நல்ல முயற்சி… ‘ழ’கரம் நண்பர்களுக்கு பாராட்டுகள்!

17 Sep

பல்லடத்தில் இயங்கும் ‘ழ’கரம் இலக்கிய வட்டம் அமைப்பு, தமிழகம் முழுவதிலும் இருந்து இளம் கவிஞர்களை வரவழைத்து சங்கமம் நிகழ்ச்சியை நேற்று (16.09.2018, ஞாயிற்றுக்கிழமை) நடத்தியது. நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பெண்மணிகளின் பங்களிப்பு வியப்பூட்டுவதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. இந்தப் படத்தில் நீங்கள் காண்பது கவிதை அமர்வில் பங்கேற்ற கவிதாயினிகளைத் தான்.

‘விடுதலைப்போரின் வேர்கள்’ என்ற தலைப்பிலான மூன்று அமர்வுகளிலான கவிதை வாசிப்பு, மதிய உணவு, ‘சமூக ஊடகங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறதா? ஆபத்தை உருவாக்குகிறதா?’ என்ற தலைப்பிலான பட்டிமன்றம், முகநூலில் தமிழ் வளர்ப்போருக்கு விருது, சட்டமன்ற உறுப்பினர் திரு. கரைப்புதூர் நடராஜன் பங்கேற்ற பரிசளிப்பு விழா என, நேர்த்தியாகத் திட்டமிட்டு இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய நண்பர்களுக்கு பாராட்டுகள்.

வேறொரு அலுவல் காரணமாக இந்த நிகழ்வில் என்னால் முழுமையாகப் பங்கேற்க இயலவில்லை. மாலையில் விழா நிறைவுறும் நேரத்தில் தான் இவ்விழாவில் பங்கேற்க முடிந்தது. தமிழ் மீதும் கவிதை மீதும் ஆர்வம் கொண்ட இத்துணை நண்பர்களை ஒருசேரக் கண்டபோது உள்ளம் நெகிழ்ந்தது. இதன் வெற்றிக்கு முகநூல் குழுமங்களே காரணம் என்பதை அறிந்தபோது, தொழில்நுட்பத்தை லாவகமாகப் பயன்படுத்தும் இளைய தலைமுறையினர் மீது பெருமிதம் ஏற்பட்டது.

இதுபோன்ற நிகழ்வுகள் மூலமாகவே தமிழ் அடுத்த நிலைக்கு வளரும். சொல் அல்ல, செயல் ஒன்றே வேண்டுவது என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டியுள்ள ‘ழ’கரம் இலக்கிய வட்ட நண்பர்கள் திருவாளர்கள் கவிஞர் மகிழ்வேல் பாண்டியன், க.அ.ஹரிஹரன், ஜெ.சுந்தரபாண்டியன், மயிலை கே.ரமேஷ், அரங்க.கோபால் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த எனது மாமாவும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலருமான பனப்பாளையம் திரு. மு.பாலசுப்பிரமணியம், அண்ணன், திரு. கொடுவாய் கே.ராஜேந்திரன், திருப்பூர் நண்பர்கள் திருவாளர்கள் கவிஞர் பக்தவத்சலம், சு.சத்யநாராயணன், ரா.வேலுசாமி, ராமசந்திரன் ஆகியோருக்கும் நன்றி! இந்நிகழ்வில் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

முகநூல் பதிவு (17.09.2018)

 

One Response to “நல்ல முயற்சி… ‘ழ’கரம் நண்பர்களுக்கு பாராட்டுகள்!”

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: