Archive | மொழியாக்கக் கட்டுரை RSS feed for this section

பட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்…

10 Jul

-எம்.ஆர்.சிவராமன்

‘கற்பனையில் பிச்சைக்காரர்கள்கூட குதிரை சவாரி செய்யலாம். டர்னிப் கிழங்கு கடிகாரம் என்றால் அதையும்கூட கையில் அணியலாம்’ என இங்கிலாந்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மழலைக் கல்விப் பாடல் ஒன்று உண்டு. புதிய நிதிநிலை அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைவரின் ஆசைகளை இந்தப் பாடலுடன் ஒப்பிடலாம்.

இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையில் முதல் 90 நிமிஷங்கள் முந்தைய ஐந்தாண்டுகளில் தனது அரசு சாதித்தது என்ன என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் செய்யப்போவது என்ன என்றும் குறிப்பிட்டார். இந்த நிதிநிலை அறிக்கை அடுத்த ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டமாகவே அமைந்திருந்தது என்பது உண்மை. அதிகார வர்க்கமும், அமைச்சர்களும் மாநில அரசுகளும் சிரத்தையாக இந்த நிதிநிலை அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் வளர்ச்சி விகிதம் உயரும் என்பதில் சந்தேகமில்லை. Continue reading

ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாத முகவர் தவ்ஹீத் ஜமாத்!

10 May

-எஸ்.குருமூர்த்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும், இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் சகோதர அமைப்புகள் மட்டுமல்ல, உலகளாவிய இஸ்லாமிய அரசு என்ற கனவுடன் இயங்கும் ஐஎஸ்எஸ் அமைப்பின் முகவர்களும் கூட.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சித்தாந்த ரீதியாக இலங்கை தவ்ஹீத் ஜமாத்துக்கு மூத்த அமைப்பாகவும் வழிகாட்டும் அமைப்பாகவும் செயல்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பயங்கரவாதத்தை விதைக்கும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்துக்கு விசுவாசமானவையாகவும் இவை உள்ளன.

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் தீட்டிய சதித் திட்டத்தை இந்திய உளவு அமைப்புகள் முன்கூட்டியே கணித்து எச்சரித்தன. அதேசமயம் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் மீது மிகத் தாமதமாகவே நடவடிக்கை எடுத்தது. ஆயினும் இலங்கையில் நடைபெறவுள்ள பயங்கரத்தை முன்கூட்டியே எச்சரித்ததில் என்ஐஏவின் பங்கு அளப்பரியது.

இந்த சதித்திட்டத்தை என்ஐஏ எவ்வாறு கண்டறிந்தது?

Continue reading

இலங்கை படுகொலைக்கு தமிழகம் உடந்தையா?

10 May

-எஸ்.குருமூர்த்தி

இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 250}க்கும் மேற்பட்டோர் கொல்லப்ட்டனர்; 500}க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்த உதவியதற்காக பெருமிதம் கொள்வதாக ஐஎஸ்ஐஎஸ் (இராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) அமைப்பு பிரகடனம் செய்தது. அதாவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அந்தத் தாக்குதலை ஊக்குவித்தவர் மட்டுமே; அந்தத் தாக்குதலை நடத்தியவர் அல்ல. அப்படியானால் அந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர் யார்?

இந்தக் கேள்விக்கான பதில், இந்தியா, இலங்கை நாடுகளில் இருப்போர் அறியாததல்ல. இந்தப் படுகொலை நிகழ்வதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் குறித்து எச்சரித்த நாடு இந்தியா. இலங்கை அரசும் இந்தக் கொலை பாதகர்களை அறிந்தே இருந்தது. ஆனால் இந்தியாவின் எச்சரிக்கையை குப்பைக்கூடையில் போட்டது இலங்கை. அதேபோல இலங்கையில் குண்டுவெடிக்க உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்தியாவிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. உளவுத் தகவலைப் பெற்ற நாடும், அளித்த நாடும் இந்த விஷயத்தில் மந்தமாகவே நடந்துகொள்கின்றன.

இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே) என்ற அமைப்பின் தொண்டர்கள் மனித வெடிகுண்டுகளாக மாறவுள்ளதாக சிறப்பு உளவுத் தகவலை இந்திய அரசாங்கம் அளித்தது. இதுகுறித்து அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது இலங்கையில் நடந்த படுகொலைகளின் பின்னணியில் இருந்த சதியை இந்திய உளவுத் துறை கண்டறிந்ததை அசோசியேட் பிரஸ் சிலாகித்திருந்தது. தில்லியில் உள்ள ஐசிஎம் அமைப்பின் செயல் இயக்குநர் அஜய் சாஹ்னி “சதிகாரர்களின் உரையாடலை இடைமறித்து இந்திய உளவுத் துறை பெற்ற தகவல் மிகவும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் சதிக் குழுவை மட்டுமல்ல. அவர்களுடைய இலக்கு, தாக்கும் நேரம், சதிகாரர்கள் மறைந்திருந்த இடம் ஆகியவற்றையும் கண்டறிந்து, இலங்கை அரசை எச்சரித்தார்கள்’ என்கிறார். Continue reading

அனைவருக்கும் சலுகை மழை!

5 Feb

-எம்.ஆர்.சிவராமன், ஐ.ஏ.எஸ்.

தற்போதைய மத்திய அரசின் இறுதி ஆண்டில், முதன்றையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்புக் கிடைத்த நிதியமைச்சர் பியூஷ் கோயல், அதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு, தனது தனித்தன்மையை நிறுவி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் இடைக்கால பட்ஜெட்டை முழுமையான பட்ஜெட் என்று சொல்லத்தக்க விதமாகத் தயாரித்திருக்கிறார் கோயல். தேர்லுக்குப் பிறகு அமையும் புதிய அரசே இத்தகைய பெரும் செலவினங்கள், கணிசமான வரிச்சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அதனை மாற்றிக் காட்டி இருக்கிறார் நிதியமைச்சர்.

அவர் தனது வாய்ப்பை தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்க மக்களை இலக்காகக் கொண்டே செயல்படுகின்றன. நிதியமைச்சர் கோயலும் அதையே செய்திருக்கிறார்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்துவதாக முழக்கங்கள் மட்டுமே எழுப்பப்படுகின்றன. அவர்களது பிரச்னையின் ஆழத்தைக் கண்டறிவதில் பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதன் பலன் அவர்களை பொருளாதாரரீதியாகச் சென்றடைவதில்லை. இதனை நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, எதிர்க்கட்சியினர் வாயடைத்துப்போகும் விதமாக, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 உதவித்தொகையை அவர்களது வங்கிக் கணக்கிற்கே செல்லும் வண்ணம் அளிப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். Continue reading