Tag Archives: எஸ்.குருமூர்த்தி

ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாத முகவர் தவ்ஹீத் ஜமாத்!

10 May

-எஸ்.குருமூர்த்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும், இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் சகோதர அமைப்புகள் மட்டுமல்ல, உலகளாவிய இஸ்லாமிய அரசு என்ற கனவுடன் இயங்கும் ஐஎஸ்எஸ் அமைப்பின் முகவர்களும் கூட.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சித்தாந்த ரீதியாக இலங்கை தவ்ஹீத் ஜமாத்துக்கு மூத்த அமைப்பாகவும் வழிகாட்டும் அமைப்பாகவும் செயல்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பயங்கரவாதத்தை விதைக்கும் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்துக்கு விசுவாசமானவையாகவும் இவை உள்ளன.

இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் தீட்டிய சதித் திட்டத்தை இந்திய உளவு அமைப்புகள் முன்கூட்டியே கணித்து எச்சரித்தன. அதேசமயம் இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் மீது மிகத் தாமதமாகவே நடவடிக்கை எடுத்தது. ஆயினும் இலங்கையில் நடைபெறவுள்ள பயங்கரத்தை முன்கூட்டியே எச்சரித்ததில் என்ஐஏவின் பங்கு அளப்பரியது.

இந்த சதித்திட்டத்தை என்ஐஏ எவ்வாறு கண்டறிந்தது?

Continue reading

இலங்கை படுகொலைக்கு தமிழகம் உடந்தையா?

10 May

-எஸ்.குருமூர்த்தி

இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 250}க்கும் மேற்பட்டோர் கொல்லப்ட்டனர்; 500}க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்த உதவியதற்காக பெருமிதம் கொள்வதாக ஐஎஸ்ஐஎஸ் (இராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) அமைப்பு பிரகடனம் செய்தது. அதாவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அந்தத் தாக்குதலை ஊக்குவித்தவர் மட்டுமே; அந்தத் தாக்குதலை நடத்தியவர் அல்ல. அப்படியானால் அந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர் யார்?

இந்தக் கேள்விக்கான பதில், இந்தியா, இலங்கை நாடுகளில் இருப்போர் அறியாததல்ல. இந்தப் படுகொலை நிகழ்வதற்கு முன்னதாகவே குற்றவாளிகள் குறித்து எச்சரித்த நாடு இந்தியா. இலங்கை அரசும் இந்தக் கொலை பாதகர்களை அறிந்தே இருந்தது. ஆனால் இந்தியாவின் எச்சரிக்கையை குப்பைக்கூடையில் போட்டது இலங்கை. அதேபோல இலங்கையில் குண்டுவெடிக்க உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்தியாவிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. உளவுத் தகவலைப் பெற்ற நாடும், அளித்த நாடும் இந்த விஷயத்தில் மந்தமாகவே நடந்துகொள்கின்றன.

இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே) என்ற அமைப்பின் தொண்டர்கள் மனித வெடிகுண்டுகளாக மாறவுள்ளதாக சிறப்பு உளவுத் தகவலை இந்திய அரசாங்கம் அளித்தது. இதுகுறித்து அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது இலங்கையில் நடந்த படுகொலைகளின் பின்னணியில் இருந்த சதியை இந்திய உளவுத் துறை கண்டறிந்ததை அசோசியேட் பிரஸ் சிலாகித்திருந்தது. தில்லியில் உள்ள ஐசிஎம் அமைப்பின் செயல் இயக்குநர் அஜய் சாஹ்னி “சதிகாரர்களின் உரையாடலை இடைமறித்து இந்திய உளவுத் துறை பெற்ற தகவல் மிகவும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் சதிக் குழுவை மட்டுமல்ல. அவர்களுடைய இலக்கு, தாக்கும் நேரம், சதிகாரர்கள் மறைந்திருந்த இடம் ஆகியவற்றையும் கண்டறிந்து, இலங்கை அரசை எச்சரித்தார்கள்’ என்கிறார். Continue reading

தொடரும் தேசபக்திக் குழப்பம்!

28 Feb

-எஸ்.குருமூர்த்தி


நாடு, தேசம், தேசியம், தேசபக்தி ஆகியவை தனித்தனி கருத்தாக்கங்கள் அல்ல. இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை தனியே பிரித்துப் பார்க்க முடியாது. ஓர் எல்லைக்கு உள்பட்ட நிலத்தின் மீதான அன்பு மட்டுமே தேசபக்தி அல்ல. அது நிலத்தின் எல்லை, அங்கு வாழும் மக்கள், அவர்களின் வரலாறு, வம்சாவளி ஆகியவற்றால் உருவாவதாகும்.

தேசத்துக்கு எல்லை மிகவும் அவசியம்; அதேசமயம், எல்லை மட்டுமே போதுமானதல்ல. மேலும் அனைத்து நாடுகளின் தேசியம் ஒன்றுபோல இருக்க வேண்டியதில்லை. இயல்பாக உருவான ஒரு நாட்டுக்கு, வரலாறு, சமூக மதிப்பீடுகள் தொடர்பான மக்களின் ஒருங்கிணைந்த உணர்வுகளே காரணமாக இருக்கும். இதற்கு இரு வேறுபட்ட தேசியவாத உதாரணங்களை நாம் காணலாம். அவை அமெரிக்க ஐக்கிய நாடுகளும், இஸ்ரேலும். Continue reading

குறை காண ஏதுமில்லை!

4 Feb

-எஸ்.குருமூர்த்தி

முந்தைய அரசின் ஊழல்கள், தள்ளாடும் நிலையில் கைவிடப்பட்டிருந்த பொருளாதாரம், வெளி வர்த்தகப் பற்றாக்குறை, கொள்கைக் குழப்பங்களால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. எனவே, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதல் மூன்று நிதிநிலை அறிக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் நோக்கம் கொண்டவையாக மட்டுமே இருந்தன. சென்ற நிதிநிலை அறிக்கை  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னணியில் அமைந்திருந்தது.

முந்தைய நிதிநிலை அறிக்கைகளைப் போலல்லாமல்,  முற்றிலும் தடைகளற்ற நிலையில் தற்போதைய 2018-19 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் அருண் ஜேட்லி. ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் சில பாதிப்புகள் இருந்தாலும்கூட, அரசுக்கு கணிசமான அளவில் தற்போது வருவாயும் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக அடைந்திருக்கும் வலுவான பொருளாதாரத்தின் அடிப்படையில் தான்,  இந்த 2018-19 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் சரிவு கண்டு மீண்டெழுந்த உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறைகளும், இயல்புநிலைக்குத் திரும்பிவிட்ட ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் (ஜி.டி.பி.) இந்த நிதிநிலை அறிக்கைக்கு வலு  சேர்த்திருக்கின்றன. Continue reading

மாபெரும் நெருக்கடிக்கு  ‘பண மதிப்பிழப்பு’ அளித்த தீர்வு

2 Oct

-எஸ்.குருமூர்த்தி

 

காண்க: பகுதி-1

‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கையின் பன்முகப் பரிமாணங்கள்

 

மோடி எதிர்ப்பே பிரதானமாகிவிட்ட தற்போதைய அரசியல் சூழலில்,  ‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கையின் பன்முகப் பரிமாணங்களைத் தவிர்க்கவும், மறைக்கவுமே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் நாட்டை மாபெரும் நெருக்கடியிலிருந்து  ‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கை காத்திருக்கிறது.

அது என்ன நெருக்கடி?

இந்தியா தப்பிய மாபெரும் நெருக்கடி என்ன என்பதை அறிய வேண்டுமானால், அண்மையில் அமெரிக்காவுக்கு நேரிட்ட நெருக்கடியை அறிய வேண்டும். 2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவில் போலித்தனமான சொத்து விலை உயர்வு காணப்பட்டது. அதன் விளைவு 2008-இல் தெரியவந்தது. அப்போது, அமெரிக்காவின் நிதிநிலை கடும் நெருக்கடிக்குள் சிக்கித் தவித்தது. அதற்கு உடனடித் தீர்வு காண வட்டிவிகிதங்கள் குறைக்கப்பட்டன; டாலர் நோட்டுகள் அச்சிடுவதும் நிறுத்தப்பட்டது. ஆயினும் இன்றுவரை அமெரிக்காவின் நிதிநிலை சீராகவில்லை. அந்த நிகழ்வுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். படியுங்கள் தொடர்ந்து… Continue reading

‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கையின் பன்முகப் பரிமாணங்கள்

2 Oct

-எஸ்.குருமூர்த்தி

சென்ற ஆண்டு மத்திய அரசு அறிவித்த உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையை (டிமானிடைசேஷன்) அடுத்து, ரூ. 500, ரூ. 1000 பெறுமானமுள்ள நோட்டுகளில் 99 சதவீதம் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. உடனே, மத்திய அரசின் நடவடிக்கையால் கருப்புப்பண ஒழிப்பு சாத்தியமாகவில்லை என்று கூறி, அதிபுத்திசாலிகள் பலரும், ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகிறார்கள். மத்திய அரசு நடவடிக்கை தோல்வியுற்றுவிட்டதாக அவர்கள் பிலாக்கணம் பாடுகிறார்கள். ஆனால், மத்திய அரசு நடவடிக்கை கருப்புப்பண ஒழிப்பை மட்டும் இலக்காகக் கொண்டது அல்ல என்பதையும், அது ஒரு பல்நோக்குத் திட்டம் என்பதையும் புரிந்துகொள்ளவே அவர்கள் மறுக்கிறார்கள்.

2016-ஆம் ஆண்டின் இறுதியில் “பண மதிப்பிழப்பு’ நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, அப்போதிருந்த உணர்ச்சிகர மனநிலையில் சிந்தனையற்ற அரசியல் சர்ச்சை நிலவியது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது சில ஊடகங்கள் மோடி அறிவித்த “பண மதிப்பிழப்பு’ நடவடிக்கை முழுத்தோல்வி என்று முடிவுரை எழுதியுள்ளன. இப்போதும்கூட, ‘பண மதிப்பிழப்பு’ குறித்த ஆழமான விவாதம் தவிர்க்கப்படுகிறது.

Continue reading

%d bloggers like this: