Archive | June, 2017

சர் சி.வி.ராமன் பரம்பரையை வளர்த்தவர்

27 Jun

எஸ்.ராமசேஷன்

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் (1888- 1970) , இந்தியாவில் அடிப்படை அறிவியல் வளர்வதற்குத் தூண்டுகோலாக இருந்தவர். அவரது அடியொற்றிப் பணியாற்றிய விஞ்ஞானிகள் தலைமுறை அப்போது உருவானது. வெங்கட்ராமனின் மறைவை அடுத்து ஒரு வெற்றிடம் உருவானபோது, அந்த வெற்றிடத்தை நிரப்புபவராக அமைந்தார், அவரது மருமகனும், நேரடி சீடருமான எஸ்.ராமசேஷன். அவரும் ராமனைப் போலவே ஒளியியல் விஞ்ஞானி.

ராமன் ஆராய்ச்சிக் கழகம், இந்திய அறிவியல் அகாதெமி, பெங்களூரு இந்திய அறிவியல் கழகம், நிகழ் அறிவியல் சங்கம் ஆகியவற்றில் ராமன் வகித்துவந்த இடத்தை பூர்த்தி செய்ததுடன், அந்த நிறுவனங்களுக்கு புது மெருகூட்டியவர் ராமசேஷன். அது மட்டுமல்ல, ராமனின் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இரு தொகுதிகளாகத் தொகுத்து வழங்கியவரும் அவர்தான். ராமனின் சுயசரிதையையும், அவருடன் இணைந்து ராமசேஷன் எழுதியுள்ளார். Continue reading

Advertisements

பொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்

20 Jun

பி.சி.வைத்யா

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடும் சிறப்பு சார்பியல் கோட்பாடும்,  சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டவை. அண்டவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கருதுகோள்கள் அவை. அவற்றில் பொது சார்பியல் கோட்பாட்டின் இந்தியப் பிரதிநிதி போலவே இயங்கினார், இங்குள்ள கணிதப் பேராசிரியர் ஒருவர். அது மட்டுமல்ல, பொது சார்பியல் கோட்பாட்டின் (General  Theory of Relativity)  சிக்கலான சமன்பாடுகளை விடுவிப்பதற்கான புதிய வழிமுறையையும் அவர் உருவாக்கினார். அவர், பேராசிரியர் பிரஹலாத் சுனிலால் வைத்யா. சுருக்கமாக பி.சி.வைத்யா என்று அழைக்கப்படுகிறார்.

பி.சி. வைத்யாவின் கண்டுபிடிப்பு,  ‘வைத்யா மெட்ரிக்’ என்று அவர் பெயரிலேயே உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. கணிதப் பேராசிரியர், கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானி, கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், காந்தியவாதி எனப் பன்முகங்களைக் கொண்டு, மனித சக்தியின் எல்லையற்ற தன்மைக்கு நிரூபணமாக விளங்கியவர் அவர். Continue reading

கட்டணமா, கந்து வட்டியா? வங்கிகளின் அடாவடிக்கு தீர்வு என்ன?

19 Jun

அண்மைக்காலமாக, வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிக்கும் போக்கு வங்கிகளிடையே அதிகரித்து வருகிறது. சிறப்பு சேவைகளை வழங்கவும், சேவைகளின் தரத்தை உயர்த்தவும் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுவதாக வங்கி நிர்வாகங்கள் கூறுகின்றன. இதனால் வங்கி நிர்வாகங்கள் மீதும், மத்திய அரசு மீதும் மக்களின் அதிருப்தி பெருகி வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு மேற்கொண்ட உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாடு முழுவதும் வங்கி மூலமான பணப் பரிமாற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை வங்கிக் கணக்கில் வராமலே கணக்கின்றி புழக்கத்தில் இருந்து வந்த ரொக்கப்பணம் வங்கி மூலமான பரிமாற்றத்துக்கு வர மத்திய அரசின் நடவடிக்கை வித்திட்டுள்ளது.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளின் போது பல சிரமங்கள் நேரிட்டபோதும், அவற்றைத் தாங்கிக் கொண்டு அரசுக்கு மக்கள் ஆதரவளித்தனர். நாட்டிலுள்ள கருப்புப் பணத்தை ஒழிக்க அந்த நடவடிக்கை தேவை என்றுணர்ந்த அவர்கள் ரொக்கப் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் அரசை ஆதரித்தனர்.

அரசின் அந்த நடவடிக்கை காரணமாக தற்போது சுமார் ரூ. 16.8 லட்சம் கோடி ரொக்கம் வங்கிக் கணக்குகளுக்குள் வந்துள்ளது. இதன்மூலமாக பல வங்கிகளின் நிதியிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், வங்கி முறையை நம்பி தங்கள் பணத்தைச் செலுத்திய பலருக்கும் வங்கிகள் தற்போது தொந்தரவு தரத் துவங்கி இருக்கின்றன. Continue reading

இந்தியாவின் அணுசக்தி துறை வல்லுநர்

13 Jun

ஸ்ரீகுமார் பானர்ஜி

நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் அணுசக்தித் துறை பெரும்பங்கு வகிக்கிறது. இத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது மட்டுமல்ல, வல்லரசு நாடுகளுக்கு இணையாக அணு ஆயுத பலமும் பெற்றுள்ளது.

இத்துறையை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர், இந்திய அணுக்கருவியலின் தந்தையான ஹோமி ஜஹாங்கீர் பாபா. ராஜா ராமண்ணா, ஆர்.சிதம்பரம், அனில் ககோட்கர் உள்ளிட்ட பல விஞ்ஞானிகளின் இடையறாத உழைப்பாலும், தெளிவான திட்டமிடலாலும் அணுசக்தித் துறையில் இந்தியா சிகரத்தை எட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக (2009 -2012) இருந்த உலோகவியல் பொறியாளர் ஸ்ரீகுமார் பானர்ஜிக்கும் பேரிடம் உண்டு.

உலோகங்களின் இயற்பியல், வேதியல் பண்புகளை ஆராய்வதன் அடிப்படையில் உலோகவியல் இரு பிரிவாக உள்ளது. அதில், அணுசக்தித் துறைக்கு அடிப்படையான உலோக இயற்பியல் (Physical Mettalurgy) பிரிவில் வல்லுநராக பானர்ஜி விளங்குகிறார். Continue reading