திருக்குறளில் பொருளாதாரம்

29 Apr

திருக்குறளின் அமைப்பிலேயே அறம், பொருள், இன்பம் என்ற படிநிலைகள் உள்ளன. அறவழியில் பொருளீட்டி அதன்மூலம் இன்பம் துய்ப்பதே நல்வாழ்க்கை என்பதுதான் திருவள்ளுவர் வகுத்த சாசனம்.

இன்று பொருளாதார சிந்தனையாளர்கள் கூறும் பெரும்பாலான கருத்துகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் சொல்லிச் சென்றிருக்கிறார். அந்தக் கருத்துகளை உள்வாங்கி இந்நூலைப் படைத்திருக்கிறார், தமிழக மின்வாரியத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சீனி.வரதராஜன்.

இவ்வுலகில் நாம் நலமாக வாழ பணம் அவசியம். அந்தப் பணத்தை ஏன் ஈட்ட வேண்டும், அதை எப்படி பெருக்குவது, அதை எதற்காகப் பயன்படுத்துவது என்ற கேள்விகளுக்கான பதில்களை திருக்குறள் கருத்துகளால் தெளிவுபடுத்துகிறார் அவர்.

20 அத்தியாயங்களில் 120 துணைத் தலைப்புகளில் திருக்குறள் கூறும் பொருளியல் சிந்தனைகளை விளக்கும் நூலாசிரியரின் தேடுதல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெளிப்படுகிறது. தனது கருத்துகளுக்கு வலுச்சேர்க்க, வேதாகமம், திருக்குர்ஆன், தமிழ் இலக்கியங்கள், நிபுணர்களின் கருத்துகளையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டுகிறார்.

தீதின்றி வந்த பொருளால் மட்டுமே அறத்தோடு கூடிய வாழ்வும் இன்பமும் பெற முடியும் என்பதை குறளின்வழி விளக்குகிறார். எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழக்கையல்ல; அதேபோல எப்படி வேண்டுமானாலும் ஈட்டுவது பொருளுமல்ல என்பதை பொட்டில் அடிப்பதுபோலச் சுட்டிக் காட்டுகிறார்.

இந்நூலில் வள்ளுவரின் பொருளாதாரம் தொடர்பான 120 குறள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. பொருளீட்டுவதன் பயன் பொருளற்றவருக்கு உதவும் ஈதலே என்று கூறும் நூலாசிரியர், அதற்கு உறுதுணையாக மணிமேகலைக் காப்பிய மேற்கோளுடன், வாரன் பஃபெட்டின் தான தருமங்களையும் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

ஈட்டிய பொருளை பசிப்பிணி நீக்கச் செலவிடுதலே ஒருவன் சேர்த்துவைக்கும் அழியாக் கருவூலம் என்னும் குறளின் கருத்தை விளக்க வரும் நூலாசிரியர், இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாது கிடக்கும் பலகோடி நிதி அதன் உரிமையாளர்களுக்கு உதவுவதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறள் விளக்கங்களை ஆங்கிலத்திலும் அளித்திருப்பது சிறப்பு.

***

பணத்தினைப் பெருக்கு! ஏன்? எப்படி? எதற்கு?
-சீனி.வரதராஜன்

256 பக்கம், ரூ. 200

வெளியீடு: வி.மோகனா,
பிளாட்- 323, சித்தார்த் நட்டுரா,
40, வடக்குப்பட்டு பிரதான சாலை,
பெல் நகர், மேடவாக்கம்,
சென்னை- 600 100
தொலைபேசி: 94444 10012

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: