Tag Archives: சமூகம்

அபத்தம்

6 Jun

மூக்கு முட்ட சாப்பிடும்
தொழிலாளர்நல ஆய்வாளர்.

ஏக்கத்துடன் இலைஎடுக்கும்
குழந்தைத் தொழிலாளி.

Advertisements

தூத்துக்குடியில் நடந்தது அறவழிப் போராட்டமா?

28 May

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டம் இறுதியில் துப்பாக்கிச்சூட்டுடன் 13 உயிர்களை பலி கொண்டுவிட்டது (மே 22, 23). இதற்கு காவல் துறையின் கவனமின்மையே காரணம் என்பதிலோ, தமிழக அரசின் செயலற்ற தன்மை காரணம் என்பதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது; எனக்கும் தான். இதை எனது முந்தைய பதிவில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனால், ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக நண்பர் திரு சுந்தரபாண்டியன் போன்ற சிலர் கருத்துத் தெரிவித்தனர். தவிர, இந்த விஷயத்தை பாஜகவுக்கு எதிராக கட்டமைக்க விரும்பும் திரு. ரவிகிருஷ்ணன், திரு. கோகுலகிருஷ்ணன். திரு. ரகுகுமார் போன்றோர் எனது விளக்கம் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாகக் குறை கூறினர்.

சகோதரர் திரு. இளங்கோ போன்ற இயக்கரீதியாக இயங்கும் நண்பர்கள் மிகவும் கோபத்துடன் எனது பதிவை அணுகினர். ’அவனவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் தெரியும்” என்பது போன்ற கருத்துகளையும் கண்டேன்.

துப்பாக்கிச் சூட்டால் 13 பேர் பலியான நிலையில், நடுநிலையாளர்கள் பலரும் முகநூலில் பொங்கினர். பாஜக ஆதரவாளர்கள் பலரும்கூட, பொதுக்கருத்தை உத்தேசித்து அமைதி காப்பது, அல்லது, தாங்களும் காவல் துறைக்கு எதிராகப் பொங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகையில், கூட்டத்தோடு கோவிந்தா போட்டிருக்கலாம் தான். ஆனால், என்னால், அவ்வாறு இருக்க முடியவில்லை.

ஏனெனில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் திசை கடந்த சில மாதங்களில் மாறி வருவதையும், அதன் கட்டுப்பாடு விஷமிகளிடம் சென்று சேர்வதையும் நான் கவனித்து வந்தேன். (இதுகுறித்து குமுதம் ரிப்போர்டரில் ஏற்கனவே செய்தி வெளியாகி இருந்தது நினைவிருக்கலாம்). எனவேதான், போராட்டம் திசை திரும்பிய கதையை முந்தைய பதிவில் எழுதினேன்.

அதிலுள்ள தகவல்கள் தவறானவை என்று நண்பர் சுந்தரபாண்டியன் சொன்னார். அவரவர் தரப்பை நியாயப்படுத்த ஒவ்வொருவரும் முயலும்போது, உண்மைகள் கசக்கவே செய்யும்.

இப்போது எனது முந்தைய பதிவுக்கு பின்னூட்டம் இட்டவர்களின் எதிர்வினைகளுக்கு முதலில் விளக்கம் அளிப்பது என் கடமை. தவிர, அப்போது, அடுத்த பதிவில் எனது நிலைப்பாட்டை விளக்கமாக எழுதுவதாக நான் குறிப்பிட்டிருந்தேன். இதோ அந்த விளக்கம்… Continue reading

ஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…

23 May


தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாளர்களின் கரங்களில் சிக்கியதால் திசைதிரும்பி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதனால், விலை மதிப்பற்ற 12 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது மிகவும் கவலைக்குரியது; கண்டனத்துக்குரியது.

ஆனால், இந்தப் போராட்டம் கடந்து வந்த பாதையைக் கவனித்தவர்களுக்கு, போராட்டத்தின் இறுதிக்கட்டம் இந்த நிலையைத்தான் அடையும் என்பதைக் கணிப்பதில் சிரமம் இருக்க முடியாது. ஏனெனில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், ஆரம்பத்தில் வெகுமக்கள் போராட்டமாக இருந்த களத்தை விஷமிகள் சிலர் சாதுரியமாக ஆக்கிரமித்ததன் பலனை சென்னை கடற்கரையில் நிகழ்ந்த கலவரத்தில் நாம் கண்டிருக்கிறோம். Continue reading

வேர்களின் தவம்

8 Mar

கண்ணுக்குத் தெரியாத இருப்பால்

மரத்தின் வேர்கள் மதிப்பிழந்து விடுவதில்லை.

பூமிக்குள் புதைந்திருப்பதால்

வேர்களுக்கு வருத்தமில்லை.

மண்ணுக்குள் மறைந்திருப்பதால்

மடிந்தும் போய்விடுவதில்லை.

உண்மையில்-

கம்பீரமான மரத்தின் இருப்பு

கண்ணுக்குத் தெரியாத

வேரில் இருக்கிறது. Continue reading