Archive | August, 2017

திரவ உந்துவிசை ராக்கெட்டை உருவாக்கிய விஞ்ஞானி

29 Aug

நம்பிநாராயணன்

சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு இந்திய விண்வெளித் துறை வளர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகளின் கடின உழைப்பு உள்ளது. குறிப்பாக, திரவ உந்துவிசை ராக்கெட் என்ஜினை (Liquid Propulsion Engine) வடிவமைத்த அற்புதமான விஞ்ஞானி ஒருவரது பங்களிப்பு முக்கியமானது. அவர்தான், ராக்கெட் பொறியாளரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான எஸ்.நம்பிநாராயணன். இந்தியாவின் கிரையோஜெனிக் என்ஜின் வடிவமைப்பிலும் நம்பியின் பங்களிப்பு முக்கியமானது.

ஆனால், போற்றிப் புகழ வேண்டிய அவருக்கு நமது மத்திய, மாநில அரசுகள் இழைத்த அநீதி, என்றும் தீராத களங்கமாகவே இருக்கும். பாகிஸ்தானுக்கு ராக்கெட் ரகசியங்களை விற்க முயன்றதாக அவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டு, அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அந்தக் குற்றச்சாட்டின் பின்புலத்தில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. தீவிர விசாரணைக்குப் பிறகு, உளவுக் குற்றச்சாட்டுகளிலிருந்து மத்தியப் புலனாய்வு அமைப்பாலும், உச்ச நீதிமன்றத்தாலும் அவர் விடுவிக்கப்பட்டபோதும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி இன்னமும் தீரவில்லை. நம்பி மீதான தவறான நடவடிக்கையால் இந்தியாவின் கிரையோஜெனிக் தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் பல ஆண்டுகள் தள்ளிப்போனது. இப்போதும்கூட தன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியவர்களை எதிர்த்து தனியொருவராக அவர் போராடிக் கொண்டிருக்கிறார். Continue reading

Advertisements

‘இந்தியாவின் எடிசன்’ என புகழப்பட்ட விஞ்ஞானி!

24 Aug

சங்கர் அபாஜி பிஸே

ஆப்செட் அச்சு முறை வரும் வரை அச்சுத் தொழில்நுட்பம் மிகவும் சிரமமானதாகவும், அதிக உழைப்பை வேண்டுவதாகவும் இருந்தது. அத்தகைய காலகட்டத்தில் அச்சுத் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்தி, சிரமத்தைக் குறைத்தார் ஓர் இந்திய விஞ்ஞானி. அவரை  ‘இந்தியாவின் எடிசன்’ என்றே அமெரிக்க விஞ்ஞானிகள் புகழ்ந்தனர். அவர் 1916-இல் உருவாக்கிய அச்செழுத்து வார்ப்பு இயந்திரம் அவரது பெயராலேயே புகழ்பெற்று மேலும் பல பத்தாண்டுகளுக்கு அதீதப் பயன்பாட்டில் இருந்தது.

அந்த விஞ்ஞானி, டாக்டர் சங்கர் அபாஜி பிஸே. தனது வாழ்நாளில் இருநூறுக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பிஸே, 40 காப்புரிமைகளைக் கொண்டவராகவும் விளங்கினார். தொழில்நுட்ப வல்லுநர், விஞ்ஞானி, வேதியியலாளர், தொழில் நிறுவனர் எனப் பன்முகங்களுடன் சிறந்து விளங்கிய பிஸே, தனது முன்னோடியாகக் கருதியது, அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனைத்தான். Continue reading

தாவரவியல் பூங்காக்களை உருவாக்கியவர்

15 Aug

கைலாஷ் நாத் கௌல்

 

அரிய தாவரங்களின் ஒருங்கிணைந்த தாவரவியல் பூங்காக்கள், அருகி வரும் தாவரங்களைக் காப்பதில் முதன்மை வகிக்கின்றன. அத்தகைய தாவரவியல் பூங்கா அமைப்பதில் நிபுணராக விளங்கியவர்,  தாவரவியல் விஞ்ஞானியான கைலாஷ் நாத் கௌல். விவசாய விஞ்ஞானி, இயற்கை ஆர்வலர், சுதந்திரப் போராட்ட வீரர், தோட்டக்கலை நிபுணர், மூலிகையியல் வல்லுநர் எனப் பல பரிமாணங்களை உடையவர் கௌல்.

காஷ்மீரைப் பூர்விகமாகக் கொண்ட ஜவஹர்மல் கௌல் அடலுக்கும் ராஜ்பதிக்கும் 1905-இல் தில்லியில் மகனாகப் பிறநதார் கைலாஷ் நாத் கௌல். அவரது தாத்தா ஜெய்ப்பூரில் மன்னரின் திவானாக இருந்தவர். கௌலின் சகோதரி கமலா பின்னாளில் இந்தியாவின் முதல் பிரதமராக விளங்கிய ஜவஹர்லால் நேருவின் மனைவி. இவரது மனைவியான ஷீலா கௌல், கல்வியாளராகவும், காங்கிரஸ் கட்சியில் முன்னணி அரசியல்வாதியாகவும் இருந்தவர்.

செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த கைலாஷ் நாத் கௌல், தாவரவியலில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். இளம் வயதிலேயே தாவரவியல் ஆராய்ச்சிக்காக பிரிட்டன் சென்ற அவர், கியூவில் உள்ள ராயல் பொட்டானிக் கார்டன் எனப்படும் உலகப் புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவில் பணியாற்றினார். அங்கு பணிபுரிந்த முதல் இந்திய விஞ்ஞானி அவரே. Continue reading

வழிகாட்டு கண்ணா!

14 Aug

 

கோகுலத்தில் வளர்ந்தவனே, கோபாலா, ஸ்ரீகிருஷ்ணா!

கோபியர்கள் மனங்கவர்ந்த கோபாலா, ஸ்ரீகிருஷ்ணா!

தேகமெலாம் கருநீல மேகமென உடையவனே!

தேசத்தைக் காத்திடவே எங்களுக்கு வழிகாட்டு!

(கோகுலத்தில்) Continue reading