Tag Archives: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

குழம்பிய குட்டையும் அரசியல் நிர்பந்தங்களும்

26 Mar

-அருண் நேரு

(2012-இல் வெளியான மற்றொரு பழைய கட்டுரை… காலத்தின் பொருத்தப்பாட்டால் மறுபதிவு செய்யப்படுகிறது. அப்போதும் மக்களை ஊடக மேதாவிகள் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கான சான்றும் கூட).

கூட்டணி நாடகம் மீண்டும் அரங்கேறிவிட்டது. இதில் தவறொன்றும் கூற முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது கூட்டணியில் சகஜம்தான். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்த அபிலாஷைகள் இருக்கத்தான் செய்யும். அதை நிறைவேற்றவே அக்கட்சி போராடும். அதுபோல திரிணமூல் காங்கிரஸுக்கும் சமாஜ்வாதிக்கும் சொந்தத் திட்டங்கள் இருக்கும். இப்போது ஐ.மு.கூட்டணி- 2 ஆட்சியிலும் காங்கிரஸிலும் நிலவும் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் பொறுப்பு சோனியா காந்திக்குத்தான் இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயர் அடிபடுவதில் அதிசயமில்லை. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தமான அரசியல் களத்தில் இது இப்போது பேசும் பொருளாகி இருக்கிறது. எண்ணிக்கையை எட்ட பிராந்தியக் கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிராந்தியக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்தினால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இப்பிரச்னையிலிருந்து மீள முடியும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கு இது அறிவுப்பூர்வமான செயலாக இருக்காது. Continue reading

Advertisements

பிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரம்?

21 Mar

-அருண் நேரு

(2012-இல் வெளியான பழைய கட்டுரை… காலத்தின் பொருத்தப்பாட்டால் மறுபதிவு செய்யப்படுகிறது. அப்போதும் மக்களை ஊடக அறிஞர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதற்கான சான்றும் கூட.)

அருண் நேரு

கூட்டணிக் குழப்பங்கள், கொள்கைத் தடுமாற்றங்கள், கிரேக்கப் பொருளாதார நெருக்கடி, பிரிட்டனில் நிலவும் தொழில் மந்தநிலை போன்ற எதிர்மறையான நிகழ்வுகளிடையே நமது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

இந்த மோசமான நிலையிலும்கூட, நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நம்மால் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய முடிந்திருக்கிறது; விரைவில் அவர் தேர்ந்தெடுக்கப்படவும் இருக்கிறார்.

ஓர் அதிசயமான உண்மை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பதுதான். எந்த ஒருவரது தகுதியையும் வாய்ப்பையும் வழக்கமான சதிக் கோட்பாடுகள் குலைத்துவிடும். இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும், எதிர்க்கட்சிகளிடமும் நடுநிலையாகச் செயல்படுபவராகவும் ஒரு நிலையான சக்தியாக விளங்கி வந்திருக்கிறார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆரம்பத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தைப் பற்றி சரிவரப் புரிந்துகொள்ளாமல் தான் இருந்தார். எனினும் ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், சிவசேனா போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை சட்டென்று புரிந்துகொண்டார்.

சோனியா காந்தி சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். இப்போது பிரணாப் முகர்ஜியை அனைவரும் சேர்ந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால் நல்ல முன்னுதாரணமாக இருக்கும். அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அனைவரும் கவனம் செலுத்தலாம். Continue reading

தொடரும் தேசபக்திக் குழப்பம்!

28 Feb

-எஸ்.குருமூர்த்தி


நாடு, தேசம், தேசியம், தேசபக்தி ஆகியவை தனித்தனி கருத்தாக்கங்கள் அல்ல. இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை தனியே பிரித்துப் பார்க்க முடியாது. ஓர் எல்லைக்கு உள்பட்ட நிலத்தின் மீதான அன்பு மட்டுமே தேசபக்தி அல்ல. அது நிலத்தின் எல்லை, அங்கு வாழும் மக்கள், அவர்களின் வரலாறு, வம்சாவளி ஆகியவற்றால் உருவாவதாகும்.

தேசத்துக்கு எல்லை மிகவும் அவசியம்; அதேசமயம், எல்லை மட்டுமே போதுமானதல்ல. மேலும் அனைத்து நாடுகளின் தேசியம் ஒன்றுபோல இருக்க வேண்டியதில்லை. இயல்பாக உருவான ஒரு நாட்டுக்கு, வரலாறு, சமூக மதிப்பீடுகள் தொடர்பான மக்களின் ஒருங்கிணைந்த உணர்வுகளே காரணமாக இருக்கும். இதற்கு இரு வேறுபட்ட தேசியவாத உதாரணங்களை நாம் காணலாம். அவை அமெரிக்க ஐக்கிய நாடுகளும், இஸ்ரேலும். Continue reading

ஊழலை மேலும் வளர்க்கும் ஊழல்!

27 Feb

-கே.ஜெயகுமார்

கடந்த சில வாரங்களில் உலக அளவில் பிரபலமாக விளங்கிய ஆட்சியாளர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டால் வீழச்சி அடைந்துள்ளனர். வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அதிபர் ஜுமா ஊழல் புகாரால் பதவி விலகினார். முன்னதாக, ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ஊழல் புகார் காரணமாக பதவி விலக்கப்பட்டார். பிரேசில் அதிபர் தில்மாவும் முறையற்ற செயல்பாடுகளுக்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதேசமயம், நம் நாட்டில் நடந்த சில நிகழ்வுகளைக் கவனித்தால் பல உண்மைகள் புரியும். கடந்த கால இந்திய அரசியலில் பிரதானமானவராக வலம் வந்தவரான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழலில் கோடிகளைக் குவித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரான மது கோடாவும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பல சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள் ஊழல் வழக்கில் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

பதவியில் இருப்பவர்களை அரசியல் தவறாக வழிநடத்துவதால்தான் ஊழல் நிகழ்கிறது. சமுதாயத்துக்கு நன்மை செய்யவே தலைவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால், வளர்ச்சிப் பணிகள், பொதுநலன் என்ற பெயர்களில் தங்கள் சுயலாபம் ஒன்றையே கருத்தில் கொண்டு அவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இதன்மூலமாக, அரசின் அதிகாரம் அரசு நிதியை தவறாகக் கையாள்வதற்கும், சட்டவிரோதமான செயல்களுக்கான ஆதாரமாகவும் மாற்றப்பட்டு விடுகிறது. Continue reading