டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்

25 May

இந்திய அணுவியல் திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் விஞ்ஞானி ஹோமி ஜெஹாங்கீர் பாபா. இந்தியாவில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியின் தேவையை உணர்ந்த அவர் அதற்காக நிதியுதவி வேண்டி டாடா அறக்கட்டளைக்கு 1944இல் கடிதம் எழுதினார்.

அதை ஏற்று டாட்டா நிறுவனங்களின் தலைவரான ஜே.ஆர்.டி.டாட்டா அளித்த நிதியுதவியால் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் (Tata Institute of Fundamental Research- TIFR) 1945 ஜூன் 1இல் பெங்களூரில் நிறுவப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்நிறுவனம் அரசு நிறுவனமாகி மும்பைக்கு இடம் பெயர்ந்தது. தற்போது ஹைதராபாத்- கொலாபாவிலும் இதன் இரண்டாவது மையம் செயல்படுகிறது.

இயல் அறிவியல், கணிதம், உயிரி அறிவியல், கோட்பாட்டியல் கணினி அறிவியல் ஆகிய துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சிகளை நடத்துவதே டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தின் நோக்கம்.

இந்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் டிஐஎஃப்ஆர், பல்கலைக்கழக மானியக் குழுவால் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது; நாட்டின் தலைசிறந்த ஆராய்ச்சி நிலையங்களில் முதன்மையானது.

இங்கு பிஎச்.டி (ஆய்வு மாணவர்), ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி. ( இளநிலை மாணவர்), எம்.எஸ்சி. (இளநிலை ஆய்வு மாணவர்) ஆகிய மேற்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல், அறிவியல் கல்வி ஆகிய ஆறு துறைகள் உள்ளன.

இவையல்லாது, கீழ்க்கண்ட 6 ஆய்வு மையங்களும் டிஐஎஃப்ஆர் நிறுவனத்தின் மையங்களாகச் செயல்படுகின்றன.

1. பயன்பாட்டுக் கணித மையம், பெங்களூரு (CAM)
2. ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம், மும்பை (HBCSE)
3. சர்வதேச கோட்பாட்டு அறிவியல் மையம், பெங்களூரு (ICTS)
4. தேசிய உயிரியல் அறிவியல் மையம், பெங்களூரு (NCBS)
5. தேசிய ரேடியோ அஸ்ட்ரோ பிசிக்ஸ் மையம், புணே (NCRA)
6. டிஐஎஃப்ஆர் ஒருங்கிணைந்த அறிவியல் மையம், ஹைதராபாத் (TCIS)

மேலும் விவரங்களுக்கு: www.tifr.res.in

-தினமணி மாணவர் மலர்-2019

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: