மானமுள்ள தமிழரா நீங்கள்?

7 Apr

 

2009இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, அந்நாட்டு அரசுக்கு பலவகையிலும் உதவியது, மன்மோகன் சிங் தலைமையிலான அன்றைய ஐ.மு.கூட்டணி அரசு. அதன்மூலமாகவே விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவம் நிர்மூலம் செய்தது.

அங்கு இலங்கையில் வம்சாவளித் தமிழர்களை கொத்துக் குண்டுகளால் இலங்கை ராணுவம் துவம்சம் செய்து கொண்டிருந்தபோது, இங்கே நாம் மக்களவைத் தேர்தலில் ஆழ்ந்திருந்தோம். ‘இந்திராவின் மருமகளே வருக!’ என்று வரவேற்பிதழ் வாசித்துக் கொண்டிருந்தார் தமிழினத் தலைவர் மு.க.

அப்போது ஐ.மு.கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்துமாறு இந்திய அரசு இலங்கையை வலியுறுத்தவில்லை. மாறாக திரைமறைவில் பல ராணுவ உதவிகளை அளித்தது. இதனை அன்றைய இலங்கை அதிபரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷேவே அண்மையில் பெங்களூரில் தி ஹிந்து நடத்திய கருத்தரங்கில் தெரிவித்திருக்கிறார்.

காண்க: தி ஹிந்து செய்தி
https://www.thehindu.com/…/article26…/BINARY/RajapaksaSpeech

2009 மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணிக்கும் இடையிலானதாக இருந்தது. பாஜக வெல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதன் காரணமாகவே, இலங்கை ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் பலரும் மறைவிடங்களில் இருத்தப்பட்டனர். இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு (மே 16, 2009), பாஜக வெல்லவில்லை என்பது தெரிந்த பிறகே, அங்கு பிரபாகரன் கொல்லப்பட்டார் (மே 17, 2009). இதை நாம் அனைவரும் அறிவோம்.

அந்தத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்திருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரனும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்; இலங்கை உள்நாட்டுப் போரும் திசை மாறி இருந்திருக்கும்; குறைந்தபட்சம், லட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், விதி வலியது. ஈழத் தமிழருக்காக முதலைக் கண்ணீர் சிந்திய திமுகவைத் தான் ஈழத் தமிழர்கள் நம்பி ஏமாந்தார்கள். திமுகவோ, இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி செய்த மன்மோகன் சிங் அரசைத் தாங்கிக் கொண்டிருந்தது.

இலங்கையில் போர் உச்சத்தை அடைந்தபோது, தமிழக மக்கள் பதைபதைத்தனர். எந்தவித நியாய உணர்வுமின்றி விமானங்களிலிருந்து கொத்துக் குண்டுகளை வீசும் சிங்கள ராணுவத்தின் அடாவடி கண்டு தமிழ் மக்கள் ஆவேசம் அடைந்திருந்தனர். அப்போது, மக்களின் உணர்வை மடைமாற்ற திமுக தலைவர் மு.கருணாநிதி ஓர் உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார்.

காண்க: கருணாநிதி உண்ணாவிரதம் (ஒன் இந்தியா இணைப்பு)
https://tamil.oneindia.com/…/tn-lankan-crisis-karunanidhi-o…

சென்னை அண்னா சமாதியில் 2009 ஏப்ரல் 27 ஆம் தேதி காலை முதல் மதியம் வரை அரை நாள் உண்ணாவிரதம் இருந்தார் அவர். இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர் அறிவித்தார். அதையடுத்து, அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இலங்கை அரசிடம் பேசிவிட்டதாகவும், போர் நிறுத்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். அதை ஏற்று கருணாநிதி அன்று அரைநாள் உண்ணாவிரதத்துடன் தனது கடமையை நிறைவு செய்தார். ஆனால், இலங்கையில் போர் நிறுத்தப்படவில்லை என்பதை அவரும் அறிவார்; நாம் அனைவரும் அறிவோம். மறுநாளே ‘போரை நிறுத்துவதாக இந்திய அரசுக்கு எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை’ என்று இலங்கை அரசு அறிவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

அன்று கருணாநிதி நினைத்திருந்தால் மத்திய அரசை ஆட்டிப் படைத்திருக்கலாம். இலங்கைப் போரையும் நிறுத்தி ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். ஆனால் பதவி சுகமும், சொத்து சேர்க்கும் வேகமும்தான் திமுகவினருக்கு பெரிதாக இருந்ததே தவிர, ஈழ சகோதரத் தமிழ் மக்கள் மீது அவர்களுக்கு கிஞ்சித்தும் பாசம் இருக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியானபோதும், அமைச்சரவையில் செல்வாக்கான துறைகளைப் பெறத்தான் திமுகவினர் போராடினர் என்பதையும், பிரபாகரன் கொல்லப்பட்டதைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதையும் தமிழகம் நேரில் கண்டது.

ஆனால், தமிழினவாதம் பேசும் மூடப்பதர்கள் இன்றும் திமுகவைத்தான் மாய்ந்து மாய்ந்து ஆதரிக்கின்றனர். கேட்டால் மதவாத பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்கின்றனர். இதே மதவாத பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்பதையோ, அங்கு போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மோடியின் அரசு ஆயிரக் கணக்கான வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருவதையோ அறியாதவர்கள் போல அவர்கள் நடிக்கிறார்கள்.

இலங்கைக்கு நல்ல நோக்கத்துடன் அமைதிப்படையை அனுப்பிய அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை எதிர்த்தவர்கள்தான் இவர்கள். அமைதிப்படையின் நோக்கம் திசை மாறி விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாக மாற்றப்பட்டது- இலங்கை அரசின் சூழ்ச்சியால். அந்த அபத்த நாடகத்தில் அநியாயமாக பலியானார் ராஜீவ்.

அன்றெல்லாம் காங்கிரஸ் கட்சியை விஷமாக வெறுத்தவர்கள் இன்று ராஜீவின் மகன் தலைமை வகிக்கும் காங்கிரஸுக்கு கொடி பிடிக்கிறார்கள். ஆக, இவர்களது இனமானம், மொழிப்பற்று என்பதெல்லாம் வெறும் வெளிவேஷம்.

இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் உறுதியான அரசு அமைந்துவிடக் கூடாது என்பது மட்டுமே இவர்களது கவலை. அவர்களது பகல் கனவுக்கு முட்டுக்கட்டையாக மோடி இருப்பதால், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் இவர்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறார்கள்.

இன்று இலங்கை அரசுடன் இந்திய அரசு நேசமாக இருப்பதுடன், தனது பிரதேச மேலாண்மையையும் நிரூபித்து வருகிறது. அதனால்தான் கடந்த ஐந்தாண்டுகளில் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் பெருமளவில் சுட்டுக் கொல்லப்படவில்லை. மோடி அரசு பதவியேற்ற பிறகான இந்த ஐந்தாண்டுகளில் ஒரே ஒரு மீனவர் மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார். ஐ.மு.கூட்டணி ஆட்சி நிலவிய 2004-20014 வரையிலான காலத்தில் இலங்கை ராணுவம் எல்லை கடக்கும் தமிழக மீனவர்களை எப்போது வேண்டுமாயினும் சுட்டுக் கொல்லும் நிலை இருந்ததை மறக்க முடியாது. அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேல் இருக்கும்.

காண்க: தமிழக_மீனவர்கள்_மீது_இலங்கை_கடற்படையின்_தாக்குதல்கள் (விக்கி இணைப்பு)

https://ta.wikipedia.org/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%A….

ஆக, இலக்கைத் தமிழர் விவகாரமோ, தமிழக மீனவர்கள் விவகாரமோ, எதுவாயினும் தமிழகத்தில் உள்ள தமிழினப் போலிகள் நடத்தும் நாடகங்களே பெருமளவிலான சேதாரத்தை ஏற்படுத்தி உள்ளன. இவர்கள் அனைவரும் ஆதரிக்கும் திமுக- காங்கிரஸ் கூட்டணியால் என்ன வகையான மாற்றங்களை நிகழ்த்த முடியும்?

வரலாற்றிலிருந்து படிப்பினை பெறாதவர்களுக்கு உலகம் தொடர்ந்து படிப்பினையை அளித்துக் கொண்டே இருக்கும். அனுபவம்தான் நமது ஆசான். இதை உணராதவர்கள் பகுத்தறிவுவாதி என்றோ, முற்போக்காளர் என்றோ கதைப்பதில் பொருள் இல்லை.

தன்மானமுள்ள தமிழின உணர்வாளர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

அரை நாள் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியா? குஜராத்தில் பிறந்தவராயினும் இலங்கைத் தமிழருக்கு வீடுகள் கட்டித் தரும் மோடியா? யார் உண்மையானவர்?

எந்தப் பக்கம் நீங்கள் நிற்கப் போகிறீர்கள்?
தமிழினப் படுகொலை நிகழ்த்தியவர்களை ஆதரிப்பவர்களையா?
இலங்கையில் சிதைக்கப்பட்ட தமிழர்தம் வாழ்வை மீட்க முயற்சிப்பவர்களையா?

உங்கள் சகோதரர்களின் எதிகாலம் உங்கள் கையில்!

 

-முகநூல் பதிவு (07.04.2019)

Advertisements

4 Responses to “மானமுள்ள தமிழரா நீங்கள்?”

 1. வேகநரி 08/04/2019 at 6:57 PM #

  விடுதலைப்புலிகள் அமைப்பினால் இலங்கையில் வெறித்தனமாக நடத்தபட்ட ஒரு போரை இனவாத அடிப்படையில் ஆதரிப்பது என்பது இந்திய நலன்கள்,இலங்கை தமிழர்கள் நலன்கள், உலக நலன்கள் இவற்றுக்கு எதிரானது ஆகும்.

  • Somi bank 11/04/2019 at 9:12 AM #

   “இலங்கை தமிழர்கள் நலன்கள்”
   .
   போரில் இறந்தது அப்பாவி இலங்கை தமிழர்களே
   கொன்றது சிங்கள அரசு

   • வேகநரி 01/05/2019 at 6:44 PM #

    //“இலங்கை தமிழர்கள் நலன்கள்”
    .போரில் இறந்தது அப்பாவி இலங்கை தமிழர்களே
    கொன்றது சிங்கள அரசு//

    எல்டிடிஈஅமைப்பு தன்னை எதிர்ததவர்கள் என்று கொன்று அழித்த இலங்கை தமிழர்களவிடவா இலங்கை அரசு போரில் கொன்றுள்ளது?
    அது தவிர எல்டிடிஈஅமைப்பு தனது பாதுகாப்பிற்காக அப்பாவி இலங்கை தமிழர்களை பயண கைதிகளாக பிடித்து வைத்திருந்தது தப்பியோடிதமிழர்களை சுட்டு கொன்றது கொடுமை.
    கேடு விளைவிக்கும் பயங்கரவாதம் எமது பிரதேசங்களில் இருந்து முற்றாக அகற்பட வேண்டும்.

    கேடு விளைவிக்கா பயங்கரவாதம் எமது பிரதேசங்களில் இருந்து முற்றாக அகற்பட வேண்டும்.

   • வேகநரி 04/05/2019 at 7:31 PM #

    //“இலங்கை தமிழர்கள் நலன்கள்”//
    விடுதலை புலிகள் என்கின்ற தீவிரவாத அமைப்பு தன்னை எதிர்த்தார்கள் என்பதிற்காக இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், பேராசியர்கள், தமிழ் பொதுமக்களை கொன்றது இலங்கை தமிழர்கள் நலன்களா?
    //The Liberation Tigers of Tamil Eelam (LTTE, or Tamil Tigers) use intimidation and threats to pressure Tamil families in the north and east of Sri Lanka to provide sons and daughters for military service. When families refuse, their children are sometimes abducted from their homes at night or forcibly recruited while walking to school. Parents who resist the recruitment of their children face retribution from the Tamil Tigers, including violence or detention. //
    இந்தியாவில் இருந்து முன்பு சென்ற தமிழர்கள் இலங்கையில் மிகவும் நல்ல நிலைமையில் வாழ்ந்து வந்தார்கள் . நூறாண்டுகளில் குடியேறிய தமிழர்கள் வறிய நிலையிலும் அங்கே இருந்தார்கள். நாங்க இலங்கை தமிழர்கள்- நீங்க இந்திய தமிழர்கள் என்று ஒதுக்கினார்கள்.அப்படி நன்றாக வாழ்ந்த இலங்கை தமிழர்களையே எல்டிடிஈ பல வருடங்களாக தான் நடாத்திய வெறி பிடித்த யுத்தத்தினால் ஏழைகளாக்கி விதவைகளையும் ஊனமுற்றவர்களையும் உருவாக்கியுள்ளது. இந்திய பிரதமர் அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் நலன்களுக்காக வீடு கட்டி கொடுக்க வேண்டிய நிலைமை.
    தீவிரவாதம் ஒரு புற்றுநோய் அகற்றபட வேண்டியது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: