அம்பேத்கருக்கு காந்தியர்களின் மறுப்பு

22 May

நாட்டின் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய மகாத்மா காந்திக்கும், தலித் மக்களின் விடுதலைக்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கருக்கும் இடையிலான மோதல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெறுவதாகும். அது, தனிப்பட்ட தலைவர்களிடையிலான மோதல் மட்டுமல்ல.

தலித் (பட்டியலின) மக்கள் முன்னேறாமல் விடுதலை சாத்தியமில்லை என்று உணர்ந்திருந்த காந்தி, ஹரிஜன முன்னேற்றத்தை காங்கிரஸின் ஓர் அடிப்படைக் கொள்கையாகவே கொண்டிருந்தார். ஆனால் நாட்டு விடுதலையைவிட தலித் மக்களின் விடுதலையே முதன்மையானது என்பது அம்பேத்கரின் கொள்கை.

காந்தியின் பின்னால் நாடே அணிதிரண்டது, தலித் மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட அம்பேத்கருக்கு பெரும் தடையாக விளங்கியது. எனவே காந்தியை அம்பேத்கர் கடுமையாக விமர்சித்தார். காந்தி அதைப் பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அவரது காயங்களின் வலியை உணர்ந்துமிருந்தார்.

இந்நிலையில், 1945-இல் ‘காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதோருக்குச் செய்தது என்ன?’ என்ற நூலை அம்பேத்கர் வெளியிட்டார். அந்நூலுக்கு காந்தி எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. என்றபோதும், தனது நிழலான ராஜாஜியையும், தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் க.சந்தானத்தையும், அந்நூலுக்கு சரியான விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி, ராஜாஜி எழுதிய ‘அம்பேத்கருக்கு மறுப்பு’, க.சந்தானத்தின்  ‘அம்பேத்கரின் ஆய்வறிக்கை: மறு ஆய்வு’ ஆகிய நூல்கள் வெளியாகின. காந்தியையும் அம்பேத்கரையும் மறுவாசிப்பு செய்ய வேண்டிய தற்போதைய சூழலில், அவ்விரு நூல்களையும் தொகுத்து ஒரே நூலாக காந்திய இலக்கியச் சங்கம் வெளிட்டுள்ளது.

நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பகுதியும் தர்க்கரீதியாக இருப்பதுடன், நயத்தக்க நாகரிகத்துடன் இலங்குகிறது. அம்பேத்கரின் நூலிலிருந்தே காந்தியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் மேற்கோள்களை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டுவது சிறப்பு. இந்நூலுக்கு ஆதாரமான காந்தியின் கடிதங்களை மருத்துவர் சுனீல் கிருஷ்ணன் தமிழில் வழங்கியிருக்கிறார்.

காந்தியைக் காரணமின்றி வசைபாடுவதும், அம்பேத்கரின் முழுமையான கருத்துகளைப் புரிந்துகொள்ளாமல் அவரை வழிபடுவதும் ஓர் அரசியல் பிழைப்பாகவே மாறியுள்ள சூழலில், இந்நூல் புதிய வெளிச்சம் பாய்ச்சுவதாக உள்ளது. சரித்திரத்தையும் அரசியலையும் புரிந்துகொள்ள விரும்புவோர் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

***

அம்பேத்கருக்கு மறுப்பு – ராஜாஜி,
அம்பேத்கரின் ஆய்வறிக்கை: மறு ஆய்வு– க.சந்தானம் 
(இரு நூல்கள் அடங்கியது)

தமிழில்: பூ.கொ.சரவணன், மா.பாதமுத்து

156 பக்கங்கள், விலை: ரூ. 130,

காந்திய இலக்கியச் சங்கம்,
காந்தி நினைவு அருங்காட்சியக வளாகம்,
மதுரை- 625 020,

தொலைபேசி: 0452-253 3957.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: