Archive | 2:30 AM

பல லட்சம் மக்களைக் காத்த மருத்துவ விஞ்ஞானி

1 Aug

சர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி

1900-களில் வங்க மாகாணம் பல கொள்ளை நோய்களால் பந்தாடப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் அந்நோய்களுக்கு பலியாகினர். அந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்ததுடன், காலா அஸார் என்ற கொடிய நோய்க்கு அற்புதமான மருந்தையும் கண்டுபிடித்தார் மருத்துவரான சர் உபேந்திரநாத் பிரம்மச்சாரி. அவர் கண்டறிந்த ‘யூரியா ஸ்டிபமைன்’ என்ற மருந்து, பல லட்சம் மக்களின் உயிரைக் காத்தது.

அன்றைய பிகார் மாகாணத்தின் மோங்கிர் மாவட்டம், ஜமால்பூரில் ரயில்வே மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியவர் நீல்மோய் பிரம்மச்சாரி. புரி சங்கர மடத்தின் சந்யாசியாக இருந்த கோபால்பாரதி பிரம்மச்சாரியின் குடும்ப வழி வந்த அவர், பின்னாளில் ஜமால்பூர் நகராட்சி ஆணையராகவும் பணிபுரிந்தார். அவருக்கும் சௌரவ் சுந்தரிதேவிக்கும் மகனாக, 1873, டிச. 19-இல் பிறந்தார் உபேந்திரநாத் பிரம்மச்சாரி. Continue reading

Advertisements