Tag Archives: அகத்துறை

அன்பெனப் படுவது…

10 May

ஆயிரம் கல்
தொலைவில் இருந்தாலும்
இதயங்கள்
அருகருகே இருப்பது.

பத்து நிமிடம்
பார்க்காமல் இருந்தாலும்
பரிதவித்துப் போவது.

Continue reading

சரி, அப்புறம்?

13 Apr

அவன் அழகன்; அருகில் அவள்.
அவள் மிக அழகி.
இருவரும் வாலிபப் பருவம்…

இதற்கு மேல் இவர்களை வர்ணிக்க வேண்டுமென்றால்,
சிறிது சிரமப்பட வேண்டும்.
என்னது சிரமப்பட்டே தான் தீர வேண்டுமா?
யாரது, யார் கேட்பது?
சரி, யாராயிருந்தால் என்ன?
நேயர் விருப்பமே அடியேன் கடமை.

Continue reading

முழுநிலவு

8 Apr

கட்டானமேனி கொண்ட

கன்னியவள் எனைப் பார்த்து

மொட்டாகச் சிரிக்கின்றாள்-

சிறுவிழிகள் தரை பார்க்க!

எட்டாத வானகத்தில்

என்னவளை எதிர்பார்த்து

சிட்டாகப் பறக்கின்றேன்…

முழுநிலவு படபடக்க!

(எழுதிய நாள்: 24.03.1994)
.

சிற்பி எனக்காக…

7 Apr

அலை அலையாய்ப் பரவுகிற
      .கூந்தல் இடை தழுவ,
மலை களுடன் போட்டியிடும்
      .மார்பகங்கள் குலுங்க,
கலைகள் பல காட்டுகிற
      .கண்கள் விளையாட,
சிலை நளினம் காட்டுகிறாள்
      .சிற்பி எனக்காக!

 

(28.09.2009ல் எழுதப்பட்டது)

நேசம்

6 Apr

உன் நலம் எனது என்ற

என் எண்ணத்துக்கும்

என் நலம் உனது என்ற

உன் எண்ணத்துக்கும்

நடைபெறும்

போராட்டம்.

(விஜயபாரதம் வார இதழில் வெளியானது; ஆண்டு நினைவில்லை)

அழைக்கின்ற மடல்கள்

6 Apr
செம்பஞ்சுக் கூழா, தெவிட்டாத தேனா?
மின்னுதடி ஈரம், மினுக்குதடி ஓரம்!
வரி வரியாய்நீட்சி, வனப்பான காட்சி;
சுழியுதடி வேகம், தோனுதடி தாகம்!
.
தித்திக்கும் கரும்பா, நானென்ன எறும்பா?
தீட்டாத படமா, திளைக்காத மனமா?
அழகான திரட்சி, அழைக்கின்ற புரட்சி,
அடடா என்னழகு, அசத்துதடா இதழு!
.
நாணத்தின் மேன்மை, இதழுக்குச் செம்மை,
நானென்ன பொம்மை, இதுவென்ன வெம்மை!
மலர்கிறது இனிமை, இடறிடுது இளமை, 
மணக்குதடி தாழம், மயங்குதடி ஆழம்!
.
செம்பஞ்சுக் கூழா, தெவிட்டாத தேனா? 
அழகான இதழ்கள்; அழைக்கின்ற மடல்கள்…..

Continue reading

%d bloggers like this: