புதிய சித்தார்த்தன்

2 Jul

இந்திய தத்துவ ஞான மரபை அடித்தளமாகக் கொண்டு, வாழ்வின் நான்கு நிலைகளைப் பரிசீலிக்கும் வகையில், அதன் கடைசியில் வாழ்வின் இறுதி உண்மையை உணர்த்தும் விதமாக, ஜெர்மானிய எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய உலகப்புகழ் பெற்ற புதினம் சித்தார்த்தன்.

நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸே, கீழைத் தத்துவ விசாரத்தில் நாட்டம் மிகுந்தவர். அவரது ‘கீழ்நோக்கும் பயணம்’ என்ற நூல் அவரது பாரதப் பண்பாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்துவதாகும். அந்தக் கருத்துகளையே புதிய வடிவில் அனைவரும் எளிதில் ஏற்கும் வண்ணமாக இப்புதினமாக ஹெஸ்ஸே படைத்திருக்கிறார்.

இந்தப் புதினத்தின் நாயகன் சித்தார்த்தன் பிறப்பால் அந்தணன். தனது கல்வி அறிவால் உந்தப்பட்ட அவன் ஞானம் தேடி அலைகிறான். அவனது வழியில், பெற்றோரைத் துறத்தல், தோழன் கோவிந்தனின் அணுக்கம், சமணத் துறவு, புத்தர் சந்திப்பு, தாசி கமலாவுடன் இன்ப நுகர்வு, துறவு மனப்பான்மையுடன் செல்வமீட்டும் வாழ்வு, மகன் மீதான பாச மயக்கம், தோணிக்காரனின் வழிகாட்டல் ஆகியவை எதிர்ப்படுகின்றன. இறுதியில் அவனும் காலமென்னும் பெருநதியின் அறத்தை உணர்ந்து ஞானியாகிறான்.

இன்று, இந்தக் கணத்தில் ஓடுவதுதான் ஆறு. அதற்கு இறந்த காலமோ, எதிர்காலமோ இல்லை என்றறியும் நொடிப்பொழுதில் சித்தார்த்தன் மனத்தளைகளிலிருந்து விடுதலை பெறுகிறான். பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்யாசம் ஆகிய 4 நிலைகளே பாரதப் பண்பாட்டின் அடிநாதம். அவற்றை தனது விருப்பப்படி மாறுபட்ட படிநிலையில் அணுகும் சித்தார்த்தன், வழிகள் மாறினாலும், திசைகள் திகைக்கச் செய்தாலும், இலக்கை நோக்கிய பயணத்தில் உறுதியாக இருந்ததால், தானும் புத்தனாகிறான்.

1922-இல் ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்ட இப்புதினம், பிறகு ஆங்கிலம் வாயிலாக, தமிழின் முன்னோடி எழுத்தாளர் திருலோக சீதாராமினால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளரின் தத்துவப் புலமையும் மொழியுணர்வும் பண்பாட்டறிவும் இணைந்து மூல நூலுக்கு நம்பிக்கையான மொழியாக்கத்தை அளித்திருக்கின்றன என்று கூறினால் மிகையில்லை.

கௌதம புத்தரின் இயற்பெயரான சித்தார்த்தன் என்ற பெயரையே தனது நாயகனுக்குச் சூட்டி, அவனை புத்தருடன் சந்திக்கச் செய்து, அவருடன் முரண்படவும் வைப்பதில் எழுத்தாளரின் ஞான தாகம் புலப்படுகிறது. இந்தப் புதினத்தைப் படிக்கையில், பாரத தத்துவ ஞானத்தின் கனிச்சாறுகள் ஆங்காங்கே நம் மீது தெறித்து மகிழ்விக்கின்றன.

 

***

சித்தார்த்தன்

மூல ஆசிரியர்: ஹெர்மன் ஹெஸ்ஸே,

தமிழில்: திருலோக சீதாராம்.

168 பக்கங்கள்,விலை: ரூ. 100.

முல்லை பதிப்பகம்,

323/ 10, கதிரவன் காலனி, அண்ணா நகர்மேற்கு,

சென்னை– 40,

அலைபேசி: 98403 58301.

 

 

One Response to “புதிய சித்தார்த்தன்”

Trackbacks/Pingbacks

  1. புதிய சித்தார்த்தன் – TamilBlogs - 02/07/2018

    […] 1 min ago மருத்துவம் Leave a comment 1 […]

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: