Tag Archives: கொரோனா

பரிதவிப்பு

6 Jul

கோயில் வாசலில்
வரிசையாய் அமர்ந்திருந்த
யாசகர்கள் எங்கே?

மலைக் கோயில் படிகளில்
திருவோட்டுடன் காத்திருந்த
காவிதாரிகள் எங்கே? Continue reading

அஞ்ஞானம்

17 Jun

 

கண்களை நம்பாதே
என்றது மெய்ஞானம்.
காணாததை நம்பாதே
என்றது விஞ்ஞானம்.
இரண்டையும் நம்பாதே
என்கிறது அஞ்ஞானம்.

கண்ணுக்குத் தெரியாத
நுண்கிருமி போல-
மெய்ஞானத்துக்குக்கும்
விஞ்ஞானத்துக்கும் இடையே
அறிவற்ற ஜனத்திரளின்
கசகசப்புடன்,
தனக்கே உரித்தான
எக்காளத்துடன்
ஊசலாடுகிறது அஞ்ஞானம்.

கைவிடப்பட்ட நகரம்…

15 Jun

 

முன்னொரு காலத்தில்
பாடிப் பறந்த பறவைகளின்
புகலிடம் அந்த நகரம்.
.
பாலில் திரண்ட வெண்ணெய் போல
எல்லாத் தரப்பிலும் உயர்ந்தவர்களின்
இருப்பிடம் அந்த நகரம்.
.
கல்வி, மருத்துவம், தொழில், அரசியல்…
அனைத்துத் துறைக்கும்
பீடளித்தது அந்த நகரம்.
.

Continue reading

பயணங்கள் முடிவதில்லை…

4 May

உலகம் முழுவதும் அச்சுறுறுத்திவரும் கொரோனா வைரஸ் கிருமியால் இன்று ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது- சிவன் முதுகில் விழுந்த பிரம்படி அனைவர் முதுகிலும் விழுந்தது போல.

இதன் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கில் தவிக்கிறது. இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. கொவிட்-19 என்னும் சீன வைரஸ் தாக்கத்தால் நுரையீரல்கள் செயலிழந்து உயிரை மாய்ப்பதைத் தடுக்கவோ, தக்க சிகிச்சை அளிக்கவோ சரியான மருந்துகள் ஏதும் இதுவரை கண்டறியப்படாததால், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதே சரியான தற்காப்பு நடவடிக்கை என்று உலக சுகாதார நிறுவனமே வலியுறுத்திவிட்டது.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கின் முதல் கட்டம் அறிவிக்கப்பட்டது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரையிலான அந்த முதல் கட்டத்தின் மொத்த நாட்கள்: 21. அடுத்து ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு, மே 3 வரை இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டது. தற்போது மூன்றாம் கட்டமாக மே 4 முதல் மே 17 வரை 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை அன்றைய சூழல் முடிவு செய்யும். Continue reading

விதி – 2

19 Apr

போக்குவரத்து விதியல்ல
மீறிவிட்டு தண்டனை பெற.
இது மீறவே முடியாத விதி.

சில சமயம் 
மீறிவிட்டதுபோல்
தோன்றும். 
ஆனால் அதுவும் விதி.

நேற்று
இன்று
நாளை என 
எப்பொழுது 
காலம் பிறந்ததோ 
அப்பொழுதே பிறந்துவிட்டது 
விதி.

விதியை மீற 
நினைப்பது கூட 
உனது விதி.

ஆனால்-
கவலைப்படத் தேவையில்லை. 
பாதையைப் பார்த்து நட 
நடப்பது நடந்தே தீரும்.
நடக்கட்டும்.
நீ நட. 

இது உன் விதி.

எழுதிய நாள்: 26.08.1989

விதி

18 Apr

விதியில் இரண்டு வகை:
நாமே வகுத்த விதி,
நம்மை வகுக்கும் விதி.

நம்மை நெறிப்படுத்த
நாமே வகுப்பது விதி
மதியால் வகுப்பது விதி
மனிதம் காப்பது விதி.

நாமே விதித்ததை
நாமே மீறினால்
நாமே குற்றவாளி.
விதியை மீறினால்
தண்டனை விதி.

விதியை மறந்தால்
மாறும் உன் விதி.
இதுவே நம்மை
வகுக்கும் விதி.

விதியை பிறகு
மதியால் வெல்லலாம்.
முதலில்
விதியை மதி.

 

.

%d bloggers like this: