Archive | May, 2017

ரிசாட் செயற்கைக் கோளின் திட்ட இயக்குநர்

31 May

ந.வளர்மதி

உலக அரங்கில் இந்தியா முதன்மை பெற அறிவியல் துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கடும் உழைப்பை நல்கி வருகிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் 2015-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதி.

கதிரலை உணர் கருவி (Radar) மூலமாக விண்ணிலிருந்து புவிப்பரப்பை படமெடுத்து அனுப்பவல்ல ரிசாட்-1 (RISAT-1) செயற்கைக் கோளை 2012, ஏப்ரல் 26-இல் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி – சி9 ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தியது. அந்த ரிசாட்-1 செயற்கைக் கோளின் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவரான வளர்மதி.

1858 கி.கி எடையுள்ள ரிசாட்-1, ஒரு புவிநோக்கு செயற்கைக் கோள் ஆகும். இதன் திட்டச் செலவு ரூ.490 கோடி முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது என்ற சிறப்பு இதற்குண்டு. இதிலுள்ள செயற்கை துளை கதிரலை உணர் கருவி (Synthetic Aperture Radar), இரவிலும், கடும் பனிமூட்டத்திலும், மேகத் திரளை ஊடுருவியும் படமெடுக்கும் திறன் கொண்டது. Continue reading

அண்டவியல் ஆய்வில் திருப்பத்தை உருவாக்கிய இந்தியர்

23 May

அபய் வசந்த் அஷ்டேகர்

பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கான காரணத்தை அறிய உதவும் ஆய்வுகளை அண்டவியல் (Cosmology) மேற்கொள்கிறது. இத்துறையில் புதிய திருப்பத்தை உருவாக்கிய கோட்பாட்டை வடிவமைத்தவராக, அமெரிக்கா வாழ் இந்திய விஞ்ஞானியான அபய் வசந்த் அஷ்டேகர் போற்றப்படுகிறார்.

பிரபஞ்சத்தை ஆராயும் கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானிகளை சென்ற நூற்றாண்டில் இரு பெரும் கோட்பாடுகள் வழிநடத்தின. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு (General Relativity Theory- 1915) அதில் முதன்மையானது. ஈர்ப்புவிசை (Gravity) காலவெளியின் (SpaceTime) ஒரு வடிவியல் பண்பு என்றார் ஐன்ஸ்டீன்.

அடுத்து மேக்ஸ் பிளாங்க் உள்ளிட்டவர்களால் நிறுவப்பட்ட குவான்டம் இயங்கியல் கோட்பாடு (Quantum Mechanics- 1920)  நுண்ணணுக்களின் கட்டுப்பாடற்ற இயக்கத்தை வரையறுத்தது.

ஆயினும் இவ்விரு கோட்பாடுகளுக்கும் ஒத்த தன்மையை உறுதிப்படுத்த இயலாமல் விஞ்ஞானிகள் தவித்து வந்தனர். இரு கோட்பாடுகளும் தன்னளவில் நிரூபிக்கப்பட்டவையாக இருப்பினும், இரண்டிலும் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

இவ்விரண்டையும் இணைப்பதன் வாயிலாக, இரு கோட்பாடுகளின் நிறைவின்மையை பூர்த்தி செய்ய இயலும் என்ற பார்வையுடன் ஆராய்ந்த விஞ்ஞானிகளும் இருந்தனர்.

இந்நிலையில் தான், பொது சார்பியல் கோட்பாட்டில் பொருளின் திசை குறிப்பிடாததை உணர்ந்த இந்திய விஞ்ஞானி அபய் அஷ்டேகர், குவாண்டம் இயங்கியலை அத்துடன் இணைப்பதன் மூலமாக, புதிய கருத்தாக்கத்தை உருவாக்கினார். அது அபய் மாறிகள் (Abhay Variables- 1986) என்று அழைக்கப்படுகிறது. Continue reading

அம்பேத்கருக்கு காந்தியர்களின் மறுப்பு

22 May

நாட்டின் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய மகாத்மா காந்திக்கும், தலித் மக்களின் விடுதலைக்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கருக்கும் இடையிலான மோதல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெறுவதாகும். அது, தனிப்பட்ட தலைவர்களிடையிலான மோதல் மட்டுமல்ல.

தலித் (பட்டியலின) மக்கள் முன்னேறாமல் விடுதலை சாத்தியமில்லை என்று உணர்ந்திருந்த காந்தி, ஹரிஜன முன்னேற்றத்தை காங்கிரஸின் ஓர் அடிப்படைக் கொள்கையாகவே கொண்டிருந்தார். ஆனால் நாட்டு விடுதலையைவிட தலித் மக்களின் விடுதலையே முதன்மையானது என்பது அம்பேத்கரின் கொள்கை. Continue reading

‘பிரம்மோஸ்’ ஏவுகணையின் தந்தை!

16 May

ஆ.சிவதாணு பிள்ளை

அணு ஆயுதங்கள், ஏவுகணைகள் என பலவிதமான போர் ஆயுதங்களுடன் உலகில் அனத்து நாடுகளும் இருக்கும்போது, எந்த ஒரு நாடும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருக்க முடியாது. எனவே இந்தியாவின் பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையானவற்றை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அணு ஆயுதங்களும் ஏவுகணைகளும் இந்தக் கண்ணோட்டத்துடன்தான் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. நமது நாட்டின் ‘பிரம்மோஸ்’ அதிவேகத் தாக்கு ஏவுகணை அந்த அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் சென்று 600 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. இதன் வேகம் Mach 30. இந்திய – ரஷிய கூட்டு நிறுவனத்தின் தயாரிப்பு இது. ஆயுத உற்பத்தியில் வெளிநாட்டுக் கூட்டுறவை சாத்தியப்படுத்திய முதல் திட்டம் இதுவே. இதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்து நடைமுறைப்படுத்தியவர் விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளை. Continue reading

மொழி என்பது பாலம்

13 May

கடல்வழி வணிகம் செய்யப் புறப்பட்ட சாதுவன் கப்பல் கவிழ்ந்ததால் நாகர் தீவில் கரை ஒதுங்குகிறான். அப்போது அவனைக் கொல்லத் தயாராகும் நாகரின மக்களிடம் அவர்களது தாய்மொழியான நாக மொழியில் பேசுகிறான் சாதுவன். அதைக் கேட்டு மகிழ்ந்த நாகர்கள் அவனை விடுவித்ததுடன், அவனுக்கு விருந்துபசாரமும் செய்கின்றனர். அவர்களுக்கு புத்த தருமத்தை உபதேசித்து நாடு திரும்புகிறான் சாதுவன்.

-இது மணிமேகலை காப்பியத்தில் இடம்பெறும் ஒரு கதை. பிற மொழி ஒன்றை அறிந்திருப்பதன் பயனை இக்கதையால் உணர முடிகிறது. மணிமேகலையை தமிழின் சிறந்த காப்பியமாகப் போற்றும் நாம், இந்தக் கதை கூறும் முக்கிய கருத்தை அறிந்திருக்கிறோமா?

தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டிவிட தற்போது சிலர் தீவிரமாக முயன்று வருவதைக் காணும்போது, சாதுவன் கதை நினைவில் வருவதைத் தடுக்க முடியவில்லை. Continue reading

இந்திய தொலைதொடர்பு புரட்சியின் தந்தை

9 May

சாம் பிட்ரோடா

அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த இந்திய விஞ்ஞானி ஒருவர் பணி நிமித்தமாக 1981-இல் புதுதில்லி வந்திருந்தார். சிகாகோவிலுள்ள தனது மனைவிக்கு தொலைபேசியில் பேச அவர் முயன்றபோது தொடர்பு கிடைக்கவில்லை. அதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த தொலைதொடர்புத் துறை நிபுணரான அவர், அந்த நிலையை மாற்ற முடிவெடுத்தார்.

இந்திய தொலைதொடர்புத் துறையின் உடனடித் தேவைகள் குறித்த அறிக்கையை பிரதமருக்கு அவர் அனுப்பிவைத்தார். பிரதமர் இந்திரா காந்திக்கு அந்த அறிக்கை பிடித்துப்போக, அந்த விஞ்ஞானியை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

சர்வதேசப் புகழ் பெற்ற அமெரிக்காவாழ் இந்தியரான அந்த விஞ்ஞானி சாம் பிட்ரோடா. உலக அளவிலும் இந்தியாவிலும் தொலைதொடர்புத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்தியவர் அவர்.

1984-இல் இந்தியா வந்த சாம் பிட்ரோடா, பிரதமர் இந்திரா காந்தியிடம் தொலைதொடர்புத் துறையை நவீனமயமாக்குவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். துரதிர்ஷ்டவசமாக சில மாதங்களில் அவர் கொல்லப்பட்டாலும், அடுத்து பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, சாம் பிட்ரோடாவின் திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவர்கள் இருவரும் கைகோர்த்ததன் விளைவாக, இந்திய தொலைதொடர்புத் துறை நவீனமயமானது. Continue reading

ஹெச்1பி விசாவுக்கு கட்டுப்பாடு:  இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? 

8 May
 
 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பு, இப்போது உலக அளவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் பணிபுரிய தாற்காலிகமாக அனுமதிக்கப்படும் பிற நாட்டு திறன்மிகு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவை ஏப்ரல் 3 முதல் நிறுத்திவைத்து அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
 .
அமெரிக்கக் குடிமக்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கவே இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
 .
 இந்த உத்தரவால் இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. ஆனால், டிரம்ப் ஆணையால் உண்மையில் அமெரிக்காவுக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும்; இந்தியா சமாளித்துக் கொள்ளும் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

Continue reading

புரதக்கூறுகளை ஆராயும் உயிரி வேதியியல் விஞ்ஞானி

2 May

பத்மநாபன் பலராம்

தற்காலத்தில் வளர்ந்துவரும் முக்கியமான துறையாக உயிரி வேதியியல் துறை (Bio Chemistry) உள்ளது. உயிரினங்களுக்குள் நிகழும் வேதியியல் செயல்முறைகளை ஆராயும் துறை இது. புரதங்கள், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, கரு அமிலங்கள் ஆகியவை குறித்த ஆய்வை இத்துறை மேற்கொள்கிறது.

இவற்றில் புரதக்கூறுகள் குறித்த ஆராய்ச்சியில் நிபுணராக விளங்குகிறார் விஞ்ஞானி பத்மநாபன் பலராம்.  பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) இயக்குநராக இருந்தவரான அவர், மூலக்கூறு உயிரி இயற்பியல், உயிரி கரிம வேதியியல் பிரிவுகளிலும் நிபுணராவார். Continue reading