Tag Archives: அனுபவம்

தனிமை வரம்

3 Jul

தனிமை ஒரு வரம்.
நினைவுகள் உடன் வரும் வரை
தனிமை என்பது தனிமை அல்ல.
நினைவுகள் உள்ள வரை
புனைவுகள் தொடரும்.
புனைவுகள் தொடரும் வரை
தனிமை என்பது தனிமை அல்ல. Continue reading

அன்றொரு நாள் அதே நிலவில்…

19 Jun

அன்று ஒரு கருப்பு நாளாக மாற வேண்டியது.
முழு நிலவின் கிரணங்கள் சாலையில்
பொன்போல ஒளிர்ந்த அந்தத் தருணத்தில்
என்னை இயக்கியது யார்?

அந்த நிகழ்வின் முந்தைய நிமிடம் வரை
என் கால்கள் தடம் மாறவில்லை.
பல்வேறு தர்க்கங்களை மீறி
மனம் தடுமாறும் நேரத்தில்
எதிரில் வந்த நண்பரால்
போன முறை தப்பித்ததுபோல
அந்த நாளில் யாரும்
ஆபத்பாந்தவனாக வரவில்லை.

யாரும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் இருந்தாலும்,
யாரேனும் இடைபுக மாட்டார்களா என்ற ஏக்கமும்
ஒரு மூலையில் கிடந்து தவித்தது.
அப்படித்தான் அந்த கிடங்குச் சந்தில் நுழைந்தேன்.
அந்தக் கடை முன்பு பெரும் கூட்டம்.
திரும்பிவிடலாம் என்ற எண்ணம் வந்ததும்
உள்மன அரக்கன் அதை வெல்லத் துடிப்பதும்
எனக்கே புரியாத கவிதை போலிருந்தது. Continue reading

பிரிவின் துயரம்

12 Jun

பிரிவின்போது தான் தெரிகிறது
பிரிவின் துயரம்.
பிரிவோம் என்று தெரிந்திருந்தால்
இணையாமலாவது இருந்திருக்கலாம்;
இணைக்கப் பட்டோம்-
பிரிக்கப் படுகிறோம்.

இணக்கமும் பிணக்கமும்
இணை பிரியாதவை.
இணைந்திருந்தபோது
இரண்டையும் கண்டோம்.
பிரிகிறோம்-
பிணக்கும் இல்லை; இணக்கமும் இல்லை;
இது தான் விதியின் சதி.

Continue reading

படுகுழி

6 Jun

தானே தனக்கு வெட்டும் குழிஎது ?
தம்பி நீதான் சொல்வாய்!
‘நானே செய்தேன்’ என்னும் அகந்தை
தானே படுகுழி அண்ணா!
.
வீணே பேசும் பேச்சென எதனை
விரைவில் சொல்லேன் தம்பி!
வீணர்களிடையே சொல்லும் எதுவும்
வீணே, அண்ணா வீணே!
.
சானே ஏறி முழம் சறுக்குவதை
சடுதியில் விளக்கேன் தம்பி!
ஊனை மதித்து உயிரை மிதித்து
உழலும் வாழ்வே அண்ணா!

 

1995
.

ஐந்தறிவு

4 Jun

எனக்கும்
அண்டை வீட்டுக்காரருக்கும்
சண்டை.
அவர் வீட்டு நாய்
என் வீட்டு வாசலிலேயே
காவல் இருக்கிறது.

 

2010

.

சிகிச்சை 

24 May

 

தலைவலி போக
மாத்திரையை மட்டுமல்லாது
வயிற்று வலியையும் வாங்கி,
வயிற்று நோவுக்காக 
வயிற்றை அறுத்து, 
இப்போது
தையலில் வலி.
அலோபதியின்
கடைக்கண் பார்வையை 
நினைக்குந்தோறும்
நரம்பில் ஊசி ஏறுகிறது.

விஜயபாரதம் (28.01.2000)
%d bloggers like this: