Archive | July, 2017

பலதுறை வித்தகரான படிக்காத மேதை

25 Jul

ஜி.டி.நாயுடு

மானுட முன்னேற்றத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் சாதனையாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளால்தான் எழுதப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிப்பாளர்களில் உயரிய நட்சத்திரமாகக் கருதப்படுகிறார். ஒருவர் கண்டுபிடிப்பாளராக இருக்க அவர் கற்றறிந்த விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு எடிசன் முன்னோடி உதாரணம். அந்த வகையில், இந்தியாவிலும் ஒரு பிறவி மேதை இருந்தார். பலதுறை வித்தகரான அவர்  ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்டார். அவர்தான் தமிழகத்தின் ஜி.டி.நாயுடு.

ஆட்டொமொபைல்ஸ், மின்னியல், இயந்திரவியல், விவசாயம், புகைப்படவியல் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய ஜி.டி.நாயுடு, சிறந்த தொழில் வல்லுநரும் ஆவார். படிக்காத மேதையான அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன. Continue reading

Advertisements

தோல் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்தியவர்

18 Jul

எலவார்த்தி நாயுடம்மா

உலக தோல் பொருள் உற்பத்தியில் இந்தியா 13 சதவீதம் வகிக்கிறது. காலணிகள் தயாரிப்பில் இந்தியா உலக அளவில் 9 சதவீத உற்பத்தியுடன் இரண்டாமிடம் வகிக்கிறது; இதில் தோலாலான காலணிகளின் பங்களிப்பு 50 சதவீதம்.

சென்ற நிதியாண்டில் நாட்டின் தோல் பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ. 39,000 கோடி. உள்நாட்டு அளவில் தோல் பொருள்களின் வர்த்தக மதிப்பு ரூ. 78,000 கோடி. மொத்தமாக தோல் தொழில் வர்த்தகத்தின் மதிப்பு ரு. 1.17 லட்சம் கோடி.

இத்துறையை நம்பி சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்; இவர்களில் 35 வயதுக்கு உள்பட்டோரின் எண்ணிக்கை 55 சதவீதம்; பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதம்.

தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் தோல் தொழிலில் பெரும்பங்கு வகிக்கின்றன. தேசிய அளவில் தோல் பொருள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 40 சதவீதம்.

இந்தப் புள்ளிவிபரங்களை இங்கு சுட்டிக்காட்ட காரணம் இருக்கிறது. தோல் பதனிடுதல், தோல் பொருள் உற்பத்தியில் இந்தியா சாதித்திருப்பதன் பின்னணியில் ஒரு விஞ்ஞானியின் கடின உழைப்பு இருக்கிறது. அவர்தான், எலவார்த்தி நாயுடம்மா. Continue reading

கருந்துளை கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கிய விஞ்ஞானி

11 Jul

அப்பாஸ் மித்ரா

அண்டவியலில் கருந்துளை  கோட்பாடு முதன்மையானது.   பிரபஞ்சத்தில் ஆற்றல் ஒடுங்கிய நட்சத்திரங்கள் கருந்துளைகளாக மாறி இருப்பதாகவும்,  பிரபஞ்சத்தின் மையமேகூட மாபெரும் கருந்துளைதான் என்றும் ஒரு  கோட்பாடு உள்ளது. எரிபொருள் தீர்ந்த விண்மீன்கள் இறுதியில் அடர்த்தி அதிகமாகி கருந்துளையாவதாகக் கருதப்படுகிறது. இதனை தொலைநோக்கிகளாலோ, செயற்கைக்கோள் கருவிகளாலோ கண்டறிய முடியாது. ஆனால், விண்வெளியில் கருந்துளைகளின் அருகே செல்லும் பால்வளி மண்டலம் சிதைவடைவதை அதிலிருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் பதிவு மூலம் உணர முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அதீத ஈர்ப்பு விசை கொண்ட கருந்துளைகள் மின்காந்தக் கதிர்களையும் ஒளியையும்கூட உறிஞ்சிவிடும் திறன் கொண்டவை. அதன் நிகழ்வெல்லை அருகில் செல்லும் விண்மீன்களையும் கிரஹித்துக் கொள்ளும் ஈர்ப்பு விசை கருந்துளைகளுக்கு உண்டு என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் கருந்துளை (Black Holes) கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.  உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் ஸ்குவார்ஸ்சைல்டு,  சுப்பிரமணியம் சந்திரசேகர், ஸ்டீபன் ஹாகிங் போன்றோரால் பிரபலமாக்கப்பட்ட இத் தத்துவம், கோட்பாட்டு இயற்பியலில் பெரும் தாக்கம் செலுத்தி வருகிறது.

ஆனால், கருந்துளைகள் என்ற ஒன்று அண்டத்தில் இல்லவே இல்லை என்று 2009-இல் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டு,  விஞ்ஞானிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், இந்திய விஞ்ஞானி ஒருவர்.  அவர்தான்,  விண்வெளி இயற்பியல் விஞ்ஞானி அப்பாஸ் மித்ரா. Continue reading

ரயில் பயணங்களில்…

9 Jul

வீட்டுக்குள் நுழைந்தபோதே ஒருவித அசாதாரண நிலையை உணர்ந்தேன். குழந்தை ஹேமா வரவேற்பறையில் தனியே விளையாடிக் கொண்டிருந்தாள். வழக்கமாக மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கும் மனைவி கண்மணியைக் காணவில்லை. ஷோபாவில் அமர்ந்திருந்த அம்மா, கையிலிருந்த பேப்பர் நழுவியது தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். தூர்தர்ஷனில் எட்டு மணி செய்தியில், தில்லியில் ஜனாதிபதி நேபாளப் பிரதமரைச் சந்தித்துக் கொண்டிருந்தார்.

“கண்ணம்மா” குழந்தையை வாரி எடுத்தேன். “எங்கடா அம்மாவைக் காணோம்?”

ஹேமா படுக்கையறையைக் காட்டினாள். இந்நேரத்துக்கு கண்மணி படுப்பவள் அல்லவே? உடல்நிலை சரியில்லையோ? பதற்றத்துடன் அறைக்குள் நுழைந்தேன்.

நான் வந்த அரவம் கேட்டிருக்க வேண்டும். படுக்கையிலிருந்து எழுந்தாள் கண்மணி. நீண்டநேரம் அழுதது போல கண்கள் வீங்கியிருந்தன. என்னைக் கண்டதும் கண்கள் கலங்கின. அப்படியே தோளில் சாய்ந்து விம்மத் தொடங்கிவிட்டாள்.

கண்மணி தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். மிகவும் தைரியசாலி என்று பெயர் எடுத்தவள். திருமணமான பிறகு இந்தப் பத்தாண்டு காலத்தில் அவள் அழுது நான் பார்த்ததில்லை.

மணக்கோலத்தில் தாய்வீட்டிலிருந்து கிளம்பியபோதுகூட இறுக்கமாக இருந்தாளே தவிர அழவில்லை. எனது அத்தை, மாமாவின் கண்ணீரைக் கண்டபோதும் அவள் அழவில்லை. பிறகு சொன்னாள்: “பெண்கள் புகுந்த வீடு போகும்போது அழ வேண்டும் என்று நியதியில்லை. நானென்ன வேற்றுக் கிரகத்துக்கா போகிறேன்? எனக்கு இப்போது இரண்டு வீடு. எப்போது நினைத்தாலும் நம் வீட்டுக்கு நீங்கள் அழைத்துவர மாட்டீர்களா என்ன?”

அப்படிப்பட்டவள் இன்று அழுகிறாள் என்றால் ஏதோ பிரச்னை இருக்கிறது. “அம்மா ஏதாவது பேசினார்களா?” என்றேன், அம்மாவுக்கும் அவளுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிந்தும். அவர்களது கெமிஸ்ட்ரியைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். தலையசைத்தாள். விம்மினாள்.

“நான் மதியம் உங்களுக்கு போன் பண்ணினேன். ஏன் எடுக்கவில்லை?” கேள்வியிலேயே கோபம் தெறித்தது. அப்போதுதான், அலுவலக மீட்டிங்கின்போது அவளிடமிருந்து போன் வந்தது நினைவு வந்தது. தொடர்ந்த அலுவல்களில் அவளை மறுபடி அழைத்துப் பேச மறந்துவிட்டேன். வழிந்தேன்.

வழக்கமாக நான் வழிந்தால் அவளது கோபம் புஸ்வாணமாகிவிடும். இன்று அப்படியில்லை. மறுபடியும் விம்மினாள். “என்னம்மா, என்ன ஆச்சு?”

இந்தக் கேள்விக்கென்றே காத்திருந்தவள் போல, கொட்டித் தீர்த்துவிட்டாள். கண்களில் கண்ணீர் இன்னும் வற்றவில்லை. கேட்டு முடிந்தபோது எனக்கு சிக்கலின் தீவிரம் புரிந்தது. முகம் தெரியாத அந்த அற்பப் பதரின் மீது கோபமும் வந்தது. Continue reading