அலட்சியத்தால் அதிருப்திக்குள்ளாகும் ஆடம்பர ரயில்!

25 Jun

கோவையிலிருந்து பெங்களூருக்கு அதீத எதிர்பார்ப்புகளுடன் அண்மையில் துவங்கிய இரண்டடுக்கு “உதய்’ எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் சேவை, அதன் சேவைக் குறைபாடுகள் காரணமாக பல புகார்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

இதுவரை, பெங்களூரு- சென்னை, பாந்ரா- ஜாம்நகர் (குஜராத்), விசாகப்பட்டினம்- விஜயவாடா (ஆந்திரம்) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் ஜூன் 10ஆம் தேதியிலிருந்து கோவை- பெங்களூரு இடையே இரு மார்க்கத்திலும் தனது சேவையைத் துவக்கியது (ரயில் எண்கள்: 22665, 22666). Continue reading

Advertisements

அபத்தம்

6 Jun

மூக்கு முட்ட சாப்பிடும்
தொழிலாளர்நல ஆய்வாளர்.

ஏக்கத்துடன் இலைஎடுக்கும்
குழந்தைத் தொழிலாளி.

ஸ்டெர்லைட் ஆலை முடக்கம்: தொழில் துறைக்கு எச்சரிக்கை!

4 Jun

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை அண்மையில் பொதுமக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டுவிட்டது. இந்நிலையில், தாமிர உற்பத்தி- தேவை- வர்த்தகம் குறித்த மறுபரிசீலனை தற்போது அவசியமாகி உள்ளது.

நமது நாட்டின் தாமிரத் தேவையில் சுமார் 35 சதவீதம் பங்களித்து வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது, வரும் நாட்களில் உற்பத்தித் துறையிலும் நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Continue reading

நெற்றிக்காசு

3 Jun

.

நெற்றிக்காசு
தெரியுமா?
‘பொட்டென போனவுடன்
நெற்றியில் வைக்கும்
வட்டக் காசு.

அறிவும் ஆலயமும்
ஆயிரம் சேர்த்தாலும்
முத்தும் அழகும்
முனைந்து சேர்த்தாலும்
‘பொட்டென’ போய்விட்டால்
வட்டக்காசே
வழித்துணை.

கோடீஸ்வரனாய் இருந்தாலும்
கோடித் துணி தான்.
இலவச இணைப்பாய்
காலைக் கட்டி,
நெற்றியில் 
வட்டக்காசு.
அதுவும்-
வெட்டியானுக்கு.

நெற்றிப்பொட்டின் 
மகத்துவம் இதுவே-
‘பொட்டென’ போகும் முன் 
புண்ணியம் செய்.
கட்டையில் போகும் முன் 
கருணை காட்டு.

நெற்றிப்பொட்டு
நினைவு படுத்தலே.
‘தவறுவதற்கு முன் 
தவறுகளைத் திருத்து.
தமாஷாக வாழ்ந்து 
தமாஷாகி விடாதே.
காலம் இன்னும் இருக்கிறது’.

.

விஜயபாரதம் (12.02.1999)
.