition Television) எனப்படும் ஹெச்டி, வழக்கமான தொலைக்காட்சி முறைமைகளை விட பல மடங்கு பகுதிறன் கொண்ட நிகழ்படமாகும்.

இத்தொழில்நுட்பத்தை உருவாக்கியவர், இந்திய கணினிப் பொறியாளர் அருண் நேத்ராவளி. உலக அளவில் பிரபல ஆராய்ச்சி நிறுவனமான பெல் லேபாரட்டரியின் (Bell Laboratories) தலைவராகப் பொறுப்பேற்று பல நூறு விஞ்ஞானிகளை வழிநடத்தியவர் அவர். Continue reading

பிரபஞ்சத்தின் ரகசியத்தை ஆராயும் இந்திய விஞ்ஞானி

21 Mar

தாணு.பத்மநாபன்

பிரபஞ்ச ரகசியம் புதிராகவே இருக்கிறது. ஊழிக்காலத்தில் பெருவெடிப்பால் ஏற்பட்ட பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளிதான் பூமி. இங்கிருந்துகொண்டு. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அநத பெருவெடிப்பின் பின்புலத்தை ஆராய்கிறான் மனிதன். எட்ட முடியாத தூரத்தில் உள்ள பிரபஞ்சத்தின் மையப்புள்ளி குறித்த ஆய்வுகளும், கோட்பாடுகளும் யூகமான தேற்றங்களும் விஞ்ஞானிகளை தொடர்ந்து இயக்குகின்றன. அதுவே அண்டவியல் துறையாக விரிவடைந்திருக்கிறது.

இத்துறை, கோட்பாட்டு இயற்பியலும் கணிதமும் சேர்ந்த கலவை. கண்ணுக்குப் புலனாகும், நம்மால் கையாளப்படும் பொருள்கள் மீதான கோட்பாட்டு இயற்பியல் சமன்பாடுகளின் வாயிலாக, பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆழித்தீயின் இயங்குமுறையை யூகமாக அறிகின்றனர் விஞ்ஞானிகள். விண்ணியல் தொலைநோக்கி சோதனைகளும் செயற்கைக்கோள் ஆய்வுகளும் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில்,  விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தொடர்கிறது. அதற்கு கணிதம் உதவுகிறது.

இந்த ஆய்வில் உலக அளவில் பிரபலமான விஞ்ஞானிகளில் இந்தியர்களும் இருப்பது பெருமிதம் அளிப்பதாகும். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர், தாணு.பத்மநாபன். பிரபஞ்ச இயக்கத்துக்குக் காரணமான கருப்பு ஆற்றல் குறித்த அவரது ஆய்வுகள் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளன. கோட்பாட்டு இயற்பியல், அண்டவியல் விஞ்ஞானியான அவர், ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் (General Relativity Theory) போதாமையை விளக்கி 20 வயதிலேயே ஆய்வுக் கட்டுரை எழுதியவர்! Continue reading

அண்டார்டிகாவை ஆராய்ந்த பெண் விஞ்ஞானி

14 Mar

அதிதி பந்த்

நிலம் தெரியாத அளவுக்கு எங்கும் பனி படர்ந்திருக்கும் பரந்து விரிந்த பூமி. சத்தமில்லாத, வேகமான பனிக்காற்று. மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 30 டிகிரி செல்சியல் வரையிலான உடலை ஊடுருவும் குளிர்ச்சி. இதுதான் அண்டார்டிகா. புவியின் தென்துருவத்திலுள்ள மனிதர் வாழாக் கண்டம்.

பென்குவின் பறவைகளும் சில கடல்வாழ் உயிரினங்களும் மட்டுமே அண்டார்டிகாவில் வாழ்கின்றன. அங்கு செல்லும் மனிதர்களின் விரல்கள் உணர்ச்சியற்றுப் போகும். தகுந்த பாதுகாப்புக்கவசம் இல்லாவிட்டால் சில மணி நேரத்தில் உடல் செயலிழந்து மரணம் நிச்சயம்.

பனி உறைந்த பகுதி என்பதால் புவி அடுக்குகளில் மாசற்ற தன்மை இங்கு மட்டுமே காணப்படுகிறது. எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிலவியல் மாற்றங்களை அறிய பொருத்தமான இடமாக இப்பகுதி உள்ளது.

இத்தகைய ஆபத்தான பகுதியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவது அதனால்தான்.

நிலவியல், புவியியல், மானுடவியல், கடலியல், உயிரியல் விஞ்ஞானிகளுக்கு தகவல் சுரங்கமாகவும், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சில ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் உள்ள அண்டார்டிகாவில் இந்தியாவும் 1981-இல் ஆராய்ச்சியில் கால் பதித்தது.

பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, அதற்கான முயற்சிகள் துவங்கின. அண்டார்டிகா ஆய்வில் பிற எந்த நாடுகளுக்கும் இந்தியா சளைத்ததில்லை என்று நிரூபிக்கும் விதமாக, அண்டார்டிகாவில்  ‘தக்ஷிண கங்கோத்ரி’ என்ற ஆய்வு மையம் ராணுவ உதவியுடன் 1984-இல் அமைக்கப்பட்டது.

பனிப்புயலில் இம்மையம் மூழ்கிய பிறகு, 2010-இல் ‘மைத்ரி’ என்ற ஆய்வு மையமும், 2015-இல்  ‘பாரதி’ என்ற ஆய்வு மையமும் அங்கு நிறுவப்பட்டன.

இம்மையங்களில் பாதுகாப்பான சூழலில் இருந்தவாறு இந்திய விஞ்ஞானிகள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளில் அண்டார்டிகா மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCAOR) ஈடுபட்டுள்ளது.

இதுவரை 25-க்கு மேற்பட்ட முறை விஞ்ஞானிகள், ராணுவப் பணியாளர்கள் கொண்ட இந்தியக் குழுவினர் அண்டார்டிகாவில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவற்றில் மூன்றாவது, ஐந்தாவது ஆய்வுக் குழுக்களில் (1983) இடம்பெற்றவர் மகாராஷ்டிர பெண் விஞ்ஞானியான அதிதி பந்த். Continue reading