’கழனி’ மின்னிதழுக்கு வாழ்த்து!

1 Jul

 

பல்லடத்தில் இயங்கும் ’ழ’கரம் இலக்கிய அமைப்பு சார்பில்,

விளம்பி வருடம், ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை

சகோதரர் திரு. சு.அ.ஹரிஹரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள

’கழனி’ மின்னிதழுக்கு எனது வாழ்த்துக் கவி இது…

 

பைந்தமிழ் உழவர்களின் கழனி வாழ்க!

 

விசும்பின் துளியால்,

பகலவனின் ஒளியால்,

இறைவனின் அளியால்,

மண்ணில் தவம் வளர்க்கும்

உழவரின் வியர்வையே

பசும்பயிராகிறது;

பசியனலை அணைத்து

அனைவரின் உயிராகிறது.

.

அதுபோல,

நமது இந்தக் கழனியில்,

தமிழென்னும் பைம்பொழிலில்

பொலியட்டும் நெல்மணிகள்!

விடியட்டும் நல்லுலகம்!

.

இவ்வினிய கழனியில்

முரட்டுக் களை போக்கி,

வருத்தும் முட்புதர்களை நீக்கி,

உழைப்பெனும் எருவிட்டு,

விழைவெனும் தழையிட்டு,

விளைச்சல் பெருக்குவோம்!

கவிதைக் கனிகளால்

கழனி மிளிரட்டும்!

கடவுள் அருளட்டும்!

 

காண்க:

கழனி- மின்னிதழ் (பிடிஎஃப் கோப்பு)

 

One Response to “’கழனி’ மின்னிதழுக்கு வாழ்த்து!”

Trackbacks/Pingbacks

  1. ’கழனி’ மின்னிதழுக்கு வாழ்த்து! – TamilBlogs - 02/07/2018

    […] 6 mins ago பொது Leave a comment 1 […]

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: